சோழர்களின் செப்பேடுகள்



ஆலந்து (holland) நாட்டின் பொருட்காட்சி சாலையில் இருக்கும் சோழர்களின் செப்பேடுகள் !!! ஆனைமங்கலச் செப்பேடுகள் ( the large leiden plates). முதலாம் இராசராச சோழன், கடார வேந்தனாகிய மாரவிசயோத்துங்க வருமன் நாகப்பட்டினத்தில் 'சூடாமணி வரும விகாரம்' என்னும் புத்த விகாரைக் கட்டுவதற்குப் பேருதவி புரிந்ததுடன் ஆனைமங்கலம் என்னும் கிராமத்தினையும் பள்ளிச் சந்தமாக அளித்தான். அப்புத்த விகாரம் இராசேந்திரனது காலத்தில் முடிவுற்றதால், இவன் தன் தந்தையின் அறக்கட்டளையைச் செப்பேடுகளில் தீட்டியளித்துள்ளான். இதுவே ஆனைமங்கலச் செப்பேடு எனவும் 'லீடன் பட்டயங்கள்' எனவும் இச்செப்பேடுகள் ஆலந்து நாட்டின் பொருட்காட்சி சாலையில் உள்ளமையால் இவை லீடன் செப்பேடுகள் என அழைக்கப்படுகின்றது. இத்தொகுதியில் இருபத்தொன்று செப்பேடுகள் உள்ளன். . சிறிய ஆனைமங்கலச் செப்பேடுகள் (the smaller leiden plates). இச்செப்பேடுகள் முதலாம் குலோத்துங்க சோழனின் இருபதாமாட்சியாண்டில் வெளியிடப்பட்டன. இவை இம்மன்னன், கடார வேந்தன் சோணாட்டில் கட்டிய 'இராசராசப் பெரும் பள்ளிக்கும், இராசேந்திர சோழப் பெரும் பள்ளிக்கும் பள்ளிச் சந்த இறையிலியாக' ஆனைமங்கலத்தில் ஒரு பகுதியுடன் ஆமூர், நாணலூர், புத்தாக்குடி, மூஞ்சிக்குடி, சந்திரபாடி, உதயமார்த்தாண்ட நல்லூர் ஆகிய ஊர்களிலிருந்து விளையும் ஆயிரக்கணக்கான கலம் நெல்லை நிவந்தம் செய்துள்ள செய்தியைக் கூறுகின்றன. மூன்றே ஏடுகள் கொண்ட இச்செப்பேடு லீடனில் உள்ளது. இதுவே, 'சிறிய லீடன் பட்டயங்கள்' என அழைக்கப்படுகிறது. இதை தமிழகத்திற்கு மீட்டுவந்தால் பல தகவல்களை அறிய முடியும். . சான்று: இராசேந்திர சோழன் வீர வரலாறு. எழுத்தாளர்: ம. இராசசேகர தங்கமணி

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...