காயல்பட்டினம் கல்வெட்டு



தூத்துக்குடி மாவட்டம் - காயல்பட்டனம் கடற்கரை கருப்புடையார் பள்ளிக் கல்வெட்டு [ ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது ] பாண்டியமன்னன் ஸ்வஸ்தி சிறீ கொமாற பன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் செம்பிணாடு கொண்டருளிய சிறிவீரபாண்டிய மன்னன் [கி.பி.1190 முதல் 1224 ]கொடுத்த சாசனம் பற்றிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது . 1] பூவின்கிழத்தி மேவி குடைவீற்றிருப்ப 2] மேதினிமாது நீதியில் புணர…………………மடந் 3] தை சயப் புயத்தி ருப்ப மாக்கலை மடந்தை வாக் 4] கினில் விளங்கத் திசையிரு நான்கு மிசை நிலா 5] வெறிப்ப மறைநெறி வளர மனுநெறி திகழ்தர 6] அறந்நெறிச் சமயங் களாறுந் தழைப்ப……………….. 7]……………………………………………………………………………………………….. 8] ………………………………………………………..எழுகடல் பொ 9] ழில் வெண்குடை நிழற்ற செங்கோல் நடப்ப 10] இருநேமி யளவு மொருநேமி யோங்க சேரலர் 11] பணிய மணியணி மாடக்கூடப் பாண்டி மண்டலங் 12] கொள் தென்கீழ்க் கடல்படர் காயலந் துறை கொல்கை 13] முத்துடை வீரபாண்டியன் பட்டித்துள் வெண்டிரள் மணல் 14] மோட்டு மேலெல்கை பவித்ர மாணிக்கம் நகர்க்குக் கா 15] வலர் ஐவர்க் கொருவர் திரிபுவனச் சக்ர 16] வர்த்தி யாணையாக கடற்கரைப் பள்ளி இறையிலி ஆ 17] கக் குடுக்கும் படிக்கு திருவுளத் தருளிய முத்துசலா 18] பம் வாணிகச் சோனாகர் குழக்காய் நாட்டிப் படுத்து 19]……………………………………………எல்கை 20] ட்டியுங்………………………….வாறெல்லாம்……………………..யாண்டு 21] …………………விளங்கு முயர்வா வெள்ளிநாள் 22] …………………………………கல்லிலும் வெட்டுவித்தென்…………………….. 23] த்துத்………………………………மாறனெ………………….ரா…………….கண் 24] டனனே……………………………………………………தென் 25] னா பராக்கிரமனெ……………………………யு…………………..ஒன்றெ 26] ய்யாண்டு கொள்ள யுமாக……………துல்யம்……..எழு 27] த்து………………………………………………………….சுவஸ்தி .ஸ்ரீ காயல்பட்டினம் கடற்கரைப்பள்ளிக்கு நிலமும், மானியமும் பவித்ரமாணிக்கப்பட்டினம், காயல்துறை என்றும் சிறப்புடன் அழைக்கப்பட்டது. அவற்றின் எல்கை ‘’முத்துடை வீரபாண்டியன்பட்டினத்து வெண்திறள் கடற்கரை , மணல்மேடு வரை குறிப்பிடப்படுகிறது. இறையிலி நிலம், குறித்த செய்தியாகும். எல்லைக்கு உட்பட்ட நஞ்சை, புஞ்சை, கொடிக்கால், வாழைத்தோட்டம், வரியில்லாத நிலமாக ஐந்துவேளை தொழுகை நடத்துவதற்கு பள்ளிக்கு, இவ்ஊர் தலைவனுக்கு முத்துசலாபத்தில் வரி கொடுக்கவேண்டும் நன்றி- மதுரை தொல் பொருள் தொழில் நுட்பப் பணியாளர் பண்பாட்டுக் கழகம் ---------------------------------------------------------------------------- முனைவர் தவசிமுத்து மாறன்

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...