பி.எஸ். சிதம்பர நாடார்


பி.எஸ். சிதம்பர நாடார்

  பி.எஸ். சிதம்பர நாடார் அவர்கள்" விருதுநகர் பெண்களின் கல்வி தந்தை "என்று அழைக்கப்படுகிறார்.தன் வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தை எல்லாம் விருதுநகர் கல்வி நிலையங்களுக்கு  அள்ளிக் கொடுத்த வள்ளல் அவர்.1885 ஆம் ஆண்டு திரு. சிவனாண்டி நாடார் -பெரியாயி அம்மையாருக்கு மகனாக பிறந்தார்.தன் 5 வது வயதில் தந்தையை இழந்து கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தார். மும்பையில் வேலை செய்து அதில் தொழில் தொடங்கி சிறப்பாக முன்னேறி கல்வியின் மேல் தனக்கிருந்த எல்லையில்லா ஆசையினால் கல்வி நிலையங்களில் தன் பெயரைக் கல்வி சேவையின் மூலம் பொன் எழுத்துக்களால் பதித்தார்.

    1921 முதல் 1934 வரை விருதுநகர் சத்திரிய பெண்கள் பள்ளியை நிர்வாகம் செய்தார்.மாணவிகளுக்கு கல்வியை ஊக்கத்துடன் கற்க பாடு பட்டார்.இவரது காலம் விருதுநகர் கல்விக்கு" பொற்க்காலம்"என்று அழைக்கப் பட்டது.பள்ளி வளர்ச்சி நலனில் அக்கறை கொண்ட அன்னார் தன் சொத்துகள் பெரும் பகுதியை பள்ளிக்கு அளித்தார். பள்ளி குறைவில்லாமல் நன்கு நடை பெற "சென்னையில் உள்ள விருதுநகர் ஹிந்து நாடார் மேன்சன் " என்ற கட்டிடத்தை பள்ளிக்கு வழங்கி அதன் மூலம் கிடக்கும் வருமானத்தைக் கொண்டு பள்ளி சீராக நடை பெறசெய்தார்.
ஆண்கள் மேற்கல்வி பெற ஆண்கள் கல்லூரியை உருவாக்கினார். நம் மக்கள் கல்வி அறிவு மட்டுமல்லாமல் பொது அறிவு பெற பல நூலகங்களை ஏற்படுத்தினார்.பெண்களுக்கான பிரசவ விடுதியை ஏற்ப்படுதினார்"ராவ் சாஹிப் " என்ற பட்டம் பெற்றார்.

1975 ஆம் ஆண்டு இவரது கல்வி சேவையின் நினைவாக .விருதுநகரில் இவரது பெயரைக் கொண்டு "பி.எஸ். சிதம்பர நாடார் சீனியர் ஆங்கிலப் பள்ளி என்ற சி.பி.ஸ்.சி.பள்ளி ஆரம்பிக்கப் பட்டது.இன்று அப்பள்ளி தமிழ் நாட்டில் எங்கும் காண முடியாத அளவிற்கு உலக தரத்துடன் சிறப்பாக இயங்கி வருகிறது !

விருதை பெண்கல்விக்கு வித்திட்டு
உரமூட்டி உயிரூட்டிய உத்தமரே !!!
கல்விபணிக்கு கர்ணனாய் வழங்கியவரே!!!
காலந்தவறாமை கடமையென்ற இரண்டையும்
கண்ணெனக் கொண்ட காவலரே!!!
மண்ணுலகு உள்ளளவும் மங்காது
மணம் வீசும் மன்னா உம் புகழ் !!!
மகிழ்வோடு பணிகிறோம் உம் பாதம் !!!
மணம் மகிழ்ந்து வாழ்த்துகின்றோம் உம் நாமம்

கல்விக்கு வித்திடுபவர்கள் நாடார்கள் என்பதை நிருபித்து காட்டியவர்களில் திரு.பி.எஸ். சிதம்பர நாடாரும் ஒருவர்

No comments:

Post a Comment

திருமுருகன் பூண்டி சான்றோர்குலச் செப்புப் பட்டயங்கள்.!

திருமுருகன் பூண்டி சான்றோர்குலச் செப்புப் பட்டயங்கள்.! நூல் ஆக்கம்: கொங்கு ஆய்வாளர் புலவர் செ.ராசு கவுண்...