பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் சான்றோர்-நாடார்
பதினெண் கீழ்க்கணக்கு இலக்கியங்களில் சான்றோர்-நாடன் தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களான சேர சோழ பாண்டியர் மூவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள்.தொல்பழங்காலச்சிறப்பு வாய்ந்த துறைமுகப் பட்டினமான கொற்கையில் இம்மூவரும் வாழ்ந்து வந்தனர். அரசாட்சியின் சிறப்புக் கருதி மூவரும் தனித்தனியேப் பிரிந்து ஆட்சி செய்யக் கருதி பிரிந்தனர்.பாண்டியன் கொற்கையிலும்,சோழன் தஞ்சையிலும், சேரன் நாஞ்சில் பகுதியிலும் ஆட்சி செய்து வரலாயினர்.பாண்டியன் சந்திர குலத்திற்குரியவனாகவும் சோழன் சூரியகுலத்திற்குரியவனாகவும் சேரன் அக்கினி குலத்திற்குரியவனாகவும் போற்றப்பட்டனர். குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை எனும் ஐவகை நிலங்களுக்கு உரியவர்களாக இருந்து தமிழை வளர்த்தனர்.தமிழர் பண்பாடு மற்றும் நாகரீகமும் அயல்நாடுகளில் போற்றப்படும் விதத்தில் ஏற்றுமதி. இறக்குமதி வணிகத்தையும் வளர்த்தனர்.அந்நாளில் இருந்த நான்கு வகை வருணத்தாரான அரசன்,அந்தணர்,வணிகர்,வேளாளர் மற்றும் பிற தொழில் செய்த பிரிவினரும் மூவேந்தர் குலத்தின் வகைக்குள் அடங்குவர். குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை ஆகிய ஐவகை நிலத்தில் பனை,தென்னை,ஈச்சை மரங்கள் செழித்தோங்கியன.இம்மரத்தொழில் புரிந்தோர்கள் சான்றோர் குலப் பிரிவிலிருந்தவர்களாவர்.விவசாயம் கண்டறியுமுன்னே இத்தகைய மரத்தின் பயனைத் தமிழன் அறிந்திருந்தான். எவ்வாறு தமிழ் தொன்மை வாய்ந்த்தோ அது முதல் சான்றோரின மக்களும் தமிழோடு வாழ்ந்தனர். இச்சேர சோழ பாண்டிய அரசர்கள் சான்றோர் வழித்தோன்றலாவர். ஊரெங்கும் கோயில்கள்,கோபுரங்கள்,தெப்பக்குளங்கள், தேரையும்; தேரோடும் வீதிகளையும்,அகரங்களையும்,மங்கலங்களையும் அமைத்து கல்வெட்டுக்களையும் செப்பேடுகளையும் கண்டவர்கள் சான்றோரே. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் வழி சான்றோர் என்ற குலத்தினர் அந்நாளில் வாழ்ந்தனரென்ற தகவல்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. அக்காலத்தில் அறிவுடையோர் சான்றோர் என்று கூறுவது சிறப்புக் கருதியாகும். அதேநேரம் உயர்ந்த கல்வி உடையவர்கள் மட்டுமின்றி யுத்தம் செய்யும் வீரமரபினரும் சான்றோரென்று அழைக்கப்பட்டனர். வீரம்,கல்வி,ஒழுக்கம்,உழைப்பு இவைகளெல்லாம் ஒருங்கே அமையப் பெற்றவர்களாக இருக்க வேண்டியது சான்றோரது பண்புகளாகும் என்பது தெளிவாகின்றது.அரசகுலச் சான்றோராகிய சேரசோழபாண்டியர் நாடாண்டமையால் நாடன்,நாடான்,நாடார்,நாடாழ்வார்,நாடாக்கமார் என்றும் அழைக்கப்பெற்றனர். சங்ககாலம் முதல் தமிழ்நாட்டை சேர,சோழ,பாண்டியர்களாகிய சான்றோர்குலத்தினர் ஆட்சிசெய்தனர்.சான்றோர் குலத்தவர்கள் நாடாண்ட முடியுடைய மூவேந்தர்களாவர். தனிச்சிறப்புடன் வாழ்ந்த தமிழனனான சான்றோன் தனிச்சிறப்புடன் வாழ்ந்தான்.போர்க்குடி பரம்பரையிலான சான்றோருக்கு ஆட்சிமுறை புதிதல்ல,அஞ்சாமை,ஈகை,அறிவு,ஊக்கம் என்பவைகளோடு நற்பண்புகளுடன் விளங்கினர்.எழுத்தறிவுடன் கூடுதலாக அரசனுக்கு வேண்டிய யுத்தப் படைக்கலப் பயிற்சி,யானையேற்றம்,விற்போர்,வாட்போர்,மல்யுத்தம் முதலியப் பயிற்சிகளிலும் சான்றோர் தலை சிறந்து விளங்கினார்.சான்றோர் சாதியினர் கல்வி அறிவு,ஒழுக்கம் இவற்றால் நற்குடியாக;உயர்ந்த குடியாக சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் விளங்கினர்.திருவள்ளுவர் சான்றோர் குலத்தவருக்கு இருக்க வேண்டிய நல்லொழுக்கங்களை தம்முடைய திருக்குறளில் கூறியுள்ளார். கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும் மான்வயிற்றில் ஒள்அரி தாரம் பிறக்கும் பெரும்கடலுள் பல்விளை முத்தம் பிறக்கும் அறிவார் யார் நல்ஆள் பிறக்கும் குடி -நான்மணிக்கடிகை-4 குடிப்பிறப்பு என்பது பண்பால் அமைவதே தவிர,பிறப்பால் அமைவது அன்று நான்மணிக்கடிகை கூறுகிறது.சான்றோர் என்ற உயர்ந்த சொல்லாட்சி, நன்னெறி கொண்ட குழுவினர் சங்க காலம் முதல் அழைக்கப்பெற்றனர் என்பது தெளிவாகும். சங்க காலத்தில் குலம் இல்லை என்று கூறுவாரது கருத்து,ஏற்புடையது அல்ல என்று கூறி குலங்கள் பல இருந்தன என்பதற்கு ஆதாரங்களையும் பல குடிகளைச் சேர்ந்தவர்கள் பற்றிய குறிப்பையும் தொடர்ந்து பதிவு செய்திட உள்ளேன். குலம் இருந்ததா............ பழந்தமிழரின் வாழ்வு முறைகளைப் பாடல்கள் மூலம்நமக்கு அறியத் தந்தவர்கள் நமது முன்னோர்களாகிய புலவர் பெருமக்கள்.தங்களைப்பற்றியும் தங்களைச் சார்ந்தவர்கள் பற்றியும் கவலைப்பட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு நன்னெறிகளைப் பற்றிக் கூறுமிடத்து, குலம் உண்டு என்பதற்குச் சான்றாக ஏலாதி கூறும் கருத்து வலுமிக்கதாக உள்ளது.குலம் என்ற சொல்லாட்சியும்,குடி என்ற சொல்லாட்சியும் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ‘உரையான், குலன், குடிமை, ஊனம் பிறரை உரையான் பொருளொடு வாழ்வு ஆயு –உரையானாய் பூஆதி வண்டு தேர்ந்து உண்குழலாய் ஈத்து உண்பான் தேவாதி தேவனாத் தேறு. -ஏலாதி;32 மேலும் திருக்குறள்,நாலடியார்,பழமொழி,புறநானூறு,வெற்றிவேற்கை,குமரேச சதகம் உள்ளிட்ட பல நூல்களில் பதிவாகியுள்ள சொலாட்சிகள் குலங்கள் இருந்தன என்பதை உறுதிப்படுத்துகின்றன. ’அன்பு உடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்து அவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு -குறள்;681 ’குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து -குறள்;957 சலம் பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்துமென் பார் -குறள்;956 ’....நிலநலத்தால் நந்திய நெல்லே போல் தம்தம் குலநலத்தால் ஆகுவர் சான்றோர் ’ -நாலடியார்;179 [தொடரும்-3] ’குலவித்தை கல்லாமல் பாகம் படும்’ -பழமொழி,6 ‘முனின்னார் ஆயினும் மூடும் இடர் வ்ந்தால் பின் இன்னார் ஆகப்பிரியார் ஒருகுடியார் பொன்னாச்செயினும் புகாஅர் புனலூர் துன்னியார் அல்லார் பிறர்’ -பழமொழி,352 புற்நானூற்றில் 122 ஆம் பாடலில் மலையமான் திருமுடிக்காரி தன் வன்மையிற் சலியாதிருத்தலைக் கண்ட கபிலர் போற்றிப்பாடுகின்றபோது’ மூவேந்தருள் ஒருவர் உன்னைத் துணையாக வேண்டி நிற்பது குறித்து, ‘’மூவருளொருவன் றுப்பாகியரென ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி’’ என்று அரசனுடைய குலம் பற்றி ‘’குடி’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது நோக்கத்தக்கது. ஏணிச்சேரி முடமோசியார் வேளாய் அண்டிரனைப் பாடுமிடத்து 133 ஆவதுப் பாடலில், ‘’தென்றிசையா ஆய்குடி யின்றாயிற் பிறழ்வது மன்னோவிம் மலர்த்தலையுலகே’’ என்று ஆய்குடிப் பற்றிக் கூறுவது சிறப்பாகும். ’’இன்மை தீர்க்குங் குடிப்பிறந்தோயே’’ -புறநானூறு;164 ‘’மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை தனந் தவமுயற்சி தாளான்மை -தேனில் கசிவந்த சொல்லியற்மேற் காமுறுதல் பத்தும் பசிவந் திடப் பறந்து போம் -நல்வழி;26 ‘’குடிப்பிறப்பழிக்கும் விழுப்பங் கொல்லும்’’ –மணிமேகலை;11;76 புற்நானூற்றிலே மாங்குடி மருதனார் தான் கண்ட நான்கு குடிகள் பற்றி ‘’துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இந்நான் கல்லது குடியும் இல்லை’’ -புறம்;335 இப்பாடல் அடிகள் வாயிலாக பல்வேறு குலங்கள் இருந்த்தையும் அவற்றுள் பல்வேறு பிரிவுகளிருந்தன என்பதையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல அறிந்து கொள்ளலாம். குடி,குலம் என்று வழங்கப் பெற்ற சாதிகள் பற்றிய குறிப்புகளைக் காண்போம்......www.nadar historical centre [தொடரும்-1]சங்க காலத்தில் காணப்பெற்ற சாதிகள் அந்தணர் = சங்க காலத்தில் அந்தணர் ,பார்ப்பார் உயர்வாக மதிக்கப்பட்டனர்.புலவர்களாகவும்,சோதிடர்களாகவும்,தூதுவர்களாகவும்,நடுவர்களாகவும்,கோயில்பூசாரிகளாகவும் விளங்கினர் ‘’அழல் புறந் தரூஉ அந்தணரதுவே’’ –புறநானூறு;122 ‘’அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியார் நின்றது மன்னவன் கோல் ‘’-திருக்குறள்;543 இப்பாடல் மூலம் அரசனுடைய செங்கோலானது,அந்தணருடைய வேத்த்திற்கும்,அது கூறும் வேதத்திற்கும் உறுதுணையாய் நின்றது என்கின்றார்,மேலும், அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்’’-திருக்குறள்;30 அந்தணர்கள் துறவறத்தில் நிற்போர் எல்லா உயிர்களிட்த்தும் சிறந்து வாழ்வதே அவர்களுடைய நோக்கமாகும் என்று கூறியுள்ளார். அந்தணர்களுடைய குலம் இன்று நம்மிடையே உள்ளது.பல்வேறு பெயர்களில் அய்யர்,பிராமனர்,வேதியர் என அழைக்கப்படுகின்றனர். இன்னாநாற்பது அந்தணர்,பார்ப்பார் பற்றி, ‘’அந்தணர் இல்லிருந்து ஊண் இன்னா’’ ‘’பார்ப்பார் இல் கோழியும்’’ என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தியுள்ளது நோக்கத்தக்கது. உழவர் = மருதநில மக்கள் உழவர் ஆவர்.சங்க காலத்தில் உழவர் குடி போற்றப்படுகின்றது.வேளாண்மை நாட்டின் இருகண்கள் என்பதை அக்கால மக்கள் உணர்ந்திருந்தனர்.உழவர் குடி பழந்தமிழர் குடியாகும். மழையின் சிறப்பை உவகைப் பொங்கக் கூறுகின்றார் திருவள்ளுவர். ‘’ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும் வாரி வளங்குன்றிக் கால்’’ – திருக்குறள்;14 மழை பெய்யாவிட்டால் உழவர் ஏரால் உழுதல் என்ற பணியைச் செய்யமாட்டார்கள் என்று கூறுகின்றார். உழவுத்த்கொழில் செய்த உழவரை வில்லுக்கும்,சொல்லுக்கும் பொருத்தி பகைத்திறம் தெரிதல் என்ற அதிகாரத்தில், ‘’வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை’ –திருக்குறள்;878 என்று பாடியுள்ளார். ‘’உழுவார் உலகத்தாற்கு ஆணிஅது ஆற்றது எழுவாரை எல்லாம் பொறுத்து’’ –திருக்குறள்;1032 உலகின் அச்சாணி உழவர்களே என்றார்.மேலும்,உழவரிலாவிடில் உண்ணும் உணவில்லை என்பதை, ’’உழவினார் கைம்மடங்கில் இல்லை விழைவதூஉம் விட்டேம் என்பார்க்கு நிலை’’-திருக்குறள்;1036 என்று உரைத்துள்ளார். உழவர் குலத்தவர் இன்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.வேளாண்மை செய்தமையினால் வேளாளர் என்ற பெயர் வழக்கும் நாட்டிலே காணப்பெறுகிறது. வணிகர் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்பது வணிகமாகும்.தமிழகத்தின் சிறப்புகள் அயல் நாட்டில் கல்வெட்டுகளாகவும்,காசுகலாகவும் பிற ஆவணங்களாக்க் கிடைப்பதற்கான அடிப்படை வணீகமே.ஏற்றுமதி ,இறக்குமதி செய்வோர் பொருட்களையும் தம் பொருள் போலக் கருதி, காத்து கண்ணியத்துடன் நடந்து கொண்டனர்.ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினர். ‘’வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தம்போற் செயின்’’. திருக்குறள் ; 120 பரதவர் கடலையும் கடல் சார்ந்தப் பகுதிலும் வாழ்பவர் பரதவர் எனப்பட்டனர்.மீன் பிடித்தலையும்,உப்பு விளைவித்தலும் இவர்களது தொழிலாகும்.இவர்களது குடியிருப்பு பாக்கம் எனப்பட்டது.மேலும் இவர்கள் வலைஞர் என்றும் அழைக்கப்பட்டதை, ‘’எரிப்பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர்’’ புறநானூறு ; 249 மள்ளர் சங்க காலத்தில் சான்றோர், அறவோர் என்றழைக்கப்பெற்றனர். ‘’அறவர் அறவன் மறவர் மறவன் மள்ளர் மள்ளன் ‘’ புறநானூறு ;399 இவ்வடியில் மறவர்,மள்ளர் இவற்றுடன் முதலாவதாக அறவர் என்று வைக்கப்பட்டோர் சான்றோராவர்.
No comments:
Post a Comment