சான்றோர் சிறப்பு -(தலைப்பா கட்டி நாடாள்வார் வகையறா)


வடக்கிருந்து உயிர் துறக்க நினைத்த கோப்பெருஞ்சோழன்,  தான் இதுவரை பார்த்தே  இராத தன் நண்பர், புலவர் பிசிராந்தையாருக்கும் தன்னுடைய பக்கத்திலே இடம் போடச் சொல்கின்றார்; தான் இறக்கும் தருவாயில் அவனும் வந்துவிடுவான் என்கின்றார்; அவர் சொன்னதுபோலவே, பிசிராந்தையாரும் வருகின்றார். தன் நண்பர் கோப்பெருஞ்சோழனுடனே உயிர் துறக்கின்றார். அதைப் பார்த்த புலவர் கண்ணகனார் வியந்து போகின்றார். பார்த்தே இராத , வேற்று நாட்டு புலவன்மேல் மன்னன் கொண்ட நட்பும், அந்த நட்புக்கு உரியவனாய் புலவன் இருந்ததையும் பார்த்து “#சான்றோர் என்றுமே #சான்றோர் பக்கமே சார்ந்து இருப்பர்” என்கின்றார். இதோ அந்தப் புறநானூற்றுப் பாடல்.
           பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய
           மா, மலை பயந்த காமரு மணியும்,
            இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து,
            அரு விலை நன் கலம் அமைக்கும் காலை,
            ஒரு வழித் தோன்றியாங்கு – என்றும #சான்றோர்            
            #சான்றோர் பாலர் ஆப;
            சாலார் சாலார் பாலர் ஆகுபவே.

No comments:

Post a Comment

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் திருப்பரங்குன்றம் நமது நாடார் ▪️மடங்கள்▪️மண்டபங்கள்▪️நந்தவனம் - நன்றி ராஜதுரை நாடார்

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் முதலாம் படைவீடாம் திருப்பரங்குன்றத்தில் உள்ள நமது நாடார் இன ▪️மடங்கள் ▪️மண்டபங்கள் ▪️நந்தவனம் விவரங்கள் ...