செந்தில்சித்தர் கேந்திரம் நிறுவனரும் ஜோதிட அரசு மாத இதழ் ஆசிரியருமான செந்திலடிமை டாக்டர் தினகரன் காலமானார்




செந்தில் சித்தர் கேந்திரத்தின் நிறுவனரும்,ஜோதிட அரசு மாத இதழ் ஆசிரியருமான டாக்டர் செந்திலடிமை தினகரன் 13.4.13 சனிக்கிழமை கார்த்திகை நட்சத்திரத்தில் திருச்செந்தூர் முருகன் பாதத்தில் ஐக்கியமானார்.அவரது இறுதிச்சடங்கு 14.4.13 ஞாயிறு காலை ஆறுமுகநேரியில் நடைபெற்றது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிருந்தும் இவரது பக்தர்கள்,நண்பர்கள் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.ஆறுமுகநேரி தியாகி த.தங்கவேல் நாடாரின் புதல்வரான இவர் ஜோதிட உலகில் தனக்கென்று தனி இடத்தை அமைத்துக் கொண்டு அனைத்து மக்களும் பயனடையும் விதத்தில் தொண்டாற்றியவர். ஆன்மீகத்தில் நடமாடும் சித்தராக உலவி வந்த இவர்.சங்கரன்கோயில் பாம்பாட்டிச் சித்தரான சிவப்பிரபாகரசாமி மற்றும் சித்தராஜன் சுவாமிகளின் சீடராவார்.இந்தியா மற்றும் அயல்நாடுகளில் ஜோதிடம் ஆன்மீகம் இவற்றிலான எண்ணற்ற சொற்பொழிவுகளையும், கருத்தரங்கங்களையும் நடத்தியவர்.திருச்செந்தூரில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவின்போது அன்னதானங்களை நடத்தி வந்தவர்.


1 comment:

  1. அன்னாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    சித்தயோகி சிவதாசன்ரவி

    ReplyDelete

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...