இராவ் பகதூர் த.இரத்தினசாமி நாடார்
By
Dr Thavasimuthu maran
தெரிந்து கொள்வோம்...[தொடரும்]
இராவ் பகதூர் த.இரத்தினசாமி நாடார்
[நாடார் மகாஜன சங்கத்தை உருவாக்கியவர்]
ஆறுமுகநேரி சீனந்தோப்பைப் பூர்வீகமாகக் கொண்ட வெ.தவசிமுத்து நாடாரின் புதல்வர் இவர். மாயவரத்திலிருந்து பொறையார் தரங்கம்பாடி வரை இரயில்வேப் பாதை அமைத்து ராஜஸ்தானி ,ஆந்திரா,கேரளா,மைசூர் வரை டிஸ்லரி தொழிலை அரசுக்கு இணையாக நடத்தி வந்தார்.இவருடைய சேவையையும் ஆற்றலையும் கண்ட வெள்ளையர் இவருக்கு ‘இராவ் பகதூர்’பட்டத்தை வழங்கிக் கெளரவித்தனர்.நாடார் சங்கங்களை ஒருங்கிணைத்து மகாஜனசங்கம் என்ற பெருமையுடன் 07.02.1910 இல்பொறையாரில் மாநில மாநாட்டைதமது சொந்தச் செலவில் நடத்தினார்.தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் சென்ற பிரதிநிதிகளுக்கு போக்குவரத்துச் செலவு முதல் உணவு தங்குமிடம் வரை ஏற்பாடு செய்தது பொறையார் குடும்பமே.முதல் நாடார் குல மாநாட்டை நடத்திப் பெருமை சேர்த்தவர்.ஆறுமுகனேரி சீனந்தோப்பு குடும்பத்தினரின் சேவையை நன்றியுடன் நினைத்து மகாஜனசங்கத்தின் நிரந்தரத்தலைவராக இவர்கள் குடும்பத்தினர்களே இருந்து வர அந்நாளில் சட்டம் இயற்றிய பெருமை மிகு பெரியவர்.இவர்களது நாடார் குடும்பத்தினர் முற்காலத்தில் வள்ளியூரைத் தலைநகராகக் கொண்டு முடிவைத்து ஆண்ட பாண்டியர்களாவர் என்பதற்கான கதைப்பாடல் உள்ளது.
-
சிவணைந்த பெருமாள் பெரும்பான்மையாக நாடார் சமூகத்திலும் சில மறவர் குடும்பங்...
-
நாடார் சமுதாயத்தின் தோற்றமும் குலதெய்வ வழிபாடும் ‘Ritual protected’ families In ‘Ritual protected’ families, on the other hand, ...
-
நாடார் தென்னாட்டில் சான்றோரே நாடார் என அழைக்கப்படுகின்றனர். நாடார் எனப்படுவோர் அனைவரும் ஒரே மூலத்தைச் சேர்ந்தவர்களோ,ஒரே இடத்தில் ஒரே மாத...
எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)
எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...
SEARCH
LATEST
3-latest-65px
Total Pageviews
திருக்குறள்
பதிவுகள் (Updated)
No comments:
Post a Comment