குட நாடு-குடநாடான்-நாடார்
நாடு
சேந்தன் திவாகரம்
நிகண்டில் மக்களின் பெயர் பற்றிய குறிப்பில்,21 ஆம் பாடலில் சேரமன்னனுடையப் பெயர்கள்
குறிப்பிடப்படுகின்றன.
’’பூமியதினுள் கொங்கன் பொறையன்
வானவன் குட்டுவன்
வானவரம்பன்
வில்லவன் குடநாடான்
வஞ்சி வேந்தன்
கொல்லிச் சிலம்பன்
கோதைக் கேரளன்
போந்தைக்கண்ணிக் கோன்
பொருநைத் துறைவன்
சேரவன் மலயமான்
கோச்சேரன் பெயரே’’
இப்பாடலில் சேரனுக்கு
குடநாடான் என்னும் பெயர் குறிப்பிடப்பெற்றுள்ளது.
குடநாடான்=குடம்+நாடான்.
குடம் என்பது அமுது
கும்பமாகிய குடுவைக்கும், பனைவெல்லம் என்ற கருப்புக்கட்டிக்கும் பொருளாகும்..மேலும்
நிகண்டு,’’குடநகர் பகர்வோர்
கூத்துக்கும்பமே கரும்பின் கட்டி’’என்றும் கூறுகின்றது.கும்பம்
என்றால் அமுது கும்பம் என்னும் குடுவை ஆகும்.துரோணகலசம் எனப்படும் கள்குடம் என்றும்
பொருள் தரும்.
குடம் என்ற சொல்லிற்கு குடு என்பது வேர்ச்சொல்லாகும்.குடுவையுடையது குடம்.குடு
என்றால் பனையமுது என்று சதுரகராதி இயம்புகிறது.என்வே குடம் என்பது பனையமுதை
வைக்கும் பாத்திரம் ஆகும்.
அ. சேரன் –சேரா,சேறு –பனையமுது=சதுரகராதி
ஆ. கொங்கன் –கொங்கு –பனையமுது=சதுரகராதி
இ. குட்டுவன் –குடு –பனையமுது =சதுரகராதி
ஈ. கேரளன் – கேரம் –தென்னைமரம்=சதுரகராதி
சேரம்,கேரம் என்ற சொற்களுக்கு பின்வருமாறு பொருள் அரசால் தரப்பெற்றுள்ளது.
‘The
name Chera like Pandya means in ancient Tamil Palm Juice’
‘In Malayalam ‘’Keralam’’means the Coconut Palm’’
சேர மன்னன் பனம் பூவை மாலையாக அணிந்தான்.இதனை
’போந்தின் கண்ணிக்கோன்’’என்று சேந்தன் திவாகரம்
கூறுகின்றது.
இவ்வாறு சான்றோர்கள் அரசாண்டகாலத்தில் சேரன் என்றும்,குடநாடான் என்றும்
அழைக்கப்பெற்றனர்.தென்பாண்டிநாடு குடநாட்டுக்கொற்கை என்று அழைக்கப் பெறுகின்றது.
No comments:
Post a Comment