உலக காவல்துறை துணைத்தலைவர் (இண்டர்போல்) எப்ஃவி.அருள் நாடார்


நாடார்கள் மறந்து விட்ட மகத்தான சாதனையாளர்

உலக காவல்துறை துணைத்தலைவர் (இண்டர்போல்) எப்ஃவி.அருள்நாடார் அவர்களின் 104 வது பிறந்தநாள் 

தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமத்தை சேர்ந்தவர்.
24/11/1917 ஆம் தேதி பிறந்தவர்

இந்தியன் போலீஸ்(ஐ,பி) தேர்வில்1942ல் வெற்றி பெற்றார்.

அன்றைய ஐ.பி. தேர்வு இப்போதுள்ள ஐ.பி.எஸ் போன்றது. 1943 ம் ஆண்டு முதல்தான் அந்த தேர்வு ஐ பி எஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது

சர்வதேச போலீஸ்(இன்டர்போல்) அமைப்பின் துணைத்தலை வராகவும் சில ஆண்டுகள் பதவி வகித்தார்.

ஆசிய கண்டத்திலேயே இந்த பதவியை முதலில் வகித்தவர் அருள்நாடார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரிஸில் நடந்தஇன்டர்போல் 
அதிகாரிகளின்சர்வதேச மாநாட்டின் தலைவராக இருந்து அருள்நாடார் ஆற்றிய சிறப்புரை சர்வதேச அளவில் பெரும் புகழைப் பெற்றது.

இந்திய புலனாய்வு துறையின் (C.B.I.) இயக்குனராகவும் சிறப்பாக பணியாற்றி உள்ளார்.

1973 முதல்1976 வரை தமிழக காவல்துறை தலைவராக பணியாற்றி நக்சல்களை ஒழித்துக்கட்டினார்.

அருள், துப்பாக்கி சுடுவதில் நன்கு தேர்ச்சி பெற்றவர். பல போட்டிகளில் கலந்துகொண்டு தங்க பதக்கங்களை பெற்றவர்.

ஹாக்கி விளையாட்டிலும் சாதனையாளர் அன்றைய காலகட்டத்தில் உலக அளவில் சிறந்த அணியான இருந்த இந்திய ஹாக்கி அணியை அருள்நாடார் தலைமையிலான தமிழக காவல்துறை ஹாக்கி அணி ஒரு போட்டியில் வீழ்த்தியது.

நேர்மைக்கு இலக்கணமாக திகழ்ந்த ஐ.ஜி. அருள்நாடார்தான், தங்களது ரோல் மாடல் என்று பல உயர் போலீஸ் அதிகாரிகள் இப்போதும் கூறி போற்றுவதுண்டு 

நேர்மைக்கும் நிர்வாக திறமைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து ஒரு நாடாராக தான் பிறந்த சமுதாயத்திற்கும்,தமிழனாக பிறந்து தமிழக மக்களுக்கும் தமிழ்நாட்டிற்கும்,இந்தியனாக இந்திய மக்களுக்கும், ஆசியனாக ஆசிய கண்டத்தின் மக்களுக்கும் உலக காவல் துறை துணைத்தலைவராக பதவி வகித்து பெருமை தேடித்தந்துள்ளார்.

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...