கருமாபுரம் செப்பேடு ( நன்றி - கருவூர் சோழ நாடான்)


நாடார் செப்பு பட்டயத்தில் மிக முக்கியமான ஒன்று கருமாபுரம் …

நாடார்களைப் பற்றியசெய்தியை
எட்டுப் பட்டயங்களும், செப்பேடுகளும் கூறுகின்றன.
கருமாபுரம், பூந்துறை, திருமுருகன்பூண்டி, பெருந்துறை போன்ற பல ஊர்களில் நாடார் சமூகக் குலகுருக்கள் மடங்கள் உள்ளன. 

#_கொங்கு_நாடார்கள்
வலங்கைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

நாடார்கள் நாடாதி நாடார், நாட்டுவர், மதுரையார், 
போர்முடையார், கோனாடர், சங்கனி, கொங்கனி முதலிய
ஏழு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும்,  ஏழு பிரிவனர் முதல்வர்கள் நாரித்திலகன், நமனாரி குஞ்சரன், கனகரேகன், மதன சௌந்தரன், கமல கேதனன், கனக கேன், கமல லோசனன் என்றும் செப்பேடு கூறுகிறது.

இவர்கள் ஆவணங்களில் வெள்ளைக் குடையும், வெண்சாமரமும் உடையவர்கள் என்று கூறப்படுவதுடன் பல மெய்க்கீர்த்தித் தொடர்களும் கூறப்படுகின்றன. 

ஈழமும் இலங்காபுரியும் வென்றவர்கள், சங்கராச்சாரியாருக்கு உபதேசம் செய்தவர்கள் என்பன அவற்றுள் சில இவர்கள் ‘பெரியதனம்’ என்ற தலைவரை ஏற்றுக் கொண்டவர்கள். 

சிலர் #நாயக்கர் பட்டம் உடையவர்கள்.

நாடார் என்பது நாடாழ்வார், வளநாடர் என்பதன் சுருக்கம் என்றும், சாணார் என்பது சான்றோர் என்பதன் மரூஉ என்றும் ஒரு செப்பேடு கூறுகிறது. முகப்பர் என்ற சொல்லே மூப்பர் என்று மாறியதாம். சோழ மன்னன் ஆற்று உடைப்பை அடைக்க இவர்களை அழைத்தபோது “ ஏர்வரி” சுங்கம் கொடோ, கொத்து எடுத்து மண் வெட்டோம். கொற்றவரைக் கைமுகையோம். கூடை தொடோம் “ என்று கூறினார்கள் என்கிறது ஒரு செப்பேடு.

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...