குட்டம் மார்த்தாண்டன் நாடார் அரசகுலத்தினர்


குட்டம் மார்த்தாண்டன் நாடார் அரசகுலத்தினர் – ஆய்வு
அரச குடும்பத்தினர் வெற்றியை விரும்பினர்.அவர்களது வெற்றியின் வடிவமாகவும், விருப்பத்திற்குரிய பெயராகவும் வேணாடு மற்றும் தமிழகத்திலும் மார்த்தாண்டன் , வீர மார்த்தாண்டன் ,வீர உதய மார்த்தாண்டன் ஆகிய பெயர்கள் இருந்துள்ளன.சேரனின் சின்னம் வில்,பூ பனம்பூ,மரம் பனை என்று இலக்கியச் சான்றுகளும் கல்வெட்டுச் சான்றுகளும் கூறுகின்றன. திருவிதாங்கூர் மற்றும் பாண்டியநாட்டு வரலாற்றில் இப்பெயர்கள் பல்வேறு காலங்களில் பெருமையுடன் விளங்கியுள்ளதை கல்வெட்டுக்கள் கூறுகின்றன. மார்த்தாண்டன் என்ற பெயருள் பொதிந்து கிடக்கும் ஆற்றல் என்ன...காந்த சக்தி என்ன... என்னதான் பொருள்....சூரியன்; ஞாயிறு என்று பொருள் தருகின்றது. எதிரிகளைச் சுட்டெரிக்கும் சூரியன்,எழு ஞாயிறு உதைய மார்த்தாண்டன் தன்னை அண்டி வந்தோரைக் காக்கும் குளுமையான இளஞ்சூரியன். மார்த்தாண்டன் என்ற பெயர் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பார்ப்போம்., கி.பி.12 ஆம் நூற்றாண்டில் கி.பி 1123 இல் உதைய மார்த்தாண்டனின் கல்வெட்டு கல்குளம் [தற்போதய பத்மநாபபுரம்] ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் காணப்படுகின்றது. முதலாம் வீர உதையமார்த்தாண்டன் இவனே. வேணாடு மன்னர்களில் பாண்டிய நாட்டின் சில பகுதிகளை 46 ஆண்டுகள் தன்னுடைய சிறப்பான நிர்வாகத்தின் கீழ் வைத்திருந்த சிறப்பிற்குரியவன் இவனே.குட்டம் சந்திரமார்த்தாண்டன்பணிக்கன், குமாரவீர மார்த்தாண்டன் இவரது வழித்தோன்றல் மரபினர் ஆவார்கள்.மன்னர்களின் பெயர்கள் தலைமுறை தலைமுறையாக ஒரே பெயர்களாக வருவதுண்டு, அரச குடும்பத்தினர் வெற்றியை விரும்பினர். அவர்களது வெற்றியின் வடிவமாகவும், விருப்பத்திற்குரிய பெயராகவும் வேணாடு மற்றும் தமிழகத்திலும் மார்த்தாண்டன் , வீர மார்த்தாண்டன் ,வீர உதய மார்த்தாண்டன் ஆகிய பெயர்கள் இருந்துள்ளன .சேரனின் சின்னம் வில்,பூ பனம்பூ,மரம் பனை என்று இலக்கியச் சான்றுகளும் கல்வெட்டுச் சான்றுகளும் கூறுகின்றன. திருவிதாங்கூர் மற்றும் பாண்டியநாட்டு வரலாற்றில் இப்பெயர்கள் பல்வேறு காலங்களில் பெருமையுடன் விளங்கியுள்ளதை கல்வெட்டுக்கள் கூறுகின்றன. குட்டம் குமாரவீர மார்த்தாண்டன் இவரது வழித்தோன்றல் மரபினர் ஆவார்கள்.மன்னர்களின் பெயர்கள் தலைமுறை தலைமுறையாக ஒரே பெயர்களாக வருவதுண்டு,அது போலத்தான் குட்டம் குமாரவீர மார்த்தாண்டனின் பெயரும் வேறுபட்ட காலங்களில் வேணாடு,தென்காசி,களக்காடு ஆட்சிக்காலங்களிலும் கி.பி.17 ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து வந்துள்ள சிறப்பைக் காணலாம். தென் தமிழகத்தில் இவ் வீர உதைய மார்த்தாண்டனின் திருப்பணிகளும் மாநியங்களும் ஏராளமான கோயில்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மார்த்தாண்டன் என்ற பெயரை சிறப்பின் கருதி பல்வேறு மக்களும்,பல்வேறு பிரிவினரும் இட்டு வழங்கியுள்ளனர்.அவர்கள் அனைவரும் வீர உதைய மார்த்தாண்டன் மரபினரல்ல இந்த ஊரில் அந்த ஊரில் மார்த்தாண்டன் பெயர் உள்ளவர்கள் இருக்கின்றார்களே அவர்களெல்லாம் யார் என்று... சிலர் குழப்பத்தில் ஆழ்ந்து,பிறரையும் குழப்பத்தில் விட்டுள்ளனர். அவர்கள் அப்பெயரின் சிறப்பின் கருதி அந்த பெயரை இட்டுக் கொண்டவர்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் .அவர்கள் சேர நாடு அல்லது பாண்டிய நாட்டைச் சேர்ந்த நிலைமைக்கார நாடார்களாகக் கூடும். ஆனால் சேர மார்த்தாண்டனின் ஆட்சி மரபினரில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இம் மார்த்தாண்டனின் மரபினரின் ஆட்சிக்காலங்கள் பற்றி அறிந்து கொள்வோம் .கி.பி.1316 ஐச் சேர்ந்த கன்னியாகுமரி வட்டம் சோழபுரம் கோயில் கல்வெட்டு மூலம் மற்றொரு வீர உதைய மார்த்தாண்டன் அறியப்படுகின்றான். இவன் இரண்டாம் வீர உதைய மார்த்தாண்டன் ஆவான். கி.பி.1501 இலிருந்து கி.பி 1547 வரை மற்றுமொரு வீர உதைய மார்த்தாண்டன் சிறப்புடன் ஆட்சி செய்துள்ளான்.களக்காடு அருள்மிகு சத்திய வாகீசர் கோயிலில் கொல்லம் 676 ஆண்டு கல்வெட்டு இம் மன்னன் வடசேரியில் வீற்றிருந்த காலத்தில் களக்காடு கோயிலுக்கு உச்சி சந்திரபூஜை நடைபெறுவதற்கு தேவதானம் நிலம் வழங்கியதைக் குறிப்பிடுகிறது. கொல்லம் 685 இல் தென்காசிப் பாண்டியனை வெற்றி கண்டு நாட்டையும் அரண்மனையையும் கைப்பற்றியுள்ளான்.தென்காசி வீரபாண்டியன் அரண்மனையிலிருந்து மார்த்தாண்டன் பிறப்பித்த ஆணைகளின் மூலம் களக்காடு வீர மார்த்தாண்ட பிள்ளையார் கோயிலுக்கு தானம் தந்த செய்தி உடைய கல்வெட்டாக களக்காடு அருள்மிகு சத்திய வாகீசர் கோயிலில் காணப்படுகிறது. மேலும் கி.பி.1546 ஐச் சேர்ந்த கல்வெட்டு திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலிலும் கி.பி.1547 ஆண்டின் கல்வெட்டொன்று திருப்புடைமருதூர் கோயிலிலும் உள்ளது. தென்காசி மன்னனான சீவல்லப மாற பாண்டிய நாடானுடைய ஆட்சிக்காலம் கி.பி.1534 முதல் கி.பி 1543 வரையிலான காலத்தில் சீவல்லப மாற பாண்டியனுடைய எல்கைக்குள்ளே வீர மார்த்தாண்டனுடைய கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. உதைய மார்த்தாண்டனுக்கு களக்காடு,வடசேரி,தென்காசி, ஆகிய ஊர்களில் அரண்மணைகள் இருந்துள்ளன.இவற்றுள் களக்காடு அரண்மனையிலே நீண்டகாலம் வீற்றிருந்து ஏராளமான தானங்களையும் திருப்பணிகளையும் செய்துள்ளான் என்பது கல்வெட்டுக்கள் மூலம் தெரிகின்றன. வெற்றி மேல் வெற்றி கண்ட வீர உதைய மார்த்தாண்டன் களக்காட்டில் எழிலான அரண்மனையைக் கட்டுவித்தான் அகரம் ஒன்றையும் புதியதாக அமைத்தான் இது பற்றிய கல்வெட்டு “ களக்காடான சோழ குல வல்லிபுரத்து வீரமார்த்தாண்டச் சதுர்வேதி மங்கலம் என்று நம் பேரால் வைத்த அகர சீர்மையில் புதிய வீட்டில் நாம் வீடாயிருந்து - என்று பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம் “வீரமார்த்தாண்டன் என்ற பெயர் உதைய மார்த்தாண்டனுடையது என்பதை அறியலாம். இரண்டு பெயர்களும் ஒருவருக்கு வழங்கப்பட்டதே என்பது கல்வெட்டுக்கள் கூறும் வரலாறு. உதைய மார்த்தாண்டன் கோயில்களுக்கு வழங்கிய தானங்களுக்கு தன்னுடைய பெயரால் வீரமார்த்தாண்டன் சந்தி , வீரமார்த்தாண்டன் மடம் என்று பெயரிட்டிருப்பதும் சிறப்பாகும். வேணாட்டு மன்னருள் வீரமார்த்தாண்டரான குல சேகரப் பெருமாள் என்பவனும் சிறப்புடன் ஆட்சி செய்துள்ளான் திருக்களூர் பெருமாள் கோயிலின் முன்புறம் அமைந்துள்ள மதுரகவி பந்தலில் சோமீசன் கட்டிலில் வீற்றிருந்தும், வள்ளியூர் சைவசிகாமணி பட்ட்ர் வீட்டிலிருந்தும், சுசீந்திரம், உட்கோயிலில் அமர்ந்திருந்தும் பல திருப்பணிகளுக்கும், அரசாணைகளுக்கும் இட்டு கல்வெட்டுக்கள் மூலம் பதிவு செய்துள்ளான். உதைய மார்த்தாண்டன் திருப்பாப்பூர் மூத்தவர், சிறைவாய் மூத்தவர் என்ற பெயரிலும்றும் குறிப்பிட்டுள்ளார். தென்காசியை வெற்றி கண்ட பின்பு கொல்லம் 707 இல் வீரமார்த்தாண்ட பராக்கிரம பாண்டியன் , என்றும் குற்றாலம் குற்றாலநாதர் கோயில் கல்வெட்டு குறிப்பிடுவது நோக்கத்தக்கது. இக்கல்வெட்டு குற்றாலம் கோயில் திருப்பணி; வழிபாடு செய்திட பணியாளர்களை நியமித்த செய்தியைக் கொண்டது. அதே காலத்தில் உதைய மார்த்தாண்டனுக்கும் தென்காசி சீவல்லப மாற பாண்டியனுக்கும் ஏற்பட்ட போரின் விளைவால் தென்காசி விசுவநாதர் கோயில் சிறிது காலம் வழிபாடின்றி இருந்ததால் கொல்லம் 700 கி.பி 1525 இக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்து குடமுழுக்காட்டி, வழிபாடு செய்திட ஏற்பாடு செய்தான் மார்த்தாண்டன். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலிலுள்ள கொல்லம் 721 ஆம் ஆண்டின் கல்வெட்டு சங்கிலி வீரமார்த்தாண்டன் சிறைவாய் மூத்தவர் என்று குறிப்பிடுவது நோக்கத்தக்கது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் திருப்பணியில்மிகுந்த பற்றுகொண்ட உதைய மார்த்தாண்டன் அறுபத்து மூன்று நாயன்மார்களின் செப்புத் திருமேனிகளைசெய்வித்தான். திருக்கல்யாண வைபவத்தில் நாயன்மார்களின் திருவுருவை எமுந்தருளச்செய்தான். நெல்லையப்பர் கோயில் மகாமண்டத்தின் கலையழகும் சிற்ப நுட்பமும் இசைத்தூண் மண்டபத்தை உருவாக்கியவன் இவனே வீரமார்த்தாண்டனுக்கு திருப்பாப்பூர் மூத்தவர், சிறைவாய் மூத்தவர் என்ற பெயர்கள் வழங்கப் பெற்றதை கல்வெட்டுக்கள் மூலம் அறிந்தோம். இம்மூத்தவரான வீரமார்த்தாண்டனின் இளவலே குமார வீரமார்த்தாண்டன் ஆவான். இளவரசனான இவன் படைகளுக்குத் தலைமை தாங்கி அண்ணனுக்கு பல வெற்றிகளைத் தேடித்தந்தான். தென்காசி பாண்டியனுடனான போர் வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாகும். இப்போர்தான் சேரனான மார்த்தாண்டனின் பல்வேறு சிறப்புகளுக்கும் பாதுகாப்புக்கும் அடிப்படையானது. ஸ்ரீவல்லமாற பாண்டியனான விரட்டி விட்டதோடு அவனது தென்காசியையும் சேரநாட்டின் எல்கையான செங்கோட்டையையும் கைப்பற்றி அண்ணனான உதைய வீர மார்த்தாண்டனுக்கு மிகப்பெரிய கீர்த்தியைத் தேடித்தந்தான் குமார வீர மார்த்தாண்டன் . உதைய மார்த்தாண்டன், கோயில் திருப்பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடனும் இருந்தது போற்றுதலுக்குரியது. தன்னுடைய பெயரால் கோயில் மூலவரை அழைத்தும்; தன்னுடைய பெயரால் வேதம் ஓதும் அந்தணர்களுக்கும், பூஜை செய்வோருக்கும் அகரங்களை அமைத்துக் கொடுத்தும் மகிழ்வெய்தினான். அம்பாசமுத்திரம் அருகில் உள்ள பள்ளக்கால் என்ற ஊரில் விஷ்ணு கோயிலை அமைத்து எமுந்தருளியிருக்கும் இறைவனை உதயமார்த்தாண்ட விண்ணகராழ்வார் என்றும் எரிச்சகுளம் கோயில் இறைவனை வீரமார்த்தேண்டேஸ் வரமுடைய நாயனார் என்றும் களக்காடு மற்றும் சுசீந்திரம், குலசேகரன்பட்டினம்[ கி.பி.1752 கல்வெட்டு ]ஆகிய ஊர்களில் உதைய மார்த்தாண்டன் விநாயகர் என்ற விநாயகரும் அழைக்கப் பெற்றுள்ளர். களக்காட்டில் அகரம் ஒன்றினை அமைத்து வீரமார்த்தாண்டச் சதுர் வேதி மங்கலம் என்றும் பள்ளக்கால் அகரத்தை உதய மார்த்தாண்டன் சதுர்வேதி மங்கலம் என்றும் பேர் பெறச் செய்வித்தை பள்ளக்கால் கோயில் கல்வெட்டு கூறுகிறது. களக்காட்டில் உள்ள வீரமார்த்தாண்டன் கோயில் இவரால் கட்டப்பட்டது. திருச்செந்தூர் அருகேயுள்ள காயல்பட்டினம் மார்த்தாண்டன் பெயரால் உதைய மார்த்தாண்டன்பட்டினம் என்று அழைக்கப்பட்டதை காயல்பட்டினம் அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் உள்ளதை தொல்லியல் ஆராய்ச்சியாளர் முனைவர் தவசிமுத்து மாறன் அவர்களால் கண்டறியப்பட்டுள்ளது. உதைய மார்த்தாண்டன் பூஜை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அதிகாலை பூஜை உதைய மார்த்தாண்டன் பூஜை என்று இன்றளவும் வழங்கப்பட்டு வருகின்றது. உதைய மார்த்தாண்டன் சந்தி வீரமார்த்தாண்டன் சுசீந்திரம் கோயில், ஸ்ரீவல்லிபுத்தூர் ஆண்டாள் கன்னியாகுமரி பகவதி அம்மன், திருநெல்வேலி நெல்லையப்பர், உள்ளிட்ட கோயில் தெய்வங்களுக்கு வழிபாடுகள் நடத்திட வகை செய்தான் மார்த்தாண்டன். செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோயில் வழிபாட்டிற்கும் மார்த்தாண்டன் மானியங்களை வழங்கியுள்ளான். உதைய மார்த்தாண்டனின் தானத்தால் ஸ்ரீவல்லிபுத்தூர் அருகே நலுக்கல் என்ற ஊரில் மடம் அமைக்கப்பட்டது. பிரம்மதேசம் கயிலாயமுடையார் சுவாமிக்கு, வேப்பங்குளம் என்ற ஊரை தானமாக வழங்கினான் மார்த்தாண்டன். அதனால் வேப்பங்குளம் வீரமார்த்தாண்டப் பேரேரி என்று அழைக்கப்பட்டது. உதைய மார்த்தாண்டனின் சகோதரனான குமாரவீரமார்த்தாண்டன் தற்போதைய பத்மநாபபுரம் கல்குளத்தை தலை நகரமாகக் கொண்டு ஆட்சி செய்துவந்த குடும்பத்தினர். கால சுழற்சி மன்னர்களின் மண உறவுகளில் பிற இனத்தவரும் கலந்ததன் விளைவாக, ஆட்சியுரிமை அதிகாரப் போட்டியால் அரசராகி அடுத்த நிலையில் வரலாயினர். குமார வீரமார்த்தாண்டன் குடும்பத்தினர். சேர, சோழ, பாண்டியர் என்றும் மூவேந்தர்கள் தமிழர் என்ற பண்பாட்டு உறவிலும், அரசு உரிமையிலும் மண உறவிலும் கலந்தும் இணைந்தும் வந்துள்ளனர். இயற்கை அன்னையின் அற்புத படைப்பு; கால வெள்ளத்தால் அழியாத தனிச்சிறப்பு சேர நாடு. முற்காலத்தில் தென் பகுதியில் ஆய் நாடு, வேணாடு என்ற இரு சிறப்புமிகு சிற்றரசுகள் வலிமையுள்ள படைபலத்துடன் விளங்கி வந்தன. கண்ணியாகுமரி, வள்ளியூர்[வல்லியூர்], நாங்குனேரி, குட்டம், பொதியமலை வரை ஆய் நாடு ஆகும். வேணாடு என்பது ஆய் நாட்டிற்கு மேற்கு, வடக்கு கொல்லம் வரையிலும் சேர மன்னர்களின் வலிமையான படைபலத்திற்கும், ஆற்றல் மிக்க யானை, குதிரைப் படைகளும் கப்பற் படைகளும் சான்றாகத் திகழ்ந்தது. முற்காலத்திலிருந்து பிற்கால பிரிட்டிசார் காலம் வரை வேணாட்டின் அரிய செல்வங்களின் மீது ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கும் பேராசை இருந்து ஆட்டிப்படைத்ததால் வேணாட்டின் அரசர்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டது. கி.பி 9 ஆம் நூற்றாண்டில் சோழர்கள், பாண்டிய நாட்டின் தங்களது ஆதிக்க பலத்தை வேணாட்டின் மீது காட்டிட படையெடுத்தனர். இதனை ஒடுக்கிட ஆய் நாடு வேணாட்டுடன் இணைந்தது. தலைநகரமாக திருவிதாங்கோடும் பின்பு கல்குளமும் சிறப்புடன் திகழ்ந்தது. கல்குளம் தற்போதைய பத்மநாபபுரம் ஆகும். கி.பி 17 ஆம் நூற்றாண்டு வரையிலும் பத்மநாபபுரமே வேணாட்டின் தலைநகரமாக விளங்கியது. பின்புதான் திருவிதாங்கோடு தலைநகரமாக மாற்றப்பட்டது. வேணாடு தலைநகரமாக கல்குளம் இருந்தவரை தமிழ்நாட்டின் ஒரு அங்கமாகவே இருந்தது. தலைநகரம் மாற்றபட்ட பின்புதான் மளையாளம் நாயர், நம்பூதிகளின் ஆதிக்கம், நாடாள்பவர்களின் ஆட்சி, அதிகாரமும் ஒடுக்கப்பட்டன. வேணாட்டின் தலைநகரமாக கல்குளம் தற்போதைய பத்மநாபபுரம் இருந்தபோது கி.பி 1299 - 1314 வரை ஆட்சி செய்த இரவிவர்மன் குலசேகரப் பெருமாள் சேர சோழ பாண்டிய நாடுகள் மூன்றையும் தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டு வந்த பெரும் சிறப்புக்குரியவன் மதுரையை ஆட்சிசெய்த விக்கிரம பாண்டியனின் புதல்வியைத் திருமணம் புரிந்து மணஉறவு மூலம் வலிமையானான். இக்காலத்தில் டில்லி சுல்தான்கள் தென்னாட்டின் மீது படையெடுத்தனர். மாலிக்காபூர் என்ற தளபதி மதுரை மீது தன்னுடைய வலிமையான படையுடன் தாக்கினார். வேணாட்டு இரவிவர்மன் குலசேகரப்பெருமாள் தன்னுடைய படையைத் திரட்டிச்சென்று சுல்தான் படையை விரட்டி அடித்தார். மதுரை மீட்கப்பட்டது . பின்பு காஞ்சிபுரம் நோக்கிப் படையெடுத்து வெற்றி கண்டு மும்மண்டலாதிபதி என்றும் மும்மண்டலங்குடி ராஜா என பெருமையும் சிறப்பும் எய்தினார். சேரமன்னர்களில் சிறப்புக்குரிய இவர் காலத்தில் கலைகள் போற்றப்பட்டன. மதிநுட்பமிக்க இவர் பத்மநாபபுரம் கோட்டையையும் கோட்டைக்குள் தாய்க் கொட்டாபுரம் (அரண்மனை) 186.5 ஏக்கர் பரப்பளவில் கட்டினார். வேணாட்டின் கட்டிடக் கலைக்குச் சான்றாக கட்டமைப்பில் அமைந்தது. நாடார்களின் வழித் தோன்றலான இவர் காலத்தில் அரண்மனையில் அருள்மிகு பத்திரக்காளிக்கு 41 நாள் திரு விழா கோலாகலமாக நடத்தப்பட்டது. இக்கோட்டைக்குள் தான் அருள்மிகு ஆனந்தவல்லி அம்மனுக்கும் அருள்மிகு - நீலகண்ட சுவாமிக்கும் கோயிலை தெப்பக்குளத்துடன் அமைத்துள்ளார். அருள்மிகு ஆனந்தவல்லிக்கும் அருள்மிகு- நீலகண்டசுவாமிக்கும் தனித்தனியே சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் கி.பி 1237 கி.பி 1578 ஆகிய ஆண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகள் உள்ளன. ராஜகோபுபுரம், அற்புதமான சுற்றுப்பிரகாரம், சிற்பக் கலைக்கோர் எடுத்துக்காட்டுடன் திகழும் இக்கோயில் சிவராத்திரி திருவிழாவின் போது இலட்சக்கணக்கான பத்தர்களால் வழிபடப்பெறும் சிவலாய ஓட்ட வழிபாட்டில் ஏழாவது கோயிலாக வைக்கப் பெற்றுள்ளது. வேணாட்டின் மன்னனாக இரவிவர்ம குலசேகரப் பெருமாள் ஆட்சிக்காலத்தில் இருந்த போது வேணாட்டின் புகழ் ஒங்கியிருந்தது. இக்குலசேகரனுக்குப் பின்பு இவரது வாரிசுகளின் பெயர்களில் சூரியனின் அளவிட முடியாத ஆற்றலை புலப்படுத்தும் மார்த்தாண்டன் என்ற பட்டத்தைப் புனைந்து கொண்டது கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. குட்டம் மார்த்தாண்டன்கள் இவரது வழித்தோன்றல்களே. தொடர்ச்சியாக குலசேகரப் பெருமாள் வழித்தோன்றல்கள். வேணாட்டையும் தென் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளையும் ஆட்சி செய்துள்ளனர். கி.பி 1316 (கொல்லம் 491) இல் இரண்டாம் வீர உதய மார்தாண்டவர்மர் திருவடி வேணாட்டு மன்னனானார். . வீரகேரளபுரத்தில் இவரது கல்வெட்டு கிடைத்துள்ளது. இவரது வழித்தோன்றல்கள் குட்டம் சந்திரமார்த்தாண்டன், குமாரவீர மார்த்தாண்டன் குடும்பத்தினர் . இவ் வீரஉதய மார்த்தாண்டவர்மா மற்றும் இவரது புதல்வர்களின் கல்வெட்டுகள் கன்னியாகுமரி, சேரன்மகாதேவி அம்பாசமுத்திரம், பணகுடி, தென்காசி, திருநெல்வேலி, களக்காடு, வள்ளியூர், காயல்பட்டினம், ஆகிய ஊர்களில் உள்ளன. கி.பி 1387 இல் காயல்பட்டினம் அருகே உள்ள வீரபாண்டியபட்டினத்தில் அமைந்திருந்த ஏற்றுமதி இறக்குமதி நடைபெற்ற துறைமுகத்தில் பெறப்பட்ட நாலு பணத்தில் அங்கிருந்த பள்ளிவாசலுக்கு கால்பணம் விழுக்காடு வழங்கிட ஆணையிட்ட பெருமைக்கு சான்றாகும். அக்காலத்தில் கோயில் என்பது மன்னனனுடைய அரண்மனையும் தேவர் என்பது தெய்வத்திற்கு நிகராக மன்னனை கருத வேண்டும். என்பதற்காக மன்னனையும் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட சொல்லாட்சி. கி.பி 1515 இல் மாபெரும் வெற்றிவீரனாகத் திகழ்ந்தவர். வீரமார்த்தாண்ட உதயவர்மன் மதுரையிலிருந்தும் பிற பகுதிகளிலிருந்தும் எதிரிகளின் தாக்குதல்களையும், கள்ளர்களின் தீ வட்டிக் கொள்ளையை முறியடிக்கவும் தன்னுடைய படையான எட்டுவீட்டு நாடார் மார்த்தாண்டர்களின் படையை பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தியுள்ளார். இவருடைய தென்காசி படையெடுப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். தென்காசியில் ஸ்ரீ வல்லபமாற பாண்டியனுக்கும் அவரது மருமகனான சிவனணைந்த பெருமாளுக்கும் இடையே திருமண சம்பந்தம் தொடர்பாக போரும், தென்காசியில் மாபெரும் கலகமும் நடைபெற்றது. அந்நேரமும் உள்புகுந்த வீரமார்த்தாண்டனின் தம்பி குமாரவீர மார்த்தாண்டன் தென்காசி மற்றும் செங்கோட்டை வரை சென்று சீவல்லபமாறனையும் ஆட்சி பீடத்திலிருந்து விரட்டினான். இப்படையெடுப்பிற்கு தலைமையேற்று போரை முன்னிட்டு நடத்தியது. தற்போது குட்டத்தில் அரசாட்சி செய்துவரும் மார்த்தாண்டன்களின் முன்னோர்களே. தென்காசி அருள்மிகு உலகம்மை சமேத காசி விசுவநாதர் கோயிலுக்கு திருப்பணிகளைச் செய்து குடமுழுக்கு நிகழ்த்தினார். இப்போருக்குப்பின்பு களக்காடு, கடையம் ,வேணாடு காவல் உரிமைகளை பல தலைவர்களுக்கு வழங்கி அந்நியர் படையெடுப்பைத் தடுத்தார் . வேணாட்டில் ஆட்சி மாற்றங்களும் தொடர்ந்த பகைகளும் மன்னர்களாகவும், மன்னர்களுக்கு உடனான நிலையிலும் அனைத்து உரிமைகளுடன் கல்குளம் (பத்மநாபபுரத்தில்) கொட்டாரத்திலும் அதற்கு அருகிலும் வசித்து வந்தவர்கள் தான் குட்டம் மார்த்தாண்டன் வகையறாக்கள். இவர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாததால் களரிப்பயிற்றில் தேர்ந்தவர்களாக இருந்தனர். போர்க்காலங்களில் எதிரிகளை வீழ்த்துவதற்கும், சமாளிப்பதற்காகவும் நெருக்கடியான காலங்களில் தங்களுடைய உயிரையும் சார்ந்தவர்களையும் காப்பாற்றுவதற்காகவும் களரியில் தேர்ந்தவர்களாக குட்டம் மார்த்தாண்டன் முன்னேர்கள் இருந்தனர். தென் திருவிதாங்கூர் மற்றும் வேணாடு பகுதிகளில் மார்த்தாண்டன்களின் குடும்பத்தினரின் (ஆசான்களால்) உருவாக்கப்பட்டு பேணப்பட்ட அரிய தற்பாதுகாப்புக் கலை தான் தெக்கன் களரி, சிறுவர், சிறுமியர், பெரியவர், பெண்கள் என அனைவரும் வீரமும் விவேகமுமிக்கவர்களாக இருந்தனர். இப்பயிற்சி களரிப் பயிற்சி எனப்பட்டது. கம்பு, வாள், வடிவாள், சுருகை, சுருட்டுவாள், கட்டாரி, வெண்மழு, ஈட்டி, கேடயம், கதை, வில் உள்ளிட்ட ஆயுதங்களைப், பயன்படுத்தும் பயிற்சியையும் வர்ம பயிற்சி சித்த மருத்துவ முறைகளையும் களரிப் பயிற்சியில் உண்டு இக் கலையில் நிபுணர்கள் மார்த்தாண்டர்கள். படைத்திறனால் இவர்களுள் ஒரு பிரிவினர் எட்டு வீட்டு நாடார்கள் (துரத்தார்) என்று அழைக்கப்பட்டதாக திருவிதாங்கூர் வரலாற்றைப்பதிவு செய்த நாகமய்யா குறிப்பிட்டுள்ளார் பத்மநாபபுரம், உள்ளிட்ட தலை நகரத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு வரிவசூல் இவற்றை இவர்கள் கவனித்து வந்தனர்.மதுரை,நெல்லை, மற்றும் பிற பகுதிலிருந்து வரும் எதிரிகளின் படையெடுப்பைத் தடுக்கும் விதத்தில் எட்டு வீட்டு நாடார் மார்த்தாண்டனின் தலைமையில் காவல் ஆட்சி உரிமை வழங்கப்பட்டு பாதுகாப்பும், கோயில் மாநியம் வகைகள் செய்யப்பட்டன. திருமலை நாயலுவின் ஆட்சிக்காலம் கி.பி 1623-1659 இதில் தளபதி இராமப்பையன், நெல்லை பொறுப்பாட்சியராக வடமலையப்ப பிள்ளையும் இருந்தனர் .நாடார்களின் நாடாண்ட பண்பு தலை தூக்கக்கூடாது என்பதில் குறியாக இருந்தனர்.பாளையங்கள் பிரிக்கப்பட்டு அனைத்தும் பிற நாயலுகளுக்கு தாரை வார்க்கப்பட்டன. பாண்டிய நாட்டில் படைவீரர்களாக இருந்து காவல் உரிமைக்காகக் காட்டிக்கொடுத்த சில துரோக்கக் கும்பலுக்கும் பாளையங்களில் ஒன்றிரண்டைக் கொடுத்தனர். நாடார்களின் கோட்டைகளையும் , அரண்மணைகளையும் தரையோடு தரை மட்டமாக்கினர். நாடார்கள் ஆயுதங்கள் எடுப்பதற்கும் ஆயுதங்கள் வைத்துக்கொள்வதற்கும் தடை செய்யப்பட்டனர். கோயிலைக் கட்டுவித்து திருப்பணிகளும், திருவிழாக்களும் கண்ட நாடாள்வானுக்கு கோயில் நுழையும் உரிமை மறுக்கப்பட்டது. தேரோடிய வீதிக்குள் சான்றோர்களின் உரிமை மறுக்கப்பட்டது. இது கேட்ட பத்மநாபபுரத்திலிருந்த சந்திரமார்த்தாண்டன் குமாரவீர மார்த்தாண்டன் தன்னுடைய சகோதரர்கள் மூலம் மாபெரும் கிளர்ச்சியை தென்னாட்டில் வேரூன்றினர். கலகங்களும், கலவரங்களும் நாடார்களின் நாடாண்ட வீர உணர்வுகளைக்காட்டின .இது தென்னாட்டுக் கலகம் என்று அழைக்கப்பட்டது. தம்பிமார் கலகம் கி.பி.1721 – 1729 வரை வேணாட்டை ராமவர்மன் என்னும் அரசன் ஆட்சி செய்து வந்தார் இவர் சான்றோர் [நாடார்] இனத்தைச்சேர்ந்தவர் . இவர் அபிராமி என்ற வேறு இனப்பெண்ணைத் திருமணம் செய்து அவளுக்கு பப்புத் தம்பி [பத்மநாபன் தம்பி] இராமன் தம்பி என்ற இரு இளவரசர்கள். இரணியல் அரண்மனையில் வாழ்ந்து வந்தனர். தென்னாட்டு மரபுரிமைபடி மகன் வழி உரிமையில் இவர்கள் இருவரும் அரசுரிமை கோரினர்.ராமவர்மாவின் மரணத்திற்குப் பின்பு வாரிசுரிமைப் போர் தொடங்கியது.ராமவர்மாவின் மற்றொரு உறவின் வழி மருமகனான பாலமார்த்தாண்ட வர்மா [1729-1758] மருமக்கள் வழிமுறையே சரியென ஆட்சியுரிமை கோரினான். ஆட்சியைப்பிடிக்க மருமகனும் ;மகன்களும் ஆதரவைத் திரட்ட ஆரம்பித்தனர். கலகங்களும் உருவாயின. எட்டு வீட்டு நாடார் படை ராமவர்மாவின் மகன்கள் பத்மநாபபுர அரண்மனையில் கோட்டையில் வசித்து வந்ததால் வெள்ளை நாடார்கள், பணிக்க நாடார்களின் ஆதரவும் பிற மக்களின் ஆதரவும் பெருகிற்று. ராமவர்மாவின் உறவினர்களும் மன்னனுக்கு அடுத்த நிலையில் இருந்த எட்டு வீட்டு நாடார்களான சந்திரமார்த்தாண்டன், குமாரவீர மார்த்தாண்டனின் துரத்தார் படையும், நாகமணி மார்த்தாண்டன் ஆகியோரும் தம்பிமார்களை எதிர்த்து பாலமார்த்தாண்டனுக்கு ஆதரவு அளித்தனர். பாலமார்த்தாண்டவர்மாவுக்கு மாமனான ராமவர்மாவின் அரண்மனை ஆதரவும், மக்கள் ஆதரவும் முதலில் கிடைக்கவில்லை.ரவிவர்மாவிற்கு அடுத்தநிலையில் இருந்த உறவினர்களான பாலமார்த்தாண்ட எட்டு தூர நாடார்களின் ஆதரவு கிடைத்தது. இருந்தாலும் அச்சத்தினால் பாலமார்த்தாண்டன் காடுகளிலும், மலைகளிலும் தன்னுடைய ஆதரவாளர்களின் குடியிருப்புகளிலும் தலைமறைவாக இருந்து தன்னுடைய படைபலத்தைப் பெருக்கினான்.அவருக்கு அனந்த பத்மநாபன் நாடார் ,முண்டல்,ஓட்டன் ஆகியோரின் ஆதரவும் கிடைத்தது. பப்புத்தம்பிக்கும்,ராமன் தம்பிக்கும் எட்டுவீட்டு பிள்ளைகள் மற்றும் நாடார்களில் ஒரு பிரிவினர் பலமான ஆதரவு அளித்தனர். குமாரவீர மார்த்தாண்டனின் எட்டுதுரம் நாடார் மதி நுட்பமாக வியூகங்களை வகுத்துக்கொடுத்த ஆலோசனைப்படி தம்பிமாரின் கலகத்தை ஒடுக்கினான் பாலமார்த்தாண்டன்.இது பற்றி ஓட்டன் கதைப் பாடல் ‘’அவன் நாடுநீளம் நடநடந்து எட்டுதூரம் போய் வருவான் எட்டுதுரம் நாடாழ்வார் அவன் முணுமுணுப்பை கேட்டறிவார்’’ '’ குமாரவீர மார்த்தாண்டனின் எட்டுவீட்டு நாடார்சேனையும் அனந்த பத்மநாபநாடானின் தந்தை பொறையடி தாணுமாலயனின் 108 களரிகளின் ஆசான்களும் பாலமார்த்தாண்டனுக்கு வலிமை சேர்த்தனர்.தம்பிமாரின் படைகள் மாங்கோடு ஆசானின் விட்டை தீ வைத்து அழித்தனர் நாடார்கள் தாக்குதலுக்குளானார்கள் , பாலமார்த்தாண்டனுக்கு ஆதரவாக கல்குளம் [பத்மநாபபுரம்] கோட்டைக்குள் தம்பிமாரின் படைகள் மீது தாக்குதலை நடத்தினர் இருபுறமும் பலர் இறந்தனர். மன்னன் ராமவர்மாவின் மகன்களான் பப்புத் தம்பியும் , ராமன் தம்பியும் மரணமடைந்தனர்.வேணாட்டின் மன்னனுடைய மகன்கள் கொல்லப்பட்டனர் என்றசெய்தி காட்டுத் தீ போல பரவிற்று.மிகப்பெரிய அவலத்தையும் , கலவரத்தையும் உருவாகிற்று. அனந்தபத்மநாபனின் களரி வீரர்களான ஓட்டன், முண்டல் ஆகிய இருவரும் தோவாளையில் கொல்லப்பட்டனர். வேணாட்டின் நாடார்குலத்தின் கடைசி மன்னனான ராமவர்மாவின் வாரிசுகளான பப்புத்தம்பி, ராமன் தம்பி ஆகியோரின் உடல்களை அரசாங்க மரியாதையுடன் அடக்கம் செய்த பாலமார்த்தாண்ட வர்மா,கி.பி 1729 இல் வேணாட்டின் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். மன்னனான உடன் முதல் வேலையாக எட்டுவீட்டு பிள்ளைகளின் குடும்பத்தில் ஆண்கள் அனைவரையும் கழுவிலேற்றிக் கொன்றான். தனக்கெதிராக எட்டு வீட்டு பிள்ளைகளோடு கூட்டணி வைத்த மாடம்பிமார்கள்[நம்பூதிரிகள்] அனைவரையும் கழுவிலேற்றிக் கொன்றான். எட்டு வீட்டுப் பிள்ளைகளின் மனைவிமார்கள் மற்றும் குழந்தைகளை அடிமைகளாக திருவனந்தபுரத்தில் ஏலம் விட்டான். அவர்களிருந்த வீட்டை இடித்து தரைமட்டமாகியதோடு அவ்விடத்தில் குளம் ஒன்றையும் வெட்டினான் பாலமார்த்தாண்டன். மிகப்பெரிய அவலம் எட்டுவீட்டுப் பிள்ளைகளில் எவரும் உயிர்தப்பவில்லை என்ற வரலாற்று உண்மையை திருவாங்கூர் ஆவணங்கள் கூறுகின்றன.. கி.பி 10 ஆம் நூற்றாண்டு இறுதியில் சேர நாட்டின் வடபகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள்பல்வேறு மோசடி ராஜ தந்திரங்களைக் கையாண்டு கொண்டு வந்த நாயர்,நம்பூதிரி கூட்டணி பாலமார்த்தாண்டன் காலம் வரை கொச்சிக்குத் தெற்கே அடியெடுத்து வைக்கமுடியவில்லை காரணம் நாடார்களின் திற்பாப்பூர் பரம்பரையிலான நாடார்களின் ஆட்சியும், நிர்வாகமும் ஒடுக்கி வைத்திருந்தது. பால மார்தாண்டவர்மா தான், மன்னனாக உறுதுணையாக நின்ற அனந்த பத்மநாபன் நாடார், குமாரவீர மார்த்தாண்டன் ஆகியோருக்கு பல்வேறு சிறப்புகளைச் செய்தான். குமாரவீர மார்த்தாண்டனின் எட்டுவீட்டு நாடார் சேனையின் ஒரு பிரிவிற்கு திருவனந்தபுரத்தில் குடியமர்த்தி சிறப்புச் செய்தான். இக்காலத்தில் தலைநகரத்தை கல்குளத்திலிருந்து திருவிதாங்கூருக்கு மாற்றிஅமைத்தான் பாலமார்த்தாண்டன் வலிமையான கப்பற்படையையும் வைத்திருந்தான்.இக்காலத்தில் பாலமார்த்தாண்டனின் புதிய தளபதியாக ஏர்வாடியைச்சேர்ந்த தளவாய் ஆறுமுகம் பிள்ளை பொறுப்பேற்றான். நாடார்களை பல்வேறு அரசுப் பொறுப்புகளிலிருந்தும் படைகளிருந்தும் நீக்க ஆரம்பித்து அவ்விடங்களில் நாயரையும் பிறரையும் நியமனம் செய்தனர். மார்த்தாண்டனால் தன் உறவினர்கள் ஒதுக்கப்படுவதைச் சகிக்க இயலவில்லை. நாட்டைப் பலப்படுத்துவதிலே கவனம் செலுத்தினான்.மறுபுறம் தன்னை ஒழித்துக்கட்ட முயலும் எதிரிகளைக் களை எடுப்பதிலும் கவனம் செலுத்தி வந்தான். கி.பி.1758 இல் பால மார்த்தாண்டன் மர்மமான முறையில் இறந்தான். அவருக்குப் பின்பு ஆட்சிக்கு வந்த கார்த்திகைத் திருநாள்ராமவர்மன் இவர் திற்பாப்பூர் மார்த்தாண்ட நாடான் பரம்பரையில்லை. ஆட்சி அதிகாரம் நம்பூதிரி,நாயர் தலைமைக்கு மாறியது. நாட்டின் பெயர் வேணாடு என்றிருந்தது திருவாங்கூர் என்றாயிற்று. குட்டத்தில் பாளையமிடுதல் நன்றி மறந்த பாலமார்த்தாண்டனை எண்ணி வருந்தியதோடு, நாயர், நம்பூதிரி கூட்டணியின் சதிகளிலிருந்து குமாரவீரமார்த்தாண்டனின் எட்டு வீட்டு நாடார்களும்,வெள்ளை நாடார்களும்,பணிக்க நாடார்களும், ஆதித்த நாடார்களும், நாகமணி மார்த்தாண்ட நாடார்களும், மும்மண்டலாதிபதி மண்டைக்காட்டு நாடார்களும்,குலசேகரப்பெருமாள் நாடார்களும், அனைத்து படைகளுடன் கீழ்பகுதி கடற்கரையோரம் சென்று தங்களுடைய எல்கைக்குள் கோட்டையிட்டுக்கொண்டனர் . வீரவள நாட்டில் குட்டத்தில் சந்திரமார்த்தாண்ட பணிக்க நாடார்களும், குமார வீரமார்த்தாண்டன் நாடார்களும், குடநாட்டில் ஆதித்தன் நாடார்களும், பணிக்க நாடார்களும்,வெள்ளை நாடார்களும், நாகமணி மார்த்தாண்டநாடார்களும், மும்மண்டலாதிபதி மண்டைக்காடு நாடார்களும், குலசேகரப் பெருமாள் நாடார்களும் தங்களுடைய படைபலத்தால் பாளையங்களை அமைத்துக்கொண்டனர். நிலைமைக்கார மார்த்தாண்ட நாடார்கள் இடையன்குடி கிராமப் பகுதி, குட்டம் மார்த்தாண்டன் வகையறாக்களுக்குச் சொந்தமாக அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. குட்டத்தில் வாழ்ந்த மார்த்தாண்ட நிலப் பிரபுக்களிடம் மதம் பரப்புவதற்காக வருகை தந்த கார்டுவெல் பணிந்து வேண்டிக்கொண்டதன் பேரில், அவருக்கு இடையன்குடியை 99 வருட குத்தகைக்குக் கொடுத்தனர். இடையன்குடியில் வாழ்ந்த அனைத்து ஜாதி மக்களும் குட்டம் மார்த்தாண்டன் வகையறாக்களுக்கு குடியிருப்பு வரி, குடும்பங்களில் நிகழும் சுப, அசுப காரியங்களுக்கு உரிய வரிகளைச் செலுத்தி வந்தனர். 99 வருடக் குத்தகை எடுத்தவர்கள் கூட குடியிருப்பு வரி செலுத்துவதில் இருந்து மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டிருந்தனரே தவிர, அவர்கள் குடும்பத்து மங்கல, அமங்கல நிகழ்ச்சிகளுக்கு வரிகட்டியாக வேண்டும் என்கிற நிலையும் இருந்தது. கால்டுவெல் தாம் குத்தகைக்கு எடுத்த பகுதியில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பனையேறிச் சான்றார் போன்ற சான்றோர் சமூகத்தின் கீழ் அடுக்குகளைச் சேர்ந்த மக்களைக் குடியேற்றி அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து தாய் மதத்தை மாற்றி தேவாலயம், அதனுடன் சேர்ந்த பள்ளிக்கூடம் ஆகியவற்றையும் கட்டினார். இந்நிலையில் அங்கு வாழ்ந்த கிறிஸ்தவ மக்களின் குடும்பங்களில் நடக்கும் மங்கல அமங்கல நிகழ்ச்சிகளுக்கான வரியினைக் குட்டம் மார்த்தாண்ட நாடார்கள் கட்டாயமாக வசூலிக்க முயன்றனர். தாம் 99 ஆண்டு நிலவரியைக் குத்தகையாகக் கொடுத்து விட்டதால் மேற்கொண்டு வரி எதுவும் தம் ஊரில் குடியிருக்கும் மக்கள் கொடுக்க மாட்டார்கள் என கால்டுவெல் கூறினார். குடியிருப்பு வரி செலுத்துவதில் இருந்துதான் விலக்களிக்கப்பட்டு உள்ளதே தவிர, அரசு இறை அல்லது ஜோடி வரி வசூலிக்கும் உரிமையைத் தங்கள் வசமே வைத்திருப்பதாகவும், அதுதான் தம்மைப் போன்ற நிலைமைக்கார நாடார்கள் வழக்கம் என்றும் குட்டம் மார்த்தாண்டநாடார்கள் எச்சரித்து கூறினர். வரியையும் வசூலித்தும் விட்டனர். குட்டத்தைச் சுற்றியுள்ள கொம்மடிக்கோட்டை, படுகைப்பத்து, செட்டியாபத்து, தண்டுபத்து, காயாமொழி போன்ற 50-கும் மேற்பட்ட நிலைமைக்கார நாடார்களின் ஊர்கள் உள்ளன. இங்கு அரச குலச் சான்றோரான நிலைமைக்கார நாடார்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்புக்கள் 1] Tinnevely District Gazetteer,page.338,339 ‘Among thae most successful kavals are the few which are held by the channans,or panikkans [as they style themselves]of Chidambarapuram [Nanguneri Taluk] are the holders of a kaval which extends over the neighbouring village of Kalakka,Pattai,Koilpatti,Nangulam and Vijayarajapuram. ‘ According to a copperplate in thr possession of the head panikkan,bearing the date saka 1422 [AD 1500-01] the right was originaly granted to the shanans of the place by Thirumeni Malandan,who may have been the reperesentative of the Travancore ruler at the time when he was in possession of a portion of the Tinnevelly District.Four of these villages the kaval of which the channans had allowed the maravans to annex have lately been restored to their rightful protectors by the intervention of the police.At KUTTAM again in the Nanguneri Taluk,and at Kadaiyam[Ambasamudram] the kaval is in the hand of Shannans,or Pannikkans’. 2] துரத்துக்காரர் துரத்துக்காரர் எனும் பதவி வேணாட்டு சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தின் முக்கியப்பங்காற்றியது.வரிவிதிப்பு தொடர்பாக மக்களிடமிருந்து வரும் புகார்களை துரத்துக்காரர்கள் விசாரித்து தீர்ப்பு வழங்கினர் [ தென்குமரியின் கதை.பக்கம்-70 ] கோயில் திருவிழா செலவோடு துரத்துக்காரர்க்கான செலவும் சேர்த்துக் கொள்ளப்பட்டதை கி.பி.1697 ஆம் ஆண்டின் ஆரல்வாய்மொழி கல்வெட்டு தெரிவிக்கிறது. பாட்டம் செலுத்தாத தோவாளைப் பகுதி வெள்ளாளர்கள் மீது துரத்துக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்ததாக கி.பி.1703 ஆம் ஆண்டின் ஓலைச் செய்தி தெரிவிக்கிறது,[TAS-VPage-215] 3] தமிழர் வரலாற்றில் வேணாடு,ப.77 துரத்தார் எட்டுதுரத்தார் அல்லது எட்டு வீட்டு நாடார் என அழைக்கப்பட்டனர் [Nagam Ayya.TSM/II/393] பால மார்த்தாண்டனுக்கு எதிராக தம்பிமார் கலகம் செய்த போது ஓட்டன் எட்டுதுரம் நாடாழ்வார் ஆலோசனையைக் கேட்டு செயல்பட்டதாக ஓட்டன் கதைப்பாடல் தெரிவிக்கிறது. 4] குட்டம் மார்த்தாண்டன் பற்றிய குலசேகரன்பட்டினம் கல்வெட்டு காலம் - கி.பி.1752 ஐச் சேர்ந்த 98 வரிகளைக் கொண்ட கல்வெட்டு முன்புறம் 1. உ சாலிவாகன சகாப்தம் 2.......ன் மெற் சொல்லாநின்ற பிறமோத் 3. தை................................................................. 4. ம்மியும் [ நஷ்ஷத்திரமும்].... 5. மா படியும்............யும் கலி 6.....டிக் காணமும்........ 7.த்த................யொம் 8. பிரத........தன்ம..........ப்பட்டயம் 9. நிலை நாட்டாவது ராசமன்னிய... 10. ர்தளவாய்[தீத்தார]ப்ப முதலியார 11. வர்கள் அதிகாரத்தில் குலசெகர 12. ம்பட்டணம் குமாரசுவாமிமூப்பனார் 13.பண்டாரம் செட்டியார் [பிச் ]சையாண் 14. டி செட்டியார் உடங்குடி கண்டு 15. கொண்டாபிள்ளை முதலாகிய 16.பட்டடையாரும் அரசூர் மாத்தாண் 17. டப்பிள்ளைமுதலாகிய[வெள்ளா] 18. ம் பத்தாரும் குட்டம் சந்திர ம 19. ரத்தாண்டப் பணிக்க நாடான் 20. குமாரவீர மாற்தாண்ட நாட 21. ரன் முதலாகிய சாண்பத்தாரு 22. ம் மத்துமுள்ள நாட்டார் நாடாக் 23. கள் சகலருமொம் நம்முடைய 24. நாட்டிலிருக்கிற பலபட்டை 25 .செருகுடிச் சாணார் பனைமரச்ச 26 ரணார் மினைகெடன் முக்காந்த 27. மார் மலையாளத்துச் சாணார் உள் 28. ளிட்டாருக்குச் சாதனப் பட்டையம் 29. மெளுதிக்குடித்தபடி பட்டைய 30. மாவது பட்டடையார் சாணார் இரு 31.ந்த ஊருக்கு பகுதிமன் வகை 32. ஊர்ச்சன வரியும் ஏறின 33. பனைக்கு வாரமும் எடுத்த செ 34. ரத்துக்குக் கடமை பாட்டமு 35. ம் மாமூல்படிக்கு ரெட்டியும் 36. அரமனைச் சனவரியும் ராசியா 37. க வெகுமான வரியும் வாங்கிக் 38. கொள்ளுகிறதெ அல்லாது வெறெ 39. தெண்டாம் பரும்பிடி வாங் 40. கிறதென இல்லைக் கிறாமத்தி 41. லெ ஊரான் நிலைமை கா 42. றன் குடியிருக்கிற வரையிலும் 43. குடிபோய் விட்டாலும் அந்த ஊ 44. ரிலிருக்கிற குடியான பெரிட 45. த்தில் தெண்டம் வாங்கறதெ இல் 46. லை நிலமைக் காறன் நீக்கி பின்புறம் 47. பொதுவாங்கி வ 48. ந்த................................ 49. ............பது ஆ சி.......வா 50. ............தி............. 51. ..........................பெற வெணு 52. மென்று........லாக 53. வெ................ந்து வாரா 54. கிறதெ.................வாது கரு 55. ப்பு கட்டி [எ] க்கிறதி 56. ல்லதெ................புள்ளியி 57.ல்லதெ தெண்டம் பிடிக் 58. கிறதுமில்லை இந்தபடி 59.எழுதின பட்டையப்படி 60. க்கு வாங்கிக் கொள் 61. வொ மாகலு இதற் 62. கு அரமனையார் தெண் 63. டம் பரும்பிடி வா[ங்க] 64. வெணுமென்று சொ[ன்] 65.னால் ஒருதனாலும் இ 66. தற்கு உடனொதுச் சம்ம 67. திக்கிற தில்லை இதற்கு[அ] 68. னு கூலம் பண்ணின 69. பெர் காசியிலெ கொடி 70. அசுமெதி யாகம் ப 71. ணின பலனும் [ம] 72. க்கதில் கட[ன்] செய்த 73.பலனும் பெறுவார்களா 74. கவூ இதற்கு இடைகூறு 75.நினைத்த பெர் மாதா 76. ப்பிதாவை வரை செ 77. த தொசத்திலெ 78. மாத்ரு கெவுனம் ப 79. ண்ணின தொசத்தி 80.லும் பொவாராக 81. வூ இதற்கும் தட்டி ந 82. .....................த்தின பெர் சித வ 83. நத்திற் வதை செ 84. ய்த பாவத்திலெ 85. பொவாராகவூ இப் 86. படி சம்மதித்து சிவ 87. ............................................... 88........டுத்தொம் நாட்டார்...நாடாகழுமொம் பட்டடை..... 89.....சாணார் மனிக் கெடன் முக்[கந்த]மார் மலையாளத்து 90. சாணார் உள்ளி[ட்டா]ருக்கு குமார......ண்டார் பிச்சையாண் 91................கொண்டபிள்ளை மாத்தாண்டன் சந்திரமாத்தாண்ட 98. ..............நாடான் குமாரவீரமாத்தாண்ட நாடான் னென். குலசை கல்வெட்டு கூறும் சான்றோர் சமூக உட்பிரிவுகள் கி.பி 1750 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் நாடார் சமூகத்தின் ஐந்து உட்பிரிவுகளை குறிப்பிட்டுள்ளன.தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உதைய மார்த்தாண்ட விநாயகர் கோயிலின் முன்னர் நிறுத்தப்பட்டுள்ள கல்தூண் ஒன்றில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. மதுரை நாயக்க அரசு முற்றிலும் வீழ்ச்சி அடைந்து மறைந்து விட்ட நிலையில் தளவாய் தீத்தாரப்ப முதலியார் தென்பாண்டி நாட்டின் நிர்வாகியாக நீடித்த சூழலில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. தீத்தாரப்ப முதலியார் வெள்ளான் பற்று,சாண் பற்று என்ற இருவகை நிலங்களை உரிமையாகப்பெற்றிருந்த வேளாளர் மற்றும் சான்றார் சாதியினருக்கு வழங்கிய வரிச்சலுகைகள் இக்கல்வெட்டில் அரசாணையாகப் பொறிக்கப்பட்டுள்ளன. 5] ராதாபுரம், பெட்டைக்குளம் பகுதியில் காணப்படும் கல் செக்கு காலம் கி.பி.1756 அவற்றில் சந்திரமார்த்தாண்ட பணிக்க நாடான், குமார வீரமார்த்தாண்டன் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 6] இடையன்குடி என்ற தங்களுக்குச் சொந்தமான இடத்தை மதம் பாராது நிலைமைக்கார மார்த்தாண்ட நாடான்கள் கொடுத்தும் நன்றி மறந்து நாடார் இனத்தை இழிவுபடுத்திய மத போதகர் கார்டுவெல் கி.பி 1840, 1847-1851 ஆகிய ஆண்டுகளில் அயர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சத்தில் பல இலட்சம் மக்கள் மடிந்ததும், தப்பியவர்களில் பலர் அமெரிக்காவிற்கு குடியேற சென்றதும் சிலர் இந்தியா போன்ற நாடுகளுக்கு மதபோதகர்களாய் வந்ததும் கத்தோலிக்கர்களின் குற்றச்சாட்டை நிரூபிப்பதாக அமைந்துள்ளது. கால்டுவெல் 8.1.1838ல் சென்னையில் தனது காலை ஊன்றினார். பின்னர் 28.11.1841ல் நாசரேத் மற்றும் இடையன்குடி வந்து சேர்ந்து தனது வேலையை ஆரம்பித்தார் ................. ....................... நாடார்களை பொருத்தளவில் அவர்கள் அன்றும் இன்றும் மற்றவர்களின் வீட்டு எடுபிடி வேலைகளை செய்வது இல்லை. கால்டுவெல், தனது இருப்பிடத்தில் எடுபிடி வேலைகளை செய்ய நாடார்களை நியமித்தபோது அவர்கள் எதிர்த்து கிளர்ந்தனர். இந்நிகழ்ச்சி அன்னாருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. எனவே அயர்லாந்தில் செல்டிக் மக்களை அவமானபடுத்தியது போன்று இங்கு நாடார்களையும் அவமானப்படுத்த எண்ணினார். அதன் பொருட்டு கால்டுவெல் 1849ம் ஆண்டில் “திருநெல்வேலி சாணார்கள், அவர்களின் மதம் – மனநிலை மற்றும் பழக்க வழக்கங்கள்” (Tinevelly Shanars, a Sketch of Their Religion and Their Moral Condition and Characteristics, as a Caste) எனும் 77 பக்கங்கள் கொண்ட ஓர் சர்ச்சைக்குரிய பிரசுரத்தை ஆங்கில - கிறித்துவ அரசு ஆதரவுடன் ஆங்கிலத்தில் சென்னையில் வெளியிட்டார். அடுத்த ஆண்டில் இது புத்தகவடிவாக லண்டனில் வெளியிடப்பட்டது. இப்புத்தகம் இன்றும் சென்னை கன்னிமாரா படிப்பகத்தில் உள்ளது. அப்புத்தகத்தில் கால்டுவெல் வரிக்கு வரி நாடார்களையும், பக்கத்திற்கு பக்கம் பிராமணர்களையும், இந்து சமயத்தையும் இழித்தும், பழித்தும் கூறியுள்ளார். நாடார்களைப் பற்றி என்ன கூறுகின்றார் என பார்க்கலாம். நாடார்களுக்கு (சாணார்களுக்கு) பனை ஏறுதலும், கருப்பட்டி தயாரித்தலும் முக்கிய தொழில். சிலர் விவசாயிகளாகவும், வியாபாரிகளாகவும் உள்ளனர் (புத்தகத்தின் பக்கம் 4) சாணார்கள் - ஸ்ரீலங்காவிலிருந்து தமிழக தென் மாவட்டங்களில் குடியேறிய “வந்தேறிகள்”. அவர்கள் குடியேற வந்தபோது பனங்கொட்டைகளை தமிழகம் முழுவதும் விதைத்தனர். (பக்கம் 4 / பத்தி 3) சாணார்கள், கடவுளுக்கு பயப்படுகிறவர்கள் அல்ல. பொய் சொல்வதற்கு தயங்காதவர்கள். ஏமாற்று வேலையையும், தாழ்வான குணங்களையும் உடையவர்கள், (பக்கம் 33) . இவர்கள் அறிவுபூர்வமானவர்கள் அல்லர். மிகவும் கோழையர்கள் கூட இவர்கள் நன்றி மறப்பவர்கள். சுயநலவாதிகள், சதிகாரர்கள், ஏமாற்றுக்காரர்கள், வணிக பொருள்களை திருடுபவர்கள், (பக்கம் 38, 39), படிப்பறிவு இல்லாதவர்கள் (பக்கம் 52), நிலப்பிரச்சனைகளிலே காலத்தை கழிப்பவர்கள் (பக்கம் 54). சாணார்கள் சுய சிந்தனை அற்றவர்கள். சுயமாக சிந்திக்காமல் தங்களுடைய முன்னோர்கள் செய்த / கூறிய செயல்களுக்கே மதிப்பு கொடுப்பவர்கள். தங்களின் வாழ்நாளில் பாதியை சோம்பேறித்தனமாகவே கழிப்பவர்கள். எந்த தொழிலை செய்தாலும் இவர்களுக்கு அதனை பூரணமாக செய்யும் திறமை கிடையாது. கடனில் மூழ்கி இருப்பவர்கள், ஏழைகள் (பக்கம் 58). மொத்தத்தில் மேற்கிந்திய தீவிலுள்ள நீக்ரோ அடிமைகளை விட சாணார்கள் அறிவாற்றலிலும், செயல்திறனிலும் தாழ்ந்தவர்கள் (பக்கம் 62) என்றும் எழுதியுள்ளார்;. அத்துடன், திராவிடர்கள் மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்களுக்கு முன்பு இந்தியாவில் குடியேறியவர்கள் (வந்தேறிகள்) என்றும், அவர்களின் இந்திய தமிழ்மொழி யுக்ரயின் (Ukraine) நாட்டு பகுதிகளில் பேசப்படும் ஸ்கைத்திய மொழி குடும்பத்தைச் சார்ந்த (வந்தேறி), மொழியென்றும் அடையாளம் காட்டியுள்ளார். ( பார்க்கவும் அன்னாரின் ஒப்பிலக்கண நூல்.) கால்டுவெல்லுக்கு மறுப்பு இக்காலக்கட்டத்தில், இந்துக்களின் ஒரு பிரிவினர் கால்டுவெல் பாதிரியாரின் பொய் பிரச்சாரத்தை உண்மை என நம்பி, நாடார்களை (சாணார்களை) இழிந்த சாதியினர் எனவும், அவர்களை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது எனவும் தடுத்தனர். இது சம்பந்தமாக வழக்கு ஒன்றும் நாடார்களுக்கு எதிராக ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது (OS நம்பர் 88 of 1872). அவ்வமயம் ஈரோடு மாவட்டம் பாசூர் எனும் ஊரினை தலைமையிடமாகக்கொண்ட மடாதிபதி அய்யாச்சாமி தீட்சிதர் (பிராமணர்) அவர்கள் கால்டுவெல் பாதிரியாரின் பொய் பிரச்சாரத்தை கடுமையாக எதிர்த்தார். அதுமட்டுமின்றி நாடார்கள் ஸ்ரீலங்காவிலிருந்து இங்கு வந்து குடியேறிய வந்தேறிகள் அல்ல என்றும்,அதற்கு மாறாக அவர்கள் த மிழகத்தை ஆண்ட பாண்டிய குலத்தை சார்ந்தவர்கள், சத்திரியர்கள் எனவும் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். மடாதிபதியின் சாட்சியத்தை அடிப்படையாக கொண்டு ஆலய பிரவேச தடுப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. நாடார்கள் வென்றனர். இதுபோன்று தோன்றிய கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆலய பிரவேச வழக்கில் (OS 33/1898) நாடார்களுக்காக தில்லைவாழ் (தீட்சிதர்) அந்தணர்களும், பாசூர் அந்தணர்களும் மதுரை சார்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.. நாடார்களுக்கு எதிராக நீதிமன்றத்தில், கால்டுவெல் அவர்களின் பிரசுரங்கள் முன் வைக்கப்பட்டன. இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி, நாடார்களுக்காக சாட்சியம் கூறிய தீட்சிதர்களையும், பாசூர் அந்தணர்களையும் கடுமையான அவமதிப்பிற்கு உள்ளாக்கினர். (பக்கம் 167-170-தோள் சீலைக்கலகம்). நாடார்கள் தண்டிக்கப்பட்டனர். கால்டுவெல்லுக்கு எதிர்ப்பு சாணார்களைப் பற்றி கால்டுவெல் எழுதிய கருத்துக்கள் அக்காலகட்டத்தில் கிறித்துவ நாடார்கள் மத்தியிலும்கூட பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. எதிர்ப்பை முன்னின்று நடத்தியவர்அருமை நாயகம் என்ற சாட்டாம்பிள்ளை எனும் கிறித்துவ சாணார் இவர் கொற்கை கிராமத்தை சார்ந்த பணக்கார சாணார். இவரை தவிர சாமுவேல் சற்குணர், ஞானமுத்து நாடார் ஆகிய கிறித்துவ சாணார்களும் கால்டுவெல் பாதிரியின் கருத்துகளை கடுமையான சாடினர். கால்டுவெல் தமிழ்ச் சரித்திரத்தை சரியாக புரியாதவர். பொய்யர், ஒரு சில நடப்புகளை உலக நடப்பு என பேசக் கூடியவர் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். (பக்கம் 197 - 202, Robert Caldwell: A Scholar, Missionary in Colonial South India – by Vincent Kumaradas) சாணார்களை பற்றிய தனது கருத்தை கால்டுவெல் திரும்ப திரும்ப கூட்டங்களில் வலியுறுத்தினார் என்பது மட்டுமின்றி தனது கருத்தினை திரும்ப பெற மறுத்துவிட்டார். இதன் காரணமாக கால்டுவெல் மீது பல கொலைவெறி தாக்குதல் முயற்சிகள் நாடார்களால் மேற்கொள்ளப்பட்டன. கால்டுவெல் கொடைக்கானலில் குடியேறி தப்பினார். அவர் சாகும்வரை கொடைக்கானலில் இருந்து இறங்கி வரவில்லை. (பக்கம்142-தோள்சீலைக்கலகம் கிறிஸ்தவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும்..உலகளாவிய தாக்கமும், பக்.320,334 8] குட்டம் மார்த்தாண்டர்களும் காயாமொழி ஆதித்தர்களும் குட்டம் மார்த்தாண்டர்களும்,காயாமொழி ஆதித்தர்களும் வீரம், பழக்கவழக்கம், மண உறவு,வரலாறு என்பவற்றால் மிக நெருக்கமானவர்கள். போர்க்கால நேரங்களில் காயாமொழி ஆதித்தர்களுக்கு மார்த்தாண்டர் விரைவாக வந்து உதவி செய்வார். அதனால் ஏற்பட்ட பாட்டொன்று பின்வருமாறு ஆதித்தர்களால் பாடப்பெற்றுள்ளது. ’’குட்டத்து மார்த்தாண்டன் நமது நண்பன் கொடும்புலி போல் பகைவர் மீது பாய்ந்து மீள்வான் வெட்டறிவாள் குத்தீட்டி வேல்கம்பு பலவும் விரைவுடனே கொண்டுவர விழைந்திட்டோமே’’ பக்.11 திசைக்காவல் என்பது தேச காவலாகும்.பாளையப்பட்டுக்காரர்கள் தங்கள் ஆட்சிக்குள்ளடங்கிய ஒவ்வொரு கிராமத்துக்கும் சிலரைக் காவலாக அமர்த்தியிருப்பார்கள். கிராமத்துத் தலைவன் திசைக்காவல் வரி என்று வசூல் செய்து அக்காவலார்களிடம் கொடுத்துக் கொண்டிருப்பது வழக்கம். இத்தகைய வழக்கத்தை காயாமொழியிலும் உண்டு பண்ணி விட வேண்டுமென்ற எண்ணத்துடன் பாஞ்சாலங்குறிச்சிப்பாளையப்பட்டு கட்டபொம்மு நாயக்கர் சில ஆட்களை சிவந்தி ஆதித்த நாடனிடம் அனுப்பி வைத்திருந்தார். சிவந்தி ஆதித்த நாடன் அவர்களுக்கு தாகசாந்தி செய்வித்து தனக்குத் தன்னுதவி போதுமென்றும் இதுவரையில் வழக்கமில்லாத பிறர் சகாயம் வேண்டுவதில்லை என்றும் திசைக்காவல்தரமுடியாதென்றும்சொல்லி அனுப்பி விட்டார்.................. ...........................இந்த அபஜெயத்தைத் தமது காவலர்களிடம் கேட்ட கட்டபொம்மு நாயக்கர் ஒரு தந்திரஞ் செய்தார்.தென்கடலோரமுள்ள குட்டத்தில் திசைக்காவல் கைக்கொண்டால் இடை நடுவிலுள்ள காயாமொழியை முறியடித்து விடலாம் என்பது அவரது எண்ணம்.அந்த எண்ணத்தின் மீது ஒரு முப்பது பேரைக் குட்டத்துக்கு அனுப்பினார்.குட்டம் அக்காலத்தில் அழகப்ப வீர மார்த்தாண்ட நாடனுடைய தலைமையின் கீழ் இருந்தது. அவர் கட்டபொம்மு நாயக்கரின் காலாட்களுக்குத் தாக சாந்தியேனும் செய்விக்காமல், திசைக்காவலுக்கும் இசையாதிருந்தார். அதையறிந்த நாயக்கரது காலாட்கள் திரும்பிப் போவதாகப் பாவனை காட்டி அவ்வூர்ப் புறத்துள்ள தெங்குகள் வளர்ந்த தோப்பில் பெரும் நாசம் செய்து விட்டுப் புறப்பட்டனர். புறப்படுஞ் சமயம் மார்த்தாண்ட நாடர்கள் காலாட்களுடன் குழுமி வந்து நாயக்கரது சேவகர்களைப் பிடித்து குடுமியைக் கொய்து பலவிதமாக இம்சித்து பாஞ்சாலங்குறிச்சிக்கு ஓட்டி விட்டனர்.’ 9] மார்த்தாண்டர்கள் மானவீர வள நாட்டின் தென் பகுதியில் குடியேறியவர்கள் குட்டத்து மார்த்தாண்டர்கள். சேர நாட்டு மார்த்தாண்ட வர்மனுடன் கொண்ட கருத்து வேறுபாடுகளினால் ஏற்பட்ட போர்களுக்குப் பின் தென் திருவிதாங்கூரிலிருந்து வந்தவர்கள் என இவர்கள் பற்றிய வரலாறு கூறுகின்றது. ‘’ தென்னெல்லை முதல் வடக்கே கொச்சி வரை ஒரு திருவிதாங்கூர் அரசை உருவாக்கிய வீரமார்த்தாண்டவர்மா [கி.பி.1729-1758]ஆட்சிக்கட்டில் ஏறுமுன் எதிர் கொண்ட எட்டுவீட்டுப் பிள்ளைமார் மற்றும் யோகக்காரர்களின் [பிராமண ஊராளர்கள் ] சதி ஒரு சுவையான வீர காவியமாக கேரள வரலாறு விவரிக்கும். இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் மார்த்தாண்ட வர்மா அரசு கட்டில் ஏறுமுன் நிகழ்த்திய வீரச்செயல்கள் அவரது தனி வீரத்தின் அடையாளமாகவே காண்கின்றனர். ஆனால் அவரது மாமன் மக்களான பப்புத்தம்பி, இராமன் தம்பி ஆகியோரிடம் இருந்து ஓடி ஒளிந்து தப்பிய காலங்களில் அவருக்குப்பின் துணையாக நின்றவர்கள் பற்றிய வரலாறு ஓட்டன் கதை என்ற நாட்டார் கதைப்பாடல் மூலம் வெளிப்படுகிறது. அரசனுக்காக இம்மண்ணில் துணை நின்ற எதிரிகளை முறியடிக்கக் காரணமான அனந்தபல்ப நாடார்,பொற்றையடி மாறச்சன், ஓட்டன், தென்திருவிதாங்கூர் களரிகள் நடத்தி ,அனந்தபல்ப நாடாரின் பின் அணி திரண்ட குறிப்பிட்ட சில நாடார் மக்கள். இவர்களின் பங்கு பப்புத் தம்பி,இராமன் தம்பிகளை வெற்றி கொண்டு எட்டுவீட்டுப்பிள்ளைமார்களின் குடும்பங்களை பூண்டோடு கருவறுப்பது வரை தொடர்கிறது. அதே சமயத்தில் தம்பிமார் கதைப்பாடல் வழி ,இராசக்கமங்கலம் பகுதிகளில் வாழ்ந்த நாடார் மக்கள் பப்புத்தம்பி, ராமன் தம்பிகளை ஆதரித்து மார்த்தாண்ட வர்மாவை எதிர்த்திருப்பது தெரிய வருகிறது. செந்தீ நடராசன், சரலூர் கல்வெட்டும் துளிர் விடும் சில அனுமானங்களும்-கட்டுரை, பழங்காசு ,மாத இதழ்,எண்13,நாள் 22.07.2006. 10] குமாரகம்பண்ணர் தலைமையின் கீழ் இயங்கி வந்த விஜயநகரப் படைகள் மதுரையை வெற்றி கொண்டு சுல்தானியத்தை அழித்தன. பாண்டியர்கள் தங்கள் மங்கிய மாண்பினை மீண்டும் ஒளிபெறச் செய்ய முயன்றனர்.பஞ்ச திருவழுதி நாடாக்கள் [Pancha Thiruvazhuthi Nadakkal ]விஸ்வநாத நாயக்கரின் விஜய நகர்ப் படைகளை எதிர்த்து கயத்தாற்றில் பெரும்போர் ஒன்று நடத்தினார்கள் ஆனால் தோற்கடிக்கப்பட்டனர்.நாயக்கர்கள் இப்போழுது தங்கள் ஆதிக்கத்தை ஒழுங்குபடுத்தினர்.திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் மைசூர்,பிஜப்பூர் படைகள் மதுரை நாட்டினுள் அடிக்கடி ஊடுருவின.ராமனாதபுரம் சேதுபதிகள் நாயக்கர் ஆதிக்கத்திற்கெதிராக எதிரணி அமைத்தனர்.இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி தங்கள் செல்வாக்கினை மீண்டும் நிறுவும் முயற்சியாக தங்கள் திறைமை மிகு தலைவர் குமாரவீர மார்த்தாண்ட நாடார் தலைமையில் திரண்டெழுந்து கடுமையான கலகத்தினை உண்டு பண்ணினர். - நாடார் வரலாறு,ப.406 11] கார்டுவெல்லும் எட்கர் தர்ஸ்டனும் நாடார்களுக்கு எதிரான கருத்துக்களை எழுதி வைத்தனர் தென்னிந்திய சாதிகள் பற்றிய தொகுப்பினைத் திரட்டும் பணியில் ஈடுபட்ட எட்கர் தர்ஸ்டன் தங்கள் சாதியினை சான்றோர் என்றோ நாடார் என்றோ குறிக்கச் சொல்லி தெரிவித்தக் வேண்டுகோள்களை நிராகரித்துச் சாணார் என பதிவு செய்தார்.அதோடு நில்லாது பனை,தென்னை ஏறுவது ஒன்றே இந்த சாதியினரின் அடையாளம் என தவறாகக் கணக்கிட்டு, தென்னிந்தியாவில் அத்தகையத் தொழில் செய்த அனைத்துச் சாதியினரையும் ஒரே தொகுபுள் கொண்டு வந்தார்.அது மட்டுமின்றி சான்றோர்,நாடார் என இம்மக்களைக் குறிக்கும் தொல்லியல் ஆவணங்கள் எதுவும் இல்லை என பொய்யான பதிவு ஒன்றை செய்து விட்டுச் சென்றார் [Castes and Tribes of Southern India,Vol.vi ,page.368,369]. 12] தமிழர் வரலாற்றில் வேணாடு,ப.104.,ப.106 ஈழவர்,நாடார் போன்றோர் இலங்கைத் தீவிலிருந்து வந்தவர்கள் என கார்டுவெல்,எட்கர் தர்ஸ்டன் போன்றோர் எழுதியுள்ளனர்.இது தவறான அடிப்படையிலானது. மன்னனாக முடிசூடிக்கொண்டது கி.பி.1729 இல். தொடர்ந்து 29 ஆண்டுகள் [ 1758 ] வரை ஆட்சி செய்துள்ளார். 1] இவர் மன்னனானதும் தனக்கு எதிராக சதி செய்த எட்டு வீட்டு பிள்ளைகளை கழுவிலேற்றிக் கொன்றார்.அவர்களது மனைவியரையும் ,குழந்தைகளையும் ஏலம் விட்டார்- என்பது வரலாற்றுப் பதிவு. 2] பால மார்த்தாண்டரின் நம்பிக்கைக்குரிய ஆட்சி அதிகாரத்தில் இருந்த உறவினர்களின் தலைமையிலான படை ஏழு துரத்தார் படையாகும்.இது எட்டு வீட்டு நாடார் படை என்றும் கூறப்படும் என்று வரலாற்று நோக்கில் வேணாடு என்ற நூல் முதன்மையான ஆதாரத்துடன் கூறுகின்றது. எதிரிகளை ஒழித்துக்கட்டியதோடு தனக்கு உறுதுணையாய் நின்றவர்களுக்கு காணியாட்சி உரிமைகளை திருவனந்தபுரத்திலும், வீரவள நாட்டிலும் வழங்கினார். நாயலுவின் தாக்குதல்களை இடை மறித்து விரட்ட ஏதுவாக தன்னுடைய உறவினர்கள் சந்திரமார்த்தாண்டன் , குமாரவீர மார்த்தாண்டருக்கு வீரவள நாட்டின் உரிமைகளை கி.பி 1735 இல் வழங்கினார். குடநாட்டு திருச்செந்தூர்,நவ கயிலாசம்,நவ திருப்பதி உள்ளிட்ட பல கோயில் தானங்களை அவ்வப்போது தங்களுடைய காவல் உரிமை பெற்றவர்கள் மூலம் கவனித்து வந்த மார்த்தாண்டர்கள் குட்டத்தில் நிலையாக தங்களுடைய அரண்மனையினையும் பாசறையையும் அமைத்துக்கொண்டனர். 3] குலசேகரன்பட்டினத்தில் கடற்கரை அருகில் உள்ள உதையமார்த்தாண்ட விநாயகர் கோயில் முன்பாக உள்ள கல்வெட்டின் காலம் கி.பி.1750 இக்காலம் மதுரை நவாப் அன்வர்கான், சந்தாசாகிப் ஆட்சிப்பரப்பில் இருந்தது.இவர்களிடம் இருந்து தீத்தாரப்ப முதலியார் நெல்லை சீமையை ஆண்டுக்கு 17 இலட்சம் ரூபாய் குத்தகைக்கு வாங்கினார்.இந்த தீத்தாரப்ப முதலியார் காலத்தில் நாடான்களுக்கு வழங்கப்பட்டது சாண் பத்து,பிள்ளைமார்களுக்கு[வெள்ளாளர்] வெள்ளான்பத்து காணிஆட்சியாக வழங்கப்பட்டது . இந்த கல்வெட்டுச் சாசனம் குட்டம் மார்த்தாண்டர்கள் நாடான்கள் என்று கூறுகின்றது.மார்த்தாண்டர்களது பரிவாரங்களுடனான தர்பார் ஆட்சி , அதிகாரம் , காலாட் படைபலம், குதிரைப்படை, பல்லக்கு, வாரி வழங்கும் தாராள குணம், நவாப்பிற்கு வரி கொடாமல் எதிர்த்து போர்முரசு கொட்டிய விதமும் நவாப் தர்பார் போன்று குமாரவீர மார்த்தாண்டரின் தர்பார் அமைந்திருந்தது,பிற சாதி சனங்களையும், சமயத்தையும் அரவணைத்துச்சென்ற பாங்கு, இதனைக் கண்ட நவாப் பல விருதுகளுடன் ,பரிசுகளுடன் குமாரவீர மார்த்தாண்டருக்கு வழங்கிய பட்டம்தான் நவாப் என்று கூறப்படுவது பெருமைக்குரியது. வேணாட்டிலிருந்து குட்டம் வந்த ஆண்டு கி.பி.1735 ஆகும் குலசேகரன்பட்டினம் கல்வெட்டு காலம் கி.பி 1750 குட்டம் வந்தபின்பு 15 ஆண்டில் இக்கல்வெட்டு பிற ஆட்சியாளரால் பொறிக்கப்பட்டது.உள்ளது உள்ளபடியான சாசனம். நாடான்களுள் வரி விதிப்பில் அவர்கள் செய்து வந்த தொழில் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட சில ஏற்றத்தாழ்வுகள் இடம் பெறுகின்றன. இத்தகைய கல்வெட்டுக்களை காணாத ஹார்டுகிரேவ் நாடான்களுள் தேவையற்ற பிரிவுகளை உருவாக்கிச்சென்றார். 14] மாண்புமிகு முதலமைச்சராக இருந்த டாக்டர் ஜெயலலிதா அவர்கள் நாடார்கள் நாடாண்ட வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவதற்கு உதவிய கல்வெட்டுக்களுள் ஒன்று இது. 15] நாட்டுப்புறவியல் சான்றுகள் கல்வெட்டு,பட்டயங்கள் போன்ற முதன்மையான ஆவணங்களைப்போல நாட்டுப்புறவியலில் ஒன்றான வழிபாட்டு மரபுகள்,பழக்க வழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள் வரலாற்றை மீட்டெடுக்க உதவுகின்றன. கோயில் அமைப்பு வேணாட்டு கட்டடக்கலையின் கூறுகளை குட்டம் அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் அம்மன் கோயிலில் காணலாம் வழிபாட்டு முறைகள் வேணாட்டு அரசகுலப்பெண்களுக்கு கோயிலினுள் சென்று வழிபடுவதற்கும் சென்று திரும்பி வருவதற்கும் தனி வழி அமைக்கப்பட்டிருக்கும் ஆண்கள் அவர்களைப் பார்க்க இயலாதவாறு கட்டமைப்பு இருக்கும் . அதுபோல அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன்கோயில் வழிபாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. 16] மாரியம்மன், முத்தாரம்மன், சிவனணைந்தபெருமாள் வழிபாடு சிவனணைந்தபெருமாள் சாமி வழிபாடு குறித்த குறிப்பு பொன்னிறத்தாள் கதைப்பாடலில் [வில்லுப்பாட்டு] இருக்கிறது .பொன்னிறத்தாள் பிறப்பதற்கு அவளுடைய தாயும், தந்தையும் அருள்மிகு சிவனிணைந்தபெருமாள் மார்த்தாண்டனை வழிபடுகின்றனர். முத்தாரம்மன் வழிபாடு நாடார் சமுதாயத்தில் காணப்படும் சிறப்பான வழிபாடு.பாண்டிய நாட்டின் சொத்து முத்து. தென்பாண்டி நாட்டின் துறைமுகத்தைத் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வீர உதையமார்த்தாண்டன் வைத்திருந்தது பற்றிய உயரமான பலகைக் கல்வெட்டு காயல்பட்டினத்திற்கும் , வீரபாண்டியன் பட்டினத்திற்கும் இடையே இருக்கிறது. முத்துக்களை மாலையாக அணிந்தவள் முத்தாரம்மன்.வெம்மை நோயையும், அம்மை, காலரா போன்ற நோயையும் குணப்படுத்துபவள் மாரி. பக்தர்களுக்கு வாரி,வாரி வழங்குபவள் மாரி. இக்கோயில் கொடைவிழாவில் சாமியாடிமஞ்சள்பானை குளிப்பது வேணாட்டின் குறியீடுகளுடன் உள்ளது.தென்பாண்டி நாட்டில் கோயில்களில் இத்தகைய நீராடலுக்கு வேப்பிலையை மட்டும் பயன்படுத்துகின்றனர்.ஆனால் குட்டம் மார்த்தாண்டர்களால் தென்னைப் பூம்பாளை மஞ்சள் நீராடலுக்குப் பயன்படுத்தப்படுவது வேணாட்டில் காணப்படும் வழிபாட்டு முறைகளுள் ஒன்று. பரண் வழிபாட்டில் தெய்வங்களுக்கு படைக்கப்படும் முறைகள் வேணாட்டில் நாடார் மக்களிடையே காணப்படுபவைகள். கட்டுரைையாளர் = முனைவர் தவசிமுத்து மாறன்

No comments:

Post a Comment

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் திருப்பரங்குன்றம் நமது நாடார் ▪️மடங்கள்▪️மண்டபங்கள்▪️நந்தவனம் - நன்றி ராஜதுரை நாடார்

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் முதலாம் படைவீடாம் திருப்பரங்குன்றத்தில் உள்ள நமது நாடார் இன ▪️மடங்கள் ▪️மண்டபங்கள் ▪️நந்தவனம் விவரங்கள் ...