மதுரையின் பெருமை குலசேகரபாண்டிய நாடானின் திருப்பணி



மதுரையின் பெருமை தமிழுக்குப் பெருமை குலசேகரபாண்டியனின் திருப்பணி மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது.கொற்கை துறைமுகத்துணைத் தலைநகரமாகவும்,மதுரை தலைமைத் தலை நகரமாகவும் விளங்கிற்று.கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி தென்பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் குலசேகர பாண்டிய நாடான் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் . இக்கோயில் அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகப் போற்றப்படுகின்றது. தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி.மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களைத் தாமரை இதழ்களாகக் கூறலாம்.மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதிகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். பின்பு வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கான சிறப்பான ஒரு காரணம் உள்ளது. குலசேகர பாண்டியன் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெற்ற விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.தற்போதும் இந்நிகழ்வே நடைபெறுகின்றது

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...