சான்றோர் காசு



சான்றோர் காசு நாடார் குல வரலாற்று நூல்களான வலங்கை மாலை,வெங்கலக்குன்று நாடான் கதை ஆகியன,இலங்கையில் சான்றோர் குல மக்கள் ஆட்சியாளராக இருந்ததை இயம்புகின்றன.ஏழு மாதர்களுடைய [சப்த கன்னியர்] புதல்வர்களும்,பத்திர காளி வளர்த்த ஏழு சான்றோர்கள் [எழுவர்] கிறிஸ்து பிறப்பதற்கு முற்பட்டக் காலத்தில் இலங்கைக்குச் சென்றுள்ளனர். இலங்கையில் அவர்கள் இறங்கிய இடம் ‘’மாதோட்டம்’’ என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.போர் செய்து இலங்கையில் தமிழரது ஆட்சியை முற்காலத்தில் நிறுவியது சான்றோரே. இலங்கையில் ‘’ஈள பரத’’ என்ற பெயர் குறிப்பு அநுராதபுரம், அபயகிரிப் பகுதியில் கிடைத்துளளக் கல்வெட்டில் காணப் படுகின்றது. ஈளவர் என்போர் சான்றோரில்[நாடார்] பனைமரத்தொழில் செய்துவந்தோரில் ஒரு பிரிவினராவர்.மாதோட்டம் அருகே பனங்காமம் என்ற இடம் உளளது. இலங்கை வந்து இறங்கிய எழுவரில் ஒருவன் ’‘பணய மாறன்’’ என்று இலங்கையில் உள்ள பாளி இலக்கியம் கூருவது நோக்கத்தக்கது. முனைவர் ப.புஷ்பரட்ணம் எழுதியுள்ள தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு ந்ன்ற நூலில் இலங்கையில் கிடைத்துள்ள பழங்காசுகள் பற்றிய தமது கருத்தினை முன் வைத்துள்ளார். [1] இலங்கை வீரபாண்டியன் முனையில் கிடைத்துள்ள 1.6 செ.மீ-1.3செ.மீ அளவும் 2.3 கிராம் எடையும் உள்ள செப்புக்காசின் முன்புறம் நோக்கி நிற்கும் காளை முகத்திற்கு கீழே பூரண கும்பம் போன்ற பொருள் உள்ளது. [2] பூநகரி பகுதியில் கிடைத்துள்ள 4செ.மீ விட்டமும் 4 கிராம் நிறையும் உள்ள செப்புக் காசில் வலப்புறம் நிற்கும் மனிதன் இருகைகளும் உயர்த்தப்பட்ட நிலையில்,வலது கை ஏதோ ஒரு பொருளைத் தாங்கியவாறு நிற்கிறது.இட்து புறத்தில் பூரண கும்பம் போன்ற பொருள். என்று முனைவர் பா.புஷ்பரட்ணம் கூறியுள்ளார். மேற்கண்ட 1,2 காசுகளில் கூறப்பட்ட பூரண கும்பம் போன்ற பொருள் ‘’துரோண கலசம்’’ எனப்படும் கள் குடம் ஆகும்.இலங்கையில் சான்றோராட்சிக் காலத்தில் வெளீயிடப்பெற்ற இக்காசில் கள் குடம் இடம் பெற்றது. இதனை சான்றோர் காசு எனக் கருத இயலும்.

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...