கவிச்சக்கரவர்த்தி கம்பர் கம்பராமாயணத்தில் சீதாதேவியை *'தலைமை சான்றாள்'* என்று குறிப்பிடுகிறார் . அதன் பொருள் மற்றும் முக்கியத்துவம் என்ன?_
பதில்:
"உன் பெருந் தேவி என்னும் உரிமைக்கும், உன்னைப்
பெற்ற
மன் பெரு மருகிஎன்னும் வாய்மைக்கும், மிதிலை
மன்னன்-
தன் பெருந் தனயைஎன்னும் தகைமைக்கும்,
_தலைமை சான்றாள்_
என் பெருந்தெய்வம் ! ஐயா ! இன்னமும் கேட்டி’
என்பான்".
(ஸ்ரீ கம்ப ராமாயணம்/சுந்தர காண்டம்/திருவடி தொழுத படலம் 14)
இந்த வரிகள் கம்ப ராமாயணம் சுந்தரகாண்டத்தில் உள்ளன. ஸ்ரீ ஹனுமான் இலங்கையிலிருந்து திரும்பி வந்து, சீதா தேவியின் நிலையை ஸ்ரீராமரிடம் விவரிக்கிறார்
இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள 'தலைமை சான்றாள்' என்ற சொல்லை நாம் கவனிக்க வேண்டும்.
ஸ்ரீ ஹனுமான் சீதா தேவியை *தலைமை சான்றாள்* என்று கூறுகிறார்
இந்த பயன்பாட்டின் பொருள் என்ன? இந்த பயன்பாட்டின் சரியான பொருளை அறிய, தமிழ் இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகளில் இதற்கு தொடர்பான சொற்களைப் பார்க்க வேண்டும்.
தமிழ் மொழி இலக்கியம் மற்றும் கல்வெட்டுகளில் இதற்கு தொடர்புடைய 'தலைமைத் தேவி' 'தலைமை அரசி' 'பட்டத்தரசி', 'பட்டத்துராணி', 'அக்கிரமகாதேவியார்' போன்ற சொற்களை காணலாம்.(1)
இந்த பெயர்கள் அனைத்தும் அரச குடும்பத்தின் பெண், குறிப்பாக ராணியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
ஸ்ரீராமரின் அரசியான சீதா தேவியைக் குறிக்க 'தலைமை சான்றாள்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதை இங்கு காணலாம்.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் 'தலைமை அரசி' அல்லது 'பட்டத்து ராணி' அல்லது 'மகாதேவியார்' போன்ற சொற்களுக்குப் பதிலாக 'தலைமை சான்றால்' என்று பயன்படுத்தியுள்ளார் என்பது மிகவும் வெளிப்படையானது. கம்பநாடன் 'தலைமை சான்றாள்' என்பதை சீதா தேவியை விவரிக்க சிறந்த சொல்லாகக் கருதியிருக்கலாம்.
இது இன்னும் ஒரு விஷயத்தை தெளிவாக்கும். கம்பராமாயணத்தின் சுந்தரகாண்டத்தில், 'தலைமை சான்றாள்' என்பது 'தலைமை அரசி' என்ற சொற்களுக்குப் பதிலாக உள்ளது. எனவே இங்கு 'சான்றாள்' என்பது 'அரசி' அல்லது 'ராணி' அல்லது 'அரசகுலத்து பெண்' என்று பொருள்படும்.
*இதனால் செம்மொழியான தமிழ் மொழியில் 'சான்றார்'/'சான்றோர்'/'சான்றவர்'/'சான்னார்' (நாடார்) என்பது தான் அரசகுலத்தைக் குறிக்க மிகவும் பொருத்தமான சொல் என்பதைப் புரிந்து கொள்ளலாம்*
கம்பராமாயணத்தின் யுத்தகாண்டத்தில் இந்த வாதத்தை ஆதரித்து கம்பர் சீதா தேவியை *'சான்றோர் மாது'* என்று வர்ணிக்கிறார், அதற்கு மீண்டும் 'அரசகுலத்து பெண்' என்ற அந்த அர்த்தம் மட்டும் தான் பொருத்தமானதாக இருக்கும்.
_சான்றார் = சான்றவர் = சான்றோர் = அரசகுலம் = சான்னார் = நாடார்_
_- காந்தளூர் நாடான்_
*[* குறிப்புகள்
1) tamil lexicon. Madras university. https://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/
அக்கிரமகாதேவியார்' akkiramakātēviyār (p. S003)
அக்கிரமகாதேவியார் akkira-makā-tēviyār , n. id. +. The chief queen; அரச னுடைய தலைமைத் தேவி
'பட்டத்தரசி' paṭṭattaraci (p. 2420)
பட்டத்தரசி paṭṭattaraci , n. பட்டம்² +. [K. paṭṭadarasi.] Chief or senior queen; தலைமையரசி
மகாதேவி makā-tēvi , n. mahā-dēvī. 1. Pārvatī, as the consort of Šiva; பார்வதி. (தக்கயாகப். 80, உரை.) 2. Chief queen; தலைமையரசி. வாணாதி ராசர் மகாதேவியார் (S. I. I. iii, 99).
2) 'சான்றோர் மாதைத் தக்க அரக்கன் சிறை தட்டால், ஆன்றோர் சொல்லும் நல் அறம் அன்னான் வயமானால், மூன்று ஆய் நின்ற பேர் உலகு ஒன்றாய் முடியாவேல், தோன்றாவோ, என் வில் வலி வீரத் தொழில் அம்மா'.
No comments:
Post a Comment