கல்வெட்டில் உய்யக்கொண்டான் :
உய்யக்கொண்டான் எனும் வாய்க்கால் குறித்த
1.முதல் கல்வெட்டு அதிராஜேந்திரனின் உடைந்த ஒரு துண்டு கல்வெட்டில் முதன்முதலாக வருகிறது. இக்கல்வெட்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள நாழிகெட்டான் வாயிலுள்ள சுற்றுச்சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. இதில் எல்லைகள் குறிக்கும் இடத்தில் உய்யகொண்டான் வாய்க்கால் வருகிறது. (ARE.NO.181 Of 1951-1952)
2.மூன்றாம் குலோத்துங்கனின் 28 ம் இட்சியாண்டு கல்வெட்டு உய்யக்கொண்டான் வாய்க்காலின் ஒரு மதகில் இருந்து உடைந்ததாக குறிப்புள்ளது. இதில் உய்யக்கொண்டான் வாய்க்கால் என்று வருவதாய் தென்னிந்திய விரியன் கல்வெட்டுகள் Volume 2 ல் குறிப்புள்ளது. (ARE.NO.72 Of 1890)
3.ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் வலதுபுறம் உள்ள பெரியதூணில் 59 வரிகள் கொண்ட பெரிய கல்வெட்டில் 25 வது வரியில் உய்யக்கொண்டான் வாய்க்கால் என்று குறிப்புவருகிறது. இதுவும் நிவந்தம் தொடர்பாய் விடப்பட்டநிலத்தின் எல்லையை குறிப்பதாகும்.இக்கல்வெட்டு நாயக்கர் காலமாகும்(ARE.NO.316 of 1953-1953)
4.திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலின் அடிவார நுழைவாயில் மேற்குச்சுவரில் உள்ள நாயக்கர் கால கல்வெட்டில் 6 வது வரியில் உய்யக்கொண்டான் ஆறு என்று வருகிறது!
5.மேலும் பெட்டவாய்த்தலையிலுள்ள மத்யார்ஜீனேஸ்வரர் கோவிலிலுள்ள கருவறை தென்புற குமுதவரியில் உய்யக்கொண்டான் குறித்த குறிப்பு வருகிறது!
உய்யக்கொண்டான் என்ற வாய்க்கால் குலோத்துங்கன் காலத்தில் பாபநாசம் வட்டத்திலும் ஒரு வாய்க்கால் இருந்துள்ளது.
ஆனால் திருச்சியில் ஓடும் வாய்க்காலினை எவ்வாறு அப்பெயரில் அழைத்தனர் இராஜராஜர், இராஜேந்திரர் காலத்தில்? அவ்வாய்க்கால் முன்னரே இருந்ததா? அல்லது இப்போதுல்ல விவரம் அடிப்படையில் அதிராஜேந்திரர் கால வாய்க்காலா?
நிச்சயம் இல்லை. இவ்வாய்க்கால் இராஜராஜசோழனுக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. அதனை பின்வந்த அரசர்கள் உய்யக்கொண்டான் என்ற பெயரில் அழைத்துள்ளனர்.
Thanks. திருச்சி பார்த்தி
No comments:
Post a Comment