சான்றோன் ( நன்றி - Rachinn Rachinn Rachinn)


நினைவுச் சாலை:''சான்றோன்'' என்ற சொல் குறித்து நம் அறிஞர்கள்  நிரந்தரமான ஒரு முடிவை வைத்திருக்கிறார்கள்.  அவர்கள் சிலவற்றை நம்புகிறார்கள்.அதன் அடித்தளம் ஆட்டம்காணக்கூடாது என்று கருதுகிறார்கள் போலும். வீரம் இரு வகை.மறம், அறம்.மறப்போர், அறப்போர்.மறப்போருக்குரியவன்  மறவன்.  அறப்போருக்குரியவன் சான்றோன்.உயிர் இரக்கமின்றி கொலைசெயல் செய்பவன் மறவன்...என்றால் புலன் அடக்கிய வீரன் சான்றோன்.சங்க இலக்கியம் முதல் மறவன் காலாட்படை வீரனாக கருதப்படுகிறான்.சான்றோன் தேருக்குரியவன்-அரசன் ஆவான். (தேர்தர வந்த சான்றோர்).
             நம்  அறிஞர் பெருந்தகைகள் சொல்லாததை ஒரு பொன் மொழி பேசுகிறது. '' ஆயிரம் போர்களில் வெற்றி பெரும் வீரனைவிட தன் மனத்தை அடக்கியவன் மாபெரும் வீரன்'' .என்கிறது.
      வர்த்தமான மஹாவீரர்  ''வீரர்'' எனப்படுவதற்கான காரணம் இதில் உள்ளது.
 பழம் தமிழ்ப்பாடல் ஒன்று: 
//புலன் ஐந்தும் வென்றான்     தன் வீரமே வீரம்// என்று  குறிப்பிடுகிறது.
 ''பெருஞ்சாந்தி குல மன்னர்'' என்றுதானே பாண்டியர் கல்லில்  செதுக்கிவைத்தார். 
''சான்றோர் பிழை பொறுப்பர்'' என்பதும் இங்கனமே ஆகும்.

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...