- இயற்கை வளம் செழித்திருக்கும் பொதிகை மலையின் உச்சியில் பிறந்து அது செல்லும் இடமெல்லாம் வளம் செழிக்க செய்யும் கௌதம ஆற்றின் அரவணைப்பில் உள்ள பல கிராமங்களில் ஒன்றான களக்காடு சிதம்பராபுரத்தில் ஒரு விவசாய குடும்பத்தின் தலைவர் ஆத்திமுத்து நாடார் - மல்லிகா தம்பதியருக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் டாக்டர்.சுபாஷ் சந்திர போஸ். தன் ஊரில் உயர்நிலைக்கல்வி வரை பயின்ற அவர் தன் அக்காளின் உணவு விடுதியில் மேலாண்மைக்காக 1989 -ம் ஆண்டு மும்பைக்கு வந்தார். மும்பையின் குட்டி தமிழகமான தாராவில் இயங்கி வந்த அந்த உணவகத்தில் தன் பணிகளை செவ்வனே செய்தார். பணி நேரம் போக மீதமுள்ள நேரத்தினை பயனுள்ளதாக செலவிட எண்ணினார். அக்கால கட்டத்தில் மக்களின் மனதில் மலிந்து கிடந்த மூடநம்பிக்கைகளை அகற்றவேண்டும் என எண்ணி அது சார்ந்த துறையான ஜோதிடவியலை தேர்வுசெய்து மேற்படிப்புக்கு ஆயுத்தமானர். பகல் நேரத்தில் உணவு விடுதியில் பணி, இரவு நேரத்தில் படிப்பு என 1998 - 2000 வரை நாட்கள் உருண்டோடின.
டோம்பிவிலியில் தனியாக வாடகைக்கு உணவு விடுதி ஒன்றை ஆரம்பித்தார். இருப்பினும் தன் எண்ணிய எண்ணம் ஈடேறும் வரை ஓய்வதில்லை என தொடர்ந்து படித்து ஜோதிட விஷ்ரத், ஜோதிட ரத்னா , ஜோதிட வசஷ்பதி, ஜோதிட சக்ரவர்த்தி , ஜோதிட மகரிஷி உள்ளிட்ட பல பட்டங்களை பெற்றார். சுமார் 30,000 க்கு மேல் ஜாதகங்களை ஆய்வு செய்து ஜாதகத்தில் உள்ள நிறைகுறைகளை யோகா மூலம் தீர்ப்பது பற்றி ஆய்வு செய்து இன்டெர் அமெரிக்கன் யுனிவெர்சிடியில்(USA PS.D.) சிறப்பு டாக்டர் பட்டம் பெற்றார். அருள்நிதி, பிரம்மஞானி போன்ற பட்டங்களை யோகா துறையில் பெற்றார். பொது மக்களிடத்தில் ஜோதிடத்தில் பரவி கிடந்த மூடநம்பிக்கைகளை மருத்துவரீதியாக தீர்வுகள் சொல்வது என தன் திறமைகளை வளர்த்துகொண்டார். இவரிடம் பலரும் வந்து பயனடைந்து சென்றனர்.
இவரது ஜோதிட திறமையை பாராட்டி அமரர் பிஎச்பி யுனிவர்சல் ரிசர்ச் அகாடமி, பார்த்தசாரதி உலகளாவிய கலாச்சார கழகத்தால் ஜோதிடக்கலைக்கான செவாலியர் விருது -2011 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி வழங்கப்பட்டது. மக்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிப்பது மற்றும் அறியாமையிலிருந்து விடுபட வழி செய்வது சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவற்றை தன் வாழ் நாள் இலட்சியமாக கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாது அமைதி இன்றி வாழும் மனிதனால் தன் உலக அமைதி கெடுகிறது. எனவே மனித மனதை அமைதியாக வைத்துக்கொண்டால் தான் உலகம் அமைதியாக இருக்கும். பயங்கரவாதம், கலவரம் குறையும் எனவே மக்கள் அனைவரும் தங்கள் மனதினை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் அமைதியாக வாழலாம். இது யோகா மூலம் மட்டுமே சாத்தியம் எனவேதான் மக்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கிறேன். மேலும் அனைத்து மக்களும் யோகா செய்வதை வழக்கமாக கொண்டால் அவர்கள் மட்டுமின்றி இந்த உலகும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகயும் இருக்கும் என்கிறார்
செவாலியர்.சர். சுபாஷ் சந்திர போஸ். M.A.,(astro)M.A,(p & r), M.S.(p& c) B.com, D.N.S, Ph.D
செவாலியர்.சர். சுபாஷ் சந்திர போஸ். M.A.,(astro)M.A,(p & r), M.S.(p& c) B.com, D.N.S, Ph.D
By
Dr Thavasimuthu maran
knowthis
-
சிவணைந்த பெருமாள் பெரும்பான்மையாக நாடார் சமூகத்திலும் சில மறவர் குடும்பங்...
-
VILLAVAR The Villavar were rulers of the Chera Chola Pandyan kingdoms. Villavar aristocracy was called Nadalvar. Villavar-Bana r...
-
சான்றோர் பாண்டியர் இது ஒரு குலத்தின் அடையாளமா,அல்லது ஒரு பகுதியைச் சேர்ந்தவர்களின் அடையாளமா அல்லது தென் பாண்டி நாட்டை ஆட்சி செய்தவ...
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...
SEARCH
LATEST
3-latest-65px
Total Pageviews
திருக்குறள்
பதிவுகள் (Updated)

No comments:
Post a Comment