மகான் ஸ்ரீ மாரியப்ப சுவாமி தேசிகர்
(நாடார் சாமி) வரலாறு :
(நாடார் சாமி) வரலாறு :
சுமார் 180 வருடங்களுக்கு முன் தோன்றிய மகான் ஸ்ரீ மாரியப்ப சுவாமி தேசிகர் அவர்களின் வரலாறும், அவருடைய மகிமைகளைப் பற்றியும் இங்கு காணலாம்.
நம் தமிழகத்தில் விருதுநகரில் 19ம் நூற்றாண்டில் பிறந்து 20ம் நூற்றாண்டில் மறைந்த நாக்குட்டிச்சாமியார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட ஸ்ரீ மாரியப்ப சுவாமி தேசிகர் அவர்கள் 1908ம் ஆண்டு கீலக வருடம் பங்குனி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் ஜீவ சமாதி அடைந்தார்.

வரலாறு :
விருதுநகர் பாவாலியர் வகையைச் சேர்ந்த வன்னிய நாடார் அவர்களுக்கு ஒரே மகனாகப் பிறந்தவர் தான் ஸ்ரீ மாரியப்ப சுவாமி தேசிகர், அவர் இல்லற ஞானியாக திகழ்ந்தவர். அவர் தன்னை நாக்குட்டியாகவும், சிவபெருமானை முதலாளியாகவும் அடிக்கடிச் சொல்வது வழக்கம். அதனால் தான் ஊர்மக்கள் யாவரும் அவரை நாக்குட்டி சாமியார் என்றே அழைத்தனர்.
தினந்தோறும் காலை, மதியம், மாலை மூன்று வேளைகளிலும், நிஷ்டையில் இருந்து சிவபெருமானை தரிசிப்பாராம். சுவாமிகள் நிஷ்டைகள் முடிந்தவுடன் தனது வலது உள்ளங்கையில் கற்பூரம் ஏற்ற சொல்லுவாராம். ஒரு சாண் உயரத்திற்கு தீபம் எரியும் போது அப்படியே வாயில் போட்டு சாப்பிட்டுவிடுவது சுவாமிகளின் வழக்கம்.
ஒருமுறை, சுவாமிகளின் இரண்டாவது மகன் பழனியப்ப நாடார், சுவாமியிடம் வந்து சிவகாசியில் நடக்கப் போகும் கொள்ளையை பார்க்கப் போகிறேன் என்று கேட்டிருக்கிறார். அதற்கு சுவாமிகள் நீ சிவகாசி பக்கம் போக வேண்டாம். முதலில் உனக்கு குடும்ப பொறுப்பை கொடுக்கும் படி முதலாளியிடம் இருந்து உத்தரவு கிடைத்திருக்கிறது என கூறி சிவகாசி போவதை நிறுத்தி விட்டார்.
அதன் பிறகு பெண் பார்க்கும்படி உறவினர்களிடம் கூறிட, வந்த ஜாதங்களில் இருந்து ஒரு ஜாதகத்தை மட்டும் எடுத்து அந்த பெண்ணையே பழனியப்பனுக்கு மணமுடிக்கும் படி கூறி இருக்கிறார். வருங்காலம் ஆலவிருட்சம் போல பெருகி நன்மை அடைவார்கள் என்றும், இதுவும் முதலாளி உத்தரவு தான் என்று சொல்லி இருக்கிறார்.
அதன் படி பழனியப்ப நாடார் அவர்கள் விருதுநகர் தெப்பம் மேற்கு பஜாரில் வரிசையாக 5 கடைகள் (மளிகைக் கடை, எண்ணெய் கடை, பெட்டி கடை, ஷாப் சாமான் கடை, நவதானிய கடை) வைத்து நட்த்தி வந்திருக்கிறார்கள். இதில் சுவாமிகள் அமர ஒரு கடையை ஒதுக்கி இடவசதி அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். தினந்தோறும் சுவாமிகளிடம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வந்து விபூதி வாங்கிப் போவார்கள். விபூதி பூசியும், வாயில் போட்டும் தண்ணீர் குடித்தால் எந்த வியாதியாக இருந்தாலும் உடனே குணமாகி விடுவது ஊரில் மிகவும் பிரசித்தம்.
சுவாமிகளைப் பற்றி எங்கள் அய்யாப்பா பழனியப்ப நாடார் கூறுகையில், சுவாமிகள் மிகவும் எளிமையான காவி உடையையே எப்போதும் விரும்பி அணிவாராம். சுவாமிகள் அநேகமாக மரத்திலான காலணிகளை பயன் படுத்தினாலும், பெரும்பாலும் காலணி இல்லாமலே நடந்தே வெகு தூரங்களுக்குச் செல்வாராம்.
உயரமானவரும், சற்றே மெலிந்த தேகம் கொண்ட அவர், தீபாவளி அன்று மட்டும் புதிய ஆடைகளை சிறிது நேரம் உடுத்தி, விருதுநகர் வெயிலுகாத்தம்மன் கோவிலின் வடகிழக்கு சுவருக்கு வெளியில் உள்ள விநாயகரை வழிபட்டு பின் மீண்டும் பழைய ஆடையையே அணிவாராம்.
ஒரு நாள் நந்தவனத்தில் குளித்துக் கொண்டிருந்த சுவாமிகள் அருகில் குளித்துக் கொண்டிருந்த தனக்கு மிகவும் நெருங்கியவரிடம், எனக்கு இன்றிலிருந்து பதினைந்தாவது நாள் முதலாளியிடம் (சிவபெருமானிடம்) வரச் சொல்லி முதலாளியே உத்தரவு கொடுத்திருக்கிறார். ஆகையால் எனது மகன் பழனியப்பனிடம் சொல்லி எனக்கு ஒரு இடம் வாங்கி சமாதி கட்டச் சொல்லு. இது முதலாளி உத்தரவு. இதை நீ சொல்லாமல் போனால் உனக்கு முதலாளி குற்றம் (தெய்வ குற்றம்) உண்டாகும் எனச் சொல்லி விட்டுச் சென்று விட்டார்.
அதுபோல சரியாக 15வது நாள், மதிய உணவினை உண்டு நிஷ்டையில் இருந்த படியே முதலாளியிடம் சென்று விட்டார் சுவாமிகள். அதன் பின்பு சுவாமிக்கு கால் கட்டு, விரல் கட்டு போட்டு சுவரில் சாய்ந்தபடி மாலை போட்டு அமர வைத்திருக்கிறார்கள். சுவாமிக்கு சமாதி கட்ட வேண்டும் என்று பேசியவுடன், கூட்டத்தில் இருந்த மூதாட்டி ஒருவர் சமாதி வைக்க வேண்டுமென்றால் நிஷ்டையில் இருப்பது போல் அல்லவா அவர் காட்சியளிக்க வேண்டும் என்று சந்தேகத்துடன் கேட்டிருக்கிறார்.
அந்த மூதாட்டி சொல்லி முடித்த சில வினாடிகளில் சுவாமி அவர்கள் திடீரென கால்கட்டு, விரல் கட்டு அறுத்து நிஷ்டையில் இருப்பது போல் சம்மனம் போட்டு அமர்ந்தபடியே காட்சியளித்தாராம்.
அன்று இரவு 10 மணியளவில் பூ பல்லக்கில் சுவாமியை அமர வைத்து விருதுநகர் மையத்தில் உள்ள தெப்பத்தை ஒரு முறை சுற்றி கொண்டு சென்றிருக்கிறார்கள். நகரின் தெற்கு பகுதியில் ஓடும் கெளசிகா மகா நதியின் வடகரையில் சமாதி வைக்க ஆழமாக தோண்டி சுவாமியை அமர வைத்து சுற்றி சுவர் எழுப்பி சமாதியை சாஸ்திரப்படி கட்டி முடித்தார்களாம்.
இதைப் பின்பற்றி, அவரது வாரிசுகள் ஒவ்வொரு வருடமும், தீபாவளி அன்று அவருடைய ஜீவ சமாதியில் கோடி உடுத்தி பூஜை செய்து வருகின்றனர். இனி வரும் காலங்களிலும் இது தொடரும்.
2007ம் ஆண்டு மே மாதம் சுவாமியின் சமாதிக்கு கும்பாபிஷேகம் செய்து குருபூஜை நடத்தினார்கள். அதில் சுவாமிகளின் வம்சாவழியினர் பலரும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ மாரியப்ப சுவாமி தேசிகர் மண்டபம் அமைக்க வேண்டி விருதுநகர், அருப்புக்கோட்டை ரோட்டில் சுவாமி கேட்டபடி ஒரு இடம் வாங்கி அவர் பெயருக்கு ரிஜிஸ்டர் செய்து அதே இடத்தில் கட்டுமானப் பணிகள் முடிந்து, 29-06-2014 அன்று கும்பாபிஷேக குருபூஜை நடைபெற்றது.

ஸ்ரீ மாரியப்ப சுவாமி தேசிகர் மண்டபம் எழுந்தருளியுள்ள இடம்:
ஸ்ரீ மாரியப்ப சுவாமி தேசிகர் திருக்கோவில்
அருப்புக்கோட்டை ரோடு,
லேடீஸ் ஹாஸ்டல் அருகில்
விருதுநகர்.
அருப்புக்கோட்டை ரோடு,
லேடீஸ் ஹாஸ்டல் அருகில்
விருதுநகர்.
ஸ்ரீ மாரியப்ப சுவாமி தேசிகர் அவர்களை கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக சுவாமிகளின் குடும்ப வகையறாகள் மட்டும் அல்லாமல் ஊர் மக்களும் சுற்றியுள்ள கிராமத்து மக்களும் அனைவரும் வந்து சுவாமிகளுக்கு பொங்கல் வைத்து பூஜை செய்தும் போகிறார்கள். சுவாமிகளை வேண்டி வணங்கிக் கொண்டால் நம்முடைய பிரச்சனைகள் எல்லாம் சூரியனைக்கண்ட பனிபோல மறைந்து விடும். இதை அறிந்து சுவாமிகளை பூஜித்து வருபவர்களுக்கு குடும்ப முன்னேற்றமும் நீண்ட ஆயுளும் சுவாமிகளின் அருளால் கிட்டும்.
வாழ்க நாடார் குலம்
வளர்க நாடார் குலம்
வளர்க நாடார் குலம்
No comments:
Post a Comment