ஹவில்தார் பழனிக்கு வீர் சக்ரா விருதினை இன்று குடியரசு தலைவர் வழங்கினார்


வீரவணக்கம்! கண்கள் பனித்தன.....

வீரமரணமடைந்த ஹவில்தார் பழனிக்கு வீர் சக்ரா விருது;  ஹவில்தார் பழனியின் மனைவி திருமதி வானதிதேவி பெற்றுக் கொண்டார்.

``இந்திய ராணுவத்தின் இந்த உயரிய விருது என் கணவருக்கு அறிவிக்கப்பட்டதன் மூலம், நாட்டுக்காக அவர் செய்த உயிர்த் தியாகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது." - ஹவில்தார் பழனியின் மனைவி திருமதி வானதிதேவி.

கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியபோது மோதலில் உயிரிழந்த தமிழகத்தைச்  சேர்ந்த ஹவில்தார் பழனிக்கு வீர் சக்ரா விருதினை இன்று அவரது மனைவியிடம் மேதகு குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ஆம் தேதி லடாக் எல்லையில் இந்தியாவுக்கு உட்பட்ட கல்வான் பகுதியில் சீனப் படையினர் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை இந்திய வீரரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.உயிரிழந்த 20 பேரில் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூரைச் சேர்ந்த ஹவில்தார் பழனியும் ஒருவர். வீரர் பழனியின் உடல் சொந்த கிராமத்திற்குக் கொண்டுவரப்பட்டு மத்திய, மாநில அரசுகள் சார்பில் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

உயிரிழந்த வீரர்களுக்கு இராணுவ விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழகத்தை சேர்ந்த ஹவில்தார் பழனிக்கான வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனிக்கான வீர் சக்ரா விருதினை அவரது மனைவியிடம் இன்று மேதகு குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

 ஹவில்தார் பழனி,தனது 40 ஆண்டுக்கால வாழ்வில், 23 ஆண்டுகள் இந்திய இராணுவத்தில் பணியாற்றியுள்ளார். அவர் இராணுவத்தில் பணியாற்றியபோது ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் விஜய், ஆபரேஷன் ராக்‌ஷாக், யு.என்.எஸ்.எஃப் அபார்ட் மற்றும் மணிப்பூரில் மேற்கொள்ளப்பட்ட ஹைபசாட் போன்ற ராணுவ தாக்குதல்களில் ஈடுபட்டு தாய் நாட்டுக்காகப் போராடியுள்ளார்.

இராணுவத்தில் சிப்பாயாகச் சேர்ந்த ஹவில்தார் பழனி தன் சிறப்பான செயல்பாடுகளால் நாயக், ஹவில்தார் என அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்ந்தார். அவரது செயல்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் `சுரக்‌ஷா CDR ரக்‌ஷா', `சைன்ய சேவா' உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இறுதியாக, கடந்த ஜூன் மாதம் லடாக் எல்லைப் பகுதியான கல்வானில் சீன இராணுவத்தினரின் ஊடுருவலைத் தடுக்க முயன்று, தனது தாய் நாட்டுக்குத் தன்னையே தந்து வீர மரணம் அடைந்துள்ளார்.

வீரவணக்கம்!
ஜெய் ஜவான்!
பாரத் மாதா கி ஜெய்!

Here are a few facts on the 6 gallantry awards of India arranged according to their level of honour:

1. Param Vir Chakra
Param Vir Chakra is the highest decoration of valour or bravery award.
It is the most conspicuous act of bravery or some act of valour or self sacrifice in the presence of the enemy, whether on land, at sea or in the air.
The bronze medal has four replicas of 'Indra's Vajra' embossed on it with the State Emblem in the centre.
The words 'Param Vir Chakra' is embossed both in Hindi and English on the reverse and the two versions are separated by two lotus flowers.
The ribbon is of plain purple colour.

2. Maha Vir Chakra
Maha Vir Chakra is the second highest gallantry award for acts of conspicuous gallantry in the presence of the enemy, whether on land, at sea or in the air.
The medal is made of standard silver with a five-pointed heraldic star embossed on it with the points of the star just touching the rim.
The words 'Maha Vir Chakra' is embossed both in Hindi and English on the reverse and the two versions are separated by two lotus flowers.
The ribbon is half-white and half-orange colour.

3. Vir Chakra
Vir Chakra is the third highest gallantry award awarded for acts of bravery in the in the presence of the enemy, whether on land, at sea or in the air.
The medal is made of standard silver with a five-pointed heraldic star embossed on it.
The star shall have in the centre a Chakra and within the Chakra shall be a domed centre piece bearing the gilded State Emblem.
The words 'VirChakra' is embossed both in Hindi and English on the reverse and the two versions are separated by two lotus flowers.

4. Ashoka Chakra
Ashok Chakra is awarded for valour, courageous action or sacrifice away from the battlefield. It is the highest military award during peacetime.
The medal is made of gold gild. On the obverse of the medal shall be embossed a replica of Ashoka's Chakra in the centre.
The words 'Ashok Chakra' is embossed both in Hindi and English on the reverse and the two versions are separated by two lotus flowers.

5. Kirti Chakra
The Kirti Chakra decoration is awarded for conspicuous gallantry.
The medal is made of standard silver and is circular in shape. The green ribbon is divided into three equal parts by two orange vertical lines.
The obverse and reverse are exactly the same as in Ashok Chakra.

6. Shaurya Chakra
The Shaurya Chakra decoration is awarded for an act of gallantry during peacetime.
It is a circular bronze medal with a green ribbon divided into four equal parts by three vertical lines.

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...