காந்தீயவாதி சுதந்திரப்போராட்டவீரர் தியாகி நாட்டுக்காக தனது சொத்துக்களையும் தொழிலையும் தியாகம் செய்த தாலுகாவின் தந்தை த.தங்கவேல் நாடார் -------------------------------------------------------------------- இரா.தவசிமுத்து நாடாரின் மகனான தியாகி த.தங்கவேல் நாடார் 1903 இல் பிறந்தார். ஆறுமுகநேரி இந்து நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்புவரை பயின்ற இவர் இளமையில் கொழும்பில் இருந்த போது தென்னற்தோட்டத்தில் பணிபுரிந்த “வாடி“ எனப்பட்ட தொழிலாளர்களுக்காகத் தொழிற்சங்கம் அமைத்து தலைவரானார். ஆந்திரா ,சென்னை போன்ற பெரு நகரங்களில் வணிகம் செய்தார். பின்பு பிறந்த ஊருக்குத் திரும்பி வந்து நகை செய்துவிற்கும் ”காசுக் கடை” நடத்தி வந்தார். அந்நேரம் 1941-42 நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக்கப்பட்டார்.சுதந்திரப் போராட்டக் காலத்தில் மணம் ஆகி குழந்தைகளுடன் இருந்தவர். பிற போராட்ட வீரர்களனைவரும் இவரைவிட மிக வயது குறைந்தவர்களாக இருந்தனர். எனவே சுதந்திரப்போரட்டக் காலத்தில் வீரர்களுக்கு ஆலோசனை கூறுபவராகவும் பொருளுதவி செய்பவராகவும் இருந்தார். குலசை லோன் துரை தாக்குதலின் போது இராஜகோபாலன் வைத்திருந்த ரிவால்வர் இவர் வீட்டிலிருந்து பரிசோதித்து கொண்டு செல்லப்பட்டதாகும். சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டதால் 3 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.நாடு விடுதலை ஆனவுடன் விடுதலை செய்யப்பட்டார்.உப்புச்சத்தியாகிரகம்,மெஞ்ஞானபுரம் தபாலாபீசைத் தீவைத்துக்கொழுத்திய வழக்கு ஆகியவற்றில் பாதுகாப்புக்கைதியாக திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம்,கொக்கிரக்குளம்,சிறைகளிலும்,தஞ்சாவூர் கேம்ப் ஜெயில் மற்றும் வேலூர் சிறையிலும் தண்டணை அனுபவித்தார் அவ்வமயம் பெருந்தலைவர் காமராஜரோடு முதல்வகுப்பு சிறைவாசமிருந்தார்..ஆறுமுகநேரியின் வளர்ச்சிகாக அனைத்துப் பணிகளிலும் தலைவர்களோடு தலைவராக இருந்து செயல்பட்டார். சுதந்திரப் போராட்டத்தால் தன்னுடைய வசதியான வாழ்க்கை, தொழில், ஆகியவற்றை இழந்தவர். தாலுகாவில் முதலாவதாக அனைத்து கிராமங்களுக்கும் சென்று காங்கிரஸ் கட்சியை அமைத்துத் தொண்டாற்றியதால் ”தாலுகாவின் தந்தை” என்றும் சுருக்கமாக ”தானாத்தானா” என்றும் அனைவராலும் அன்புடன் அழைக்கப்ட்டார். ஆத்தூர் சோமநாதசுவாமி கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டார். 17.10.1983 இல் காலமானார் இவர் வகித்த பொதுநலப் பொறுப்புகளுள் சில- தலைவர் கிராம காங்கிரஸ் தலைவர் தாலுகா காங்கிரஸ் தலைவர் தாலுகா விவசாயிகள் சங்கம் தலைவர் தாலுகா மகாந்மா நூற்பு யக்ங சங்கம் தலைவர் தாலுகா பூமிதான இயக்கம் முதல் தலைவர் காங்கிரஸ் தொழிற்சங்கம் டிசிடபுள்யூ தலைவர் தாலுகா சுதந்திரப் போராட்டத் தியாகிகள் சங்கம் தலைவர் தாலுகா அரிசன சேவாச் சங்கம் செயலாளர் கா.ஆ.மேல்நிலைப்பள்ளி-ஆறுமுகநேரி, அரசு மகளிர் மேல்நிலைபள்ளி,அரசு மருத்துவமனை உருவாகப் பாடுபட்டவர்.இவர் தென்காசி ஆண்ட ஸ்ரீவல்லபமாற நாடான் குடும்பத்தைச்சேர்ந்தவர்.இவர்கள் குடும்பத்திற்கென்று ஸ்ரீவல்லபமாறன் மற்றும் உடையார் கதைப்பாடல் சுவடிகள் உள்ளன.
காந்தீயவாதி சுதந்திரப்போராட்டவீரர் தியாகி நாட்டுக்காக தனது சொத்துக்களையும் தொழிலையும் தியாகம் செய்த தாலுகாவின் தந்தை த.தங்கவேல் நாடார்
By
Dr Thavasimuthu maran
PHOTOS-LEADERS
-
சிவணைந்த பெருமாள் பெரும்பான்மையாக நாடார் சமூகத்திலும் சில மறவர் குடும்பங்...
-
நாடார் சமுதாயத்தின் தோற்றமும் குலதெய்வ வழிபாடும் ‘Ritual protected’ families In ‘Ritual protected’ families, on the other hand, ...
-
நாடார் தென்னாட்டில் சான்றோரே நாடார் என அழைக்கப்படுகின்றனர். நாடார் எனப்படுவோர் அனைவரும் ஒரே மூலத்தைச் சேர்ந்தவர்களோ,ஒரே இடத்தில் ஒரே மாத...
எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)
எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...
SEARCH
LATEST
3-latest-65px
Total Pageviews
திருக்குறள்
பதிவுகள் (Updated)
No comments:
Post a Comment