ஒரு கல்வெட்டு என்றாலோ அல்லது செப்பேடு
என்றாலோ அந்நாள் அரசர்களை ஏற்றிப் பாடுவதுண்டு.இதில் அக்காலத்தில் ஆட்சியிலிருந்த
விஜயநகர மன்னர்களைப் பற்றியோ அல்லது நாயக்க மன்னர்களைப் பற்றியோ, ஆட்சியிலிருந்த
நவாப் முகம்மது அலியைப் பற்றியோப் போற்றிப் பாடவில்லை.பாளையக்காரரான ஜெகவீரபாண்டின்
உள்ளிட்டவர்களைப் பற்றியோ தஞ்சை மராட்டியனைப் பற்றியோ. இராமநாதபுரம் சேதுபதிகளைப் பற்றியோ
கூறாது தங்களுடைய முன்னோரான சேர சோழ பாண்டியர்களை நினைவு கூறும் விதத்தில்’’சேர சோழ பாண்டியர்
பூமியில் பாண்டிய மண்டலத்தில்’’ எனக் குறிப்பிட்டுள்ளது
நோக்கத்தக்கது.அந்நாளில்
கம்பள நாயக்கரின் ஆதிக்கமே சிவகாசியில் இருந்தது.அப்படியிருந்தும் தாங்கள் திருவாவடுதுறை
ஆதீனத்திற்கு வழங்கியச் செப்பேட்டில் தாங்கள் சத்திரியகுல நாடார்கள் சேர சோழ
பாண்டிய வழித்தோன்றல்கள் என்பதை பதிவு செய்துள்ளனர். திருவாவடுதுறை ஆதீனம்
திருச்செந்தூர் கோயிலின் மேலக்கோபுரத்தைக் கட்டும்போது,அந்நாளில்
பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராயிருந்த ஜெகவீரபாண்டிய கட்டபொம்மு
நாயக்கன்,ஏழிசை முத்துசாமி ஆண்டு கொண்டார்,சாத்தூர்டி,எரபாப்பநாயக்கர்,ஏழூர்
தட்டப்பாறை நாட்டார்கள், ஆறுமுகநேரி வேளாளர்கள் மற்றும் பலருடன் சிவகாசி
நாடார்களூம் இணைந்து தலைக்கட்டுக்கு அரைப்பணம் என்று ஊர் மக்கள் அனைவரிடமும் மகமை வரி
வசூலித்துக் கொடுத்தனர்.அதற்கான ஆவணம் தான் இச்செப்பேடு.
இச்செப்பேட்டில் ’’நாடாக்களனைவரும் பலப்பட்டடையுட்பட
’’என்ற சொல்லாட்சியும் ‘’சிவகாசியிலிருக்கும்
நாடாக்களனைவரும் பலப்பட்டடையுள்ளிட்டோரும்’’என்ற சொல்லாட்சியும் 18 ஆம்
நூற்றாண்டின் பிற்பகுதியில் நாடார்களுக்கு வழங்கப்பட்ட உயர்வு,சிறப்பு புலப்படும்.
பிற சாதியினர் பலபட்டடைகள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.பட்டயம் வழங்கப்பட்ட இடம்
வேளாளர்களின் ஆன்மீகபீடம் திருவாவடுதுறை ஆகும்,அந்நாள் சுற்றிலும் பாளையக்காரர்களின்
காலம்.இப்பட்டயம் மூலம் நாடார்கள் சத்திரியகுலச்சான்றோர் என்பது அறியலாகிறது.
மேலும் திருச்செந்தூர் கோயிலின் கோபுரத்தில் 5 ஆம் நிலையில் தேக்குமர உத்திரத்தில்
‘’பிள்ளைக்குளம்
சிவனணைந்த
நாடான் 30 பணம் தன்மம்’’ என்று
செதுக்கப்பட்டுள்ளது.அக்காலத்தில் திருப்பணியில் ஈடுபட்ட ஜெகவீரபாண்டிய கட்டபொம்மு
மற்றும் பல ஆதிக்க சக்தியினர் இருப்பினும் நாடானின் பெயர் மட்டுமே
பொறிக்கப்பட்டுள்ளது சிந்தனைக்குறியது.கோயிலைக்கட்டியவனுக்குக் கோயிலினுள் சென்று வழிபடும் உரிமை இருந்தது
என்பதற்குச் சான்று. திருச்செந்தூர்கோயிலின் மேலக்கோபுரவாசல் ‘’நாடான்’’ வாசல் ஆகும்.காயாமொழி ஆதித்த நாடான்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு
தேர் செய்தும் திருப்பணிகள் செய்தும் வந்துள்ளனர்.மூலப்புளி
நாடான்கள், நட்டாத்தி நாடான்களும் திருப்பணிகள்
பல செய்துள்ளனர்.
நன்றி-திருவாவடுதுறை ஆதீனச்செப்பேடுகள்-தொல்லியல் ஆராய்ச்சியாளர் ச.கிருஷ்ணமூர்த்தி
No comments:
Post a Comment