துபாயில் பெருந்தலைவர் காமராஜரின் 111 வது பிறந்தநாள் விழா




துபாய் நாடார் சங்கத்தின் சார்பாக 15/07/2013 அன்று பெருந்தலைவர் காமராஜரின் 111வது பிறந்தநாள் விழா துபாய் கரமா Dosa Plaza வில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.செயலாளர் ராமமூர்த்தி அவர்கள் வரவேற்புரையாற்றினார், தொழிலதிபர் பெருமாள் நாடார் அவர்கள் காமராஜரின் பெருமைகளை எடுத்துரையாற்றினார் ,பின்பு காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் துணைசெயலாளர் சபரிராஜன் ,பொருளாளர் சரவணன் ,துணைபொருளாளர் அதிசயம் ,மிக்கேல் ரீகன் ,அஜய்நாடார்,கண்ணன்,கற்குவேல்ராஜன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் குடும்பத்தோடு கலந்துகொண்டனர் .அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது .விழா முடிவில் தலைவர் செந்தில்குமார் அவர்கள் நன்றியுரையாற்றினார் பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை துணைத்தலைவர் மதகை பிரபுநாடார் அவர்கள் செய்திருந்தார்

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...