பூமண் நாடார் - திங்களூர் பூமணசாமி கோயில் தமிழ் செப்பேடு


பூமண் நாடார்🌞🏹 ◾️திங்களூர் பூமணசாமி கோயில் தமிழ் செப்பேட்டில், பெருந்துறையை திங்களூரில், அடுத்த பாண்டியர் காலத்தில் தமிழ் சங்கம் இருந்த விவரம் தெரிய வருகிறது என, ஈரோடு, கொங்கு ஆய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் புலவர் செ.ராசு தெரிவித்தார். ◾️இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ▪️ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா, திங்களூர் பூமணசாமி கோயில் நிர்வாகிகளிடம், தமிழ் செப்பேடு உள்ளது. அதை ஆய்வு செய்தால், திங்களூரை, 'சந்திரபுரி என கூறுவதுடன், அங்குள்ள கோயிலில் சிவனை 'சந்திரபுரீஸ்வரர்' என அழைத்தனர். சமண கோயில் (புஷ்பதந்த தீர்த்தங்கர்) கல்வெட்டு, 'சந்திரவசதி என்கிறது. 'சந்திரதுண்டம்' என்ற பெயரை, குருகுல காவியம் கூறுகிறது. இச்சந்திரன் பெயரால், 'திங்களூர்' என இவ்வூர் பெயர் பெற்றது. ◾️திங்களூரின் நான்கு திசை எல்லையை, தெற்கு தென்னரசு, மேற்கு முக்குக்கல், வடக்கு வடதுரத்தி, கிழக்கு ரத்தக்காளி என கூறுவதை செப்பேட்டில் குறிப்பிட்டுள்ளனர். திங்களூரின் அதிசயங்கள், முக்கிய இடங்களான ◾️ஈரோடு ஐந்தலை நாகம், ஆடவெண்சாரை, தவளைக்கல், சந்திரலிங்கம், சடைப்பனை, பூமநதி, ஐங்கரன், வீமன்கிணறு, வெண்டாமரைகுளம், ரணமுக பூதம், செந்தமிழ்சங்கம், காணாச்சுனை, கருநொச்சி, தெப்பவாவி, கோட்டை, உப்பரிகை, பன்னகசாலை என செப்பேடு விளக்குகிறது. ◾️வாகாசுரன் என்ற கொடிய அரக்கன், மக்களுக்கு தொல்லை கொடுத்தான். அவனை கொல்லும் முயற்சியில், பூமன் எனும் நாடார் சமூக வீரன், வீரமரணம் அடைந்தார். பூமன் நினைவாக நடுகல் நடப்பட்டது. பின்னர், நடுகல்லுக்கு கோயில் கட்டப்பட்டது. நாடார் சமூகத்தினர், பூமன் சாமிக்கு பூஜை செய்து வழிபடுகின்றனர். ◾️திங்களூரில் பாண்டியர் காலத்தில், தமிழ் சங்கம் இருந்த விவரம் செப்பேட்டில் தெரியவருகிறது. ◾️திங்களூர், அசோகிவனப் பாறையில் வேட்டுவர் காவிலியன் மேய்த்த பசு, பால் சொரிந்த அதிசயம் நடந்தது. இதுபற்றி அறிந்த, அதிவீரபாண்டியன் காளியம்மனுக்கு கோயில் கட்டி சிப்பந்திகளை நியமித்தார். சித்திர தேர் நடத்த ஏற்பாடு செய்து, 150 வள்ளக்காடு (600 ஏக்கர்) மானியம் விட்டு, அதில் கால் பங்கு காடு (150) பூமன் கோயிலுக்கு விடப்பட்டது. ◾️பூமணசாமி கோயில் தமிழ் செப்பேடு: ▪️பூமனின் பிற்கால சந்ததியினரான மற்றொரு பூமன், காளி, பழனி ஆகியோருக்கு திங்களூர் கோயில்களில் கார்த்திகை தீப விளக்கு ஏற்றும் உரிமை அளித்து, சிறப்பு மரியாதை செய்து, 30 வள பூமி (120 ஏக்கர்) மானியம் அளித்து, அவை என்றும் நிலைத்து நிற்க, இச்செப்பேடு எழுதி கொடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தென்காசி பாண்டிய அரச வம்சமானநாடார் சமுதாயத்தின்9 மற்றும் 10 திருநாள் மண்டகப்படி

தென்காசி பாண்டிய அரச வம்சமான நாடார் சமுதாயத்தின் 9 மற்றும் 10 திருநாள் மண்டகப்படி தென்காசி ஆண்ட சான்றோர் குல மாமன்னர் சடையவர்மன்...