ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பற்றிப் பதிற்றுப்பத்து தரும் செய்திகள்
தந்தை குடக்கோ நெடுஞ்சேரலாதன். தாய் வேள் ஆவிக்கோமான் தேவி
தண்டாரணியம் பகுதியில் பிடிபட்ட வருடை ஆடுகளைத் தன் தொண்டி நகருக்குக் கொண்டுவந்து பார்ப்பார்க்கு வழங்கச் செய்தான். (இதனால் இந்தச் சேரலாதனை, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என வழங்கினர்.) அவற்றுடன் கபிலை எனப்படும் பசுமாடுகளையும் சேர்த்து வழங்கினான். தன் தந்தை ஆண்ட குடநாட்டில் ஓர் ஊரையும் சேர்த்து அவர்களுக்கு வழங்கினான். இவ்வாறு பார்ப்பார்க்கு வழங்கியதால் வானவரம்பன் எனத் தன் பெயர் விளங்கும்படிச் செய்தான். #சான்றோர்_எனப்படும்_போர்_வீரர்களுக்குக்_கவசம்_போல்_விளங்கியதாலும்_இவனை #வானவரம்பன்’ என்றனர்.
இவனது தலைநகர் நறவு என்னும் ஊர்
.(நறவு, நறாஅ, நறா என்னும் சொற்கள் ஒருவகைக் கள்ளை உணர்த்துவன. போர்க்களம் செல்லும் படைவீரர்களுக்கு 'தீந்தண் நறவம்' கொடுத்தனர் என்னும்போது 'நறவம்' என்னும் சொல்லும் கள்ளை உணர்த்துகிறது.)
#வில்லோர் மெய்ம்மறை, #சான்றோர் மெய்ம்மறை என்றெல்லாம் இவன் போற்றப்படுவது இவனது போராற்றலை வெளிப்படுத்துகிறது..
போரிட்டு #மழவர் வலிமையைக் குன்றும்படி செய்தான்.
No comments:
Post a Comment