லத்தீன் மொழியில் எழுதப்பட்ட புத்தகத்தில் நாடாண்ட நாடாரின் வரலாறு.....(Seran Arul Nadar)


நன்றி:பாண்டிய நாடாள்வான்

லத்தீன் மொழியில் எழுதப்பட்ட புத்தகத்தில் நாடாண்ட நாடாரின் வரலாறு.....

சூரிய சந்திர குலத்துக்கு ஆயிரம் வரலாறு உண்டு, அதில் ஒன்று 

கி.பி இரண்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாக்கண்டத்திலுள்ள கிரீஸ் தேசத்தினின்றும் "கிளமென்ஸ்"என்ற சரித்திர ஆசிரியர் ,தம் உலக சுற்றுப்பிராயணத்தின் இடையே இந்தியாவிற்கும் வந்திருக்கிறார்.அலக்ஸாந்திரியா பட்டணத்தில் பிறந்த அவர் லத்தீன் பாஷையில் 'பெரிப்ளஸ் மாரிஸ் எரித்ரே( periplus maris erythrae) என்ற பிரபல சரித்திர புஸ்தகம் ஒன்றை இவர் இயற்றிருக்கிறார்.அப்புத்தகத்தில் நாடாண்ட சூரிய சந்திர குல சத்ரிய சான்றோர்களின் அறிய வரலாற்றுத்தகவல்கள் இடம் பெற்றுள்ளன,அவை பின்வருமாறு

1.இந்தியாவின் மேல் கடற்கரையில், மைசூருக்கு மேற்கே அக்காலத்தில் அரசுபுரிந்த சாலிவாகணனைச் சேர்ந்த அரசர்களுடைய ஆட்சி முற்றிய பின் சான்றான்களின் ராஜாங்கம் வலுவடைந்தது

2.தென்கன்னடம் ஜில்லாவைச் சார்ந்த கலியாணபுரம் என்னும் துறைமுகம் (சாலியவாகண)சாராகனன்கள் காலத்திற் சிறப்புற்று விளங்கிப் பின்னர் சான்றார்களின் ஆளுகையிலும் செழிப்புற்று ஓங்கிற்று.

3.ஏதேனும் கிரேக்கக் கப்பல் அத்துறைமுகத்திற்கு வந்தால் சான்றார்கள் அதனையறிந்து பல கட்டுப்பாடுகளுடன் காவற்காரன் ஒருவனது கண்காணிப்பில் அக்கப்பலை பருகாசா என்னும் இடத்திற்கு அனுப்பி விடுவர்

மேற்கண்ட பிரயாணக்குறிப்பிலிருந்து சில வரலாற்று உண்மைகள் புலப்படுகின்றன.கிறித்து பிறப்பதற்கு முன் 50 ம் ஆண்டளவில் பாரத கண்டத்தில் பிரபலம் பெற்ற பேரரசனாகிய விக்கிரமார்க்கன் (விக்கிரம ஆதித்தன்) செங்கோலோச்சினான்.அவன் காளி தேவியின் அருளால் பலவரங்களைப்பெற்று பல சாதனைகள் புரிந்தவனாவான்,இவன் சத்ரியன்.

பெரிப்பிளஸ் குறிப்பிடும் சாலிவாகணன் கிபி 78 ல் ஆட்சி புரிந்தவன்.அவன் பெயராலேயே சாலிவாகண சகாப்தம் வழங்கிவருகின்றது. இச் சாலிவாகணன் சத்ரிய குலத்தவனல்ல, அவன் பார்ப்பானுக்கும் குயக்கன்னிக்கும் பிறந்தவன். "இச்சாலியவாகன அரசன்களின் ஆட்சி முற்றிய பின் சான்றோர்களின் ராஜாங்கம் வலுவடைந்தது என குறிப்பிடுவதால் சாலிவாகணனுக்கு முன் சிறப்பு பெற்றிருந்த சான்றார்களின் அரசாட்சி அச்சாலியவாகனன் காலத்தில் ஒளிமங்கியிருக்கிறது.பின் அவர்களின் ஆட்சி முடிவுற்ற பின்னர் மீண்டும் தலையெடுக்கத் துவங்கி பண்டைச்சிறப்பு முழுமையும் எய்திற்று என்பது புலனாகிறது.எனவே விக்கிரமார்க்கனின் சந்ததியினருடைய ஆட்சியையே சான்றார்களின் அரசாங்கம் என பெரிப்பிளஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட சான்றுகள் மூலம் சான்றோர்கள்(நாடார்கள்)ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே இந்தியா முழுவதும் ஆட்சி செய்துள்ளனர் என்பதும்,விக்கிரமார்க்கன் முதலிய சத்ரிய குல அரசர்களும் "சான்றோர்" என்ற பெயருடன் வழங்கினார்கள் என்பதும் உறுதியாகிறது

-பாண்டிய நாடாள்வான்.

No comments:

Post a Comment

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் திருப்பரங்குன்றம் நமது நாடார் ▪️மடங்கள்▪️மண்டபங்கள்▪️நந்தவனம் - நன்றி ராஜதுரை நாடார்

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் முதலாம் படைவீடாம் திருப்பரங்குன்றத்தில் உள்ள நமது நாடார் இன ▪️மடங்கள் ▪️மண்டபங்கள் ▪️நந்தவனம் விவரங்கள் ...