பெருமை மிகு தலைவர் காமராஜர் சொத்து தேனாம்பேட்டை காங்கிரஸ் திடல்


பெருமை மிகு தலைவர் காமராஜர் சொத்து தேனாம்பேட்டை காங்கிரஸ் திடல்
---------------------------------------------------------------------------------------------------------------
காமராஜர் கொடுத்து வைத்திருந்தத பணத்தை விட கூடுதல் பணத்தை இந்து பத்திரிக்கை கஸ்தூரி ரங்கன் அவர்களே போட்டு நிலத்தை பேசிமுடித்தார். பத்திரபதிவுக்கு பெருந்தலைவரை அழைத்தார். யார் பெயரில் என்று கேட்கிறார். உங்கள் பெயரில்தான் என்ற பதிலை கேட்டு காமராஜர் ‘எனக்கு எதற்கு காசு பணம், சொத்து எல்லாம். நானா சம்பாதிச்சேன். மக்கள் கொடுத்த காசு. என் பெயரில் வேண்டாம் என்கிறார். எவ்வளவு கூறியும் கேட்கவில்லை. கடைசியில் காமராஜர் சொன்னபடியே கட்சியின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

அந்த இடம்தான் இன்று அண்ணா சாலையில் உள்ள ‘தேனாம்பேட்டை காங்கிரஸ் கட்சி மைதானமும், பெரிய காமராஜர் அரங்கமும்‘. கோடி கோடியான மதிப்பில் சொத்து. யார் யாரோ, எப்படியெல்லாமோ அனுபவிக்கிறார்கள். அந்த பெருந்தலைவர் இறந்த போது கூட அவர் வாங்கிய இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை. கிண்டியில் பொது இடத்தில், பொது சொத்தாகவே அடக்கம் செய்யப்பட்டார்.
Babujee Nadar
Vice President-Kamarajar Samuga Neethi Peravai

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...