காயல்பட்டினம் கல்வெட்டு



தூத்துக்குடி மாவட்டம் - காயல்பட்டனம் கருப்புடையார் பள்ளிக் கல்வெட்டு [ ஆயிரம் ஆண்டு தொன்மையானது ] பவித்ரமாணிக்கப்பட்டினமான காஹிற்றூரில் எட்டடி நெடுந்தெருவில், சோனக வியாபாரிகளின் தலைவருக்கு , சோனவப்பள்ளி பரிபாலனத்திற்கு இறையிலி நிலம், குறித்த செய்தியாகும். எல்லைக்கு உட்பட்ட நஞ்சை, புஞ்சை, கொடிக்கால், வாழைத்தோட்டம், வரியில்லாத நிலமாக ஐந்துவேளை தொழுகை நடத்துவதற்கு பள்ளி கருப்புடையான் கணக்கன் இவ்ஊர் தலைவனுக்கு ஸ்வஸ்தி சிறீ கொமாற பன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் செம்பிணாடு கொண்டருளிய சிறிவீர பாண்டியமன்னன் கொடுத்த சாசனம் 1] ஸ்வஸ்தி சிறீ கொமாற பன்மரான திரிபுவன ச… 2] க்கரவர்த்திகள் செம்பிணாடு கொண்டருளிய சிறிவிர 3] பாண்டிய தெவற்கு யாண்டு…….யாவதனெதிரா 4] மாண்டு இசப நாயிற்று இருபத்………டாந் தியதியும் தி 5] ங்களு[ம்] புனர்பூயத்து நாள் கண்டனன் 6] பவுத்ரி மாணிக்கமான காகிற் றூர் கண் நாடா…. 7] ழ்வானென் எட்டடி நெடுந்தெரு வீற்றுள்ள ஆரல் கத்….. 8] தலை தரள தரங்கத்து சோனக வியாபாரி பள்ளி நாயகற்… 9] குகறுப்புடையார் சோனவபள்ளி…..குடிக்குள் கோன் 10] செய்யுனென்…………………மேல்……குடிமை அந்த 11] ராயம்…………..கீழ்மேல் எல்கை காயல் கரைக் 12] குப் புள்ளிபுக்க நிலம்புன் செய் நன்செய்……..மாவுக்குப் 13] பாசனம் பொக்கத்து வாயிலைக் கொடிப்புறத்து 14] வாழையுட்பட்டு ஆடி குறுவை அல்பசி குறுவாய்க்கு மாத்தால் 15] ……………………..கலநெல்லு எதூணி பதக்கு நெல்லும் அ 16] …………………..திரமும் இறுப்பதாக ………………………வும் 17] ………………………………………………….சோனவப் 18] பள்ளிக் கிதுவகை வரி இல்லாத இருநிதியம் பிறக்கம் வரி 19] கையிற் காட்டி …………………………. 20] ……………………………அஞ்சு வண்ணத் தொழுகை செய் 21] துரற்கா……………..பவித்ரமாணிக்கநரூர் காகி 22] றுர் நாடென்ற பட்டினத்து…………………..கறுப் 23] புடையான் தலைவன் கணக்கன் புரந்து எழுதி காத்து அறப் 24] பகஞ்செய் யக்………………………………..கடவரால் 15] ………………..கு இறுக்கும் படிக்கு…………………கல்வெட்டிக் 16] குடுத்தன்………………………ஸ்வஸ்தி .ஸ்ரீ ----------------------------- முனைவர் தவசிமுத்து மாறன்

No comments:

Post a Comment

நம்மாழ்வார் பாண்டிர் குல நாடார் மரபினர்

நம்மாழ்வார் பாண்டியர் குல நாடார் மரபினர்🎏 ஆழ்வார்களில் நம்மாழ்வாரே முதன்மைப்படுத்திக் கூறப்படுகின்றார். ‘எந்தப் பகவான் வியாசாவதாரம் எடு...