கி.பி.1226 சோணாடு வழங்கியருளிய சுந்தரபாண்டியன் காலத்தைச்சேர்ந்த களவழி நாடாழ்வான் கல்வெட்டு



கி.பி.1226 சோணாடு வழங்கியருளிய சுந்தரபாண்டியன் காலத்தைச்சேர்ந்த களவழி நாடாழ்வான் கல்வெட்டு இடம் - மதுரை மாவட்டம்,மேலூர் வட்டம்,திருவாதவூருக்குக் கிழக்கில் 12 கி.மீ.தொலைவில் பனங்காடி என்ற ஊர் உள்ளது.அங்குள்ள வீற்றிருந்த பெருமாள் கோயில் தெற்குப்புற அதிட்டானம் / காலம் – கி.பி.1226 சோணாடு வழங்கியருளிய சுந்தரபாண்டியன், யா 10,/ செய்தி – தென்பறப்பு நாட்டு பிரமதேயம் இராசேந்திரசோழச் சதுர்வேதி மங்கலத்து நடுவில் திருமுற்றம் உத்தம சோழ விண்ணகர எம்பெருமாள் கோயில் பெருமாள் அமுது செய்தருளவும்,பரதேசிகளுக்குப் பிரசாதம் அளிக்கவும் இவ்வூர் பிடாகை தமோதரமங்கலத்தில் ஒரு மா நிலம் அளிக்கப்பட்டது.இவ்வூரைச்சார்ந்த திருவெள்ளறை காசிபன் பட்டன் உய்யவந்தான் சுந்தர பாண்டிய பிரமாதிராசன் இதனை அளித்துள்ளான்.இது குறித்த அரச ஆணையை களவழிநாடாழ்வான் ஓலையாக கோயில் நிர்வாகத்தினருக்கு அனுப்பியுள்ளதையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது./ 1.ஸ்வஸ்திஸ்ரீ களவழினாடாழ்வான் ஓலை தென்பறப்பு நாட்டு ப்ரஹ்மதேயம் ஸ்ரீஇராஜேந்திரசோழசதுர்வேதி மங்கலத்து நடுவிற்த் திருமுற்றம் உத்தமசோழ விண்ணகரெம் பெருமாள் கோயிலில் திருவடிப்[பி]...................................................... [நன்றி-ஆவணம்,இதழ் 7,1996-பக்-49]

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...