தாதுமணல் -தொழில் வளர்ச்சி- ஜெ.முத்து ரமேஷ் நாடார்


#தாதுமணல்

இந்த வகை கனிம பொருள்கள் பெயிண்ட், பெவிக்கால் இது போன்ற ஓட்டும் பொருள்கள்  அனைத்திற்கும் பயன்படுகிறது மேலும் முக்கியமாக ஆகாய விமானங்கள் தயாரிக்க டைட்டானியம் கனிமங்கள் மிகவும் பயன்படுகின்றன இந்தியாவிலும் இந்த வகை கனிமங்கள் உண்டு,, இதை தாது மணல் என்று சொல்லுகிறோம் .  

இந்த வகை கனிமங்கள் கடல் அலையில் அடித்து வரப்பட்டு முதலில் இந்திய கரையோரம் ஒதுங்கும். அதாவது  குஜராத், ராஜஸ்தான், கேரளா, தமிழ்நாட்டில் திருநெல்வேலி ராதாபுரம் பகுதிகளில் அந்த தாது மணல் 3 அல்லது 5 மாதங்கள் கடற்கரையோரம் குவியும். 

அதை நாம் அள்ள வில்லை என்றால் மறுபடியும் கடல் அந்த மணலை காற்று அடிக்கும் திசை நோக்கி நகர்ந்து இலங்கையில் மன்னர் பகுதியில் கொண்டு சேர்க்கும், அவர்களும் அதை சரி வர பயன்படுத்தவில்லை என்றால் அது அப்படியே ஆஸ்திரேலியா நோக்கி நகரும்..  

அதனால் தான் அளவுக்கு அதிகமான தாது மணல் ஆஸ்திரேலியாவில் கிடைக்க காரணம்  நம் நாட்டில் அரசாங்கம் தாது மணல் தொழில் சாலை உள்ளது ,, ஆனால் அதை சரியாக இயங்குவதில்லை. 

தனியார் தொழில் சாலைகளுக்கு தடை விதித்த காரணத்தால் இந்தியாவில் தாது மணல் அள்ளுவதே இல்லை. அதனால் ஆஸ்திரிலேலியா இந்த தாது மணல் வியாபாரத்தில் உலகத்தில் No.1 ஆக இருக்கிறது 

இந்திரா காந்தி காலத்தில் இந்திய கடற்கரையோரம் உள்ள பகுதிகளை குத்தகைக்கு கேட்டது அமெரிக்கா என்றால் அதன் தேவையை அறிந்து கொள்ளலாம்.

ஆகவே மத்திய மாநில அரசுகள் தாது மணல் தொழிலை உடனடியாக அனுமதிக்க வேண்டி கேட்டுக் கொள்கிறோம் தென்தமிழகத்தின் ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசுகள் நல்ல முடிவு எடுக்க கேட்டுக் கொள்கிறோம்

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...