இடம் - காமராஜர் மாவட்டம்,மதுரை அருப்புக்கோட்டை சாலையில் உள்ள ஆவியூர் ஊரில் உள்ள இராசேந்திரசோழீஸ்வரம் என்னும் சிவன் கோயில் வடக்குச்சுவர்
காலம் -
இரண்டாம் மாறன் சுந்தரபாண்டியன் கி.பி-1250
1.ஸ்வஸ்திஸ்ரீ கோமாறபன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள்
2.ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவருக்கு யாண்டு 11வதின் எதிர் ஆவது
3.வயலூர் நாட்டு ஆவியூர் உடையார் இராசேந்திர சோளீசுவரமுடையாற்க்கு
4.யினாயனாற்
[சூரி]யன் பொதியனான செயதுங்க நாடாள்வான் எ
5.ழுந்தருளீவித்த திருக்காமக்கோட்ட நாச்சியாற்கு அழகனருளாளாப்பெருமாள்
6.சோழ கங்[க]தேவர் மேலைக்குளத்தில் நம்முழவான நி
7.ல....[இறைஅ]யிலி தேவதாநமாக நீர் வார்த்துக் குடுத்ததில
8.....ண்டினால் நிலம்...இந்நிலம் இரண்டு மாகாணியும் இவன் மக்கள் மக்
9.கள் காராண்மையாயுழுது இவனெழுந்தருளுவித்த திருக்காமக்கோட்ட நாச்சி
10.யாற்கு பளப்பேறு சிற்றா[யமுங்]குடுப்பானாகவும் கோடைபோகம்
11.அஞ்சிலொன்று...ம் இமேல்வாரமுங் கொண்டு அமுதுபடி
12.திருப்பணீக்குடலாக...திரு...கல்லிலு
13.ம் செம்பிலும் வெட்டி...குமரனான சோ
14.ழங்கதேவன் எழுத்து
சூரியன் பொதியனான செயிங்க நாடாள்வான் எ
15.ழுந்தருளுவித்த திருக்காமக்கோட்ட நாச்சியாற்கு சடையநேரியில் ஆவியூரார் குடுத்த நிலம்...மாகாணியு மிக்குடி
16.பக்கல் செயிங்க நாடாள்வான் விலைகொண்டு திருசூலக்கல் நாட்டிக்கொடுத்த நிலம்...நீர் வாத்துக் குடுத்த நிலம்...யார்க்கு
17.குடுத்த நிலம்...ஆக நிலம்...நிலம் நாலுமாவரையும் எப்பேற்பட்ட இறையிலி[யாய்]...அமுதுபடிக்கும் குடுப்பத[ர்க்கு]
18.டலாக குடுத்தமைக்கு அழகனருளாளப் பெருமாள் சொழகங்கதேவன் எழுத்து இவை இராச நாராயணப் பிரமாதராயன் எ
19.ழுத்து இவை சங்கராயன் எழுத்து இவை இந்நிலங்கள்
செயிங்கநாடாள்வான் மக்கள் காராண்மையாய் உழுது ப[ள்]
20.ப் பேறு ஏற்றிய[நீ]க்கி மேல் வாரங் குடுப்போமாகவும் கோடைப்போகம் அஞ்சில் ஒன்று குடுப்போமாகவும்
21.இப்படி இந்நிலங்களுமி....டுத்....
Thanks-Avanam-4.,p.31,32.
(h)
ReplyDeletefine