சேர்மன் அருணாசல சுவாமி [SERMAN ARUNACHALAM SWAMIGAL-ERAL]



ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி
சேர்மன் அருணாசல சுவாமிகள்,தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடி என்ற சிற்றூரில் சான்றோர் குல நாடாண்ட நாடார் மரபில்  ராமசாமி நாடார்,சிவனனைந்த அம்மையாருக்கும்  2-10-1880 இல் அவதரித்தார். இளம் வயதில் அனைத்துக் கலைகளையும் கற்ற சுவாமிகள்,தாமிரபரணி என்றும் தண் பொருணை என்றும் அழைக்கப்பெறும் ஆற்றங்கரை நாகரீகத்தில் தலை சிறந்து விளங்கிய ஏரல் என்ற ஊருக்கு வந்து மவுன விரதம் இருந்து பக்தி யோகத்தைக் கடைப்பிடித்தார். அவரைக்காண வந்த பொதுமக்களுக்கும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆறுதல் கூறி , அவர்களது பிரச்னைகளை தீர்த்து வந்தார். இவரது நீதியையும், நேர்மையையும், திறமையையும் கண்ட அக்கால ஆங்கில ஆட்சியாளர்கள், இவரை ஏரல் பேரூராட்சியின் சேர்மனாக பதவி ஏற்கும்படி வேண்டினார்கள்.  5 -09-1906 இல் சேர்மனாக பதவி ஏற்றார்.  27-07-1908 வரை சேர்மனாகப் பணியாற்றிய அவர் "சேர்மன் அருணாசலம்' என்ற பெயரைப் பெற்றார்.தனது 28வயது வரையிலும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு நாள் இவர் தனது சகோதரர் கருத்தப் பாண்டியனை அழைத்து அவருக்கு நல்லாசி கூறி, "" தம்பி! நான்  28-07-1908 ஆடி அமாவாசை பகல் 12 மணிக்கு இறைவன் திருவடி சேருவேன். ஏரலுக்கு தென்மேற்கில் தாமிர பரணி ஆற்றின் வடகரை ஓரமாக நிற்கும் ஆலமரத்தின் அருகில் என்னை சமாதியில் வையுங்கள். அப்போது மேலே கருடன் வட்டமிடும்,'' என்று கூறினார். அதன்படியே அவர் இறைவனை அடைந்தார்.  அன்று முதல் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமிகள் தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து அருளாசி வழங்கி வருகிறார்.  மன நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் இங்கு வந்து தங்கி குணமடைந்து செல்கிறார்கள். பிரசாதமாக கோயில் திருமண்ணும் தண்ணீரும் தருகிறார்கள்.மனிதனாகப்பிறந்து தன்னுடைய தவ வலிமையால் தெய்வமான அருட் தெய்வம் சேர்மன் சுவாமிகளின் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டால் நோய்கள் தீரும்

1 comment:

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...