சத்திரிய நாடார் (கட்டுரை -ஜெகதீஷ் பாண்டியன்)


சத்திரிய நாடார்
"""""""""""""""""""""""''''"""'"
நாடார் பற்றி தமிழர் வரலாற்று
நூலில் ஐயா பாவாணர் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

சான்றான் (சாணான்)
பெயர்: சான்றோர் = போர்மறவர்.

"தேர்தர வந்த சான்றோரெல்லாம்" (புறம்.63)
சான்றோர்-சான்றார்

"ஈழக்குலச் சான்றார் ஏனாதிநானார்" (பெரியபு.15:2)

தொழில் - கள்ளிறக்குதல், கருப்பட்டிகாய்ச்சுதல், வாணிகஞ் செய்தல், குடிக்காவல்,
படைக்கலம் பயிற்றல்.

பிரிவு - கருக்குமட்டையன்,மேனாட்டான், கொடிக் கால் நட்டாத்தி.

ஊர்த்தலைவன் பட்டம் - நாட்டாண்மை.
குலப்பட்டம்-நாடார், சேர்வைகாரன்.
முக்குந்தன் என்பது வழக்கு வீழ்ந்தது.
 
சான்றோன் என்கிற சொல் பற்றி
கீழ்கண்டவாறு விளக்குறார்
ஐயா மயிலை சீனி்.வேங்கடசாமி:

சான்றோன்
சான்றோன், சான்றோர் என்னும் சொல்லுக்குப் பொரு ளென்ன? சான்றோர் என்றால், சால்புள்ளவர், நல்லொழுக்கம் உடையவர், அறிஞர், கல்வி கேள்விகளில் உயர்ந்தவர் என்று பொருள் கூறுவீர்கள். ஆம்; இந்தச் சொல்லுக்கு இந்தப்பொருளும் உண்டு.

 ஆனால் பண்டைக் காலத்தில் இச்சொல்லுக்கு வேறு பொருளும் இருந்தது. சான்றோன் என்றால் போர்வீரன் என்றும் பொருள் உண்டு. வீரனுக்குச் சான்றோன் என்னும் பெயர் உண்டென்று கூறினால், வியப்பாகத் தான் இருக்கும். போர்வீரர்களைச் சான்றோர் என்று வழங்கியதைப் பழந்தமிழ் நூல்களில் காணலாம். அதனை இங்கு ஆராய்வோம்.

பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்தில், இமயவரம்பன் நெடுஞ்சேர லாதனைக் குமட்டூர்க் கண்ணனார் என்னும் புலவர் பாடுகிறார். அதில், அவ்வரசனை அவர்,

"எழுமுடி கெழீ இய திருஞெமர் அகலத்து
நோன்புரித் தடக்கை சான்றோர் மெய்ம்மறை"

என்று கூறுகிறார்.

இதன் பொருள் :
 ஏழு அரசர்களைப் போரிலே வென்று, அவர்கள் அணிந்த பொன் மகுடங்களைக் கொண்டு மாலை செய்து, அதனைத் திருமகள் வாழ்கின்ற பரந்த மார்பிலே அணிந்த வலி பொருந்திய பெரிய கைகளையுடைய, போர்க்களத்திலே போர் வீரர்களின் (சான்றோரின்) முன்பாகக் கவசம்போல நிற்பவன் என்பது. இதில் சான்றோர் என்பதற்கு வீரர் என்று பழைய உரையாசிரியர் உரை கூறுகிறார்.

 ஈண்டுச்சான்றோர்
என்பது போரில் அமைதியுடைய வீரரை என்று அவர் விளக்கங் கூறுகிறார். இதனால்,சான்றோர் என்னும் சொல்லுக்குப் போர்வீரர் என்னும் பொருளும் உண்டு என்பது தெரிகிறது.

"எயிலெறி வல்வில் ஏவிளங்கு தடக்கை
ஏந்தழில் ஆகத்துச் சான்றோர் மெய்ம்மறை"

என்று பாடுகிறார்.
இதிலும், சான்றோர் என்னும் சொல் போர்வீரர் என்னும் பொருளில் வழங்கப்பட்டுள்ளது காண்க. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், சான்றோர்க்கு (வீரர்களுக்கு) மெய்ம்மறை (கவசம்) போன்று இருக்கிறான் என்று கூறப்படுகிறான்.

 அதாவது, போர்க்களத்திலே போர் வீரர்களைப் பின்னே தள்ளித் தான் அவர் களுக்கு முன்பாக நின்று, அவர்களுக்குக் கவசம்போல இருக்கிறான் என்பது பொருள்.
பதிற்றுப்பத்து, 7-ஆம் பத்தைக் கபிலர் என்னும் புலவர் பாடி, செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் அரசனைப் புகழ்கிறார். அதில்,

"எஃகாடு ஊணங் கடுப்பமெய் சிதைந்து
சாந்தெழில் மறைத்த சான்றோர் பெருமகன்
என்று பாடுகிறார்.
இறைச்சி விற்கும் ஊன் வாணிகன், இறைச்சியைக் கத்தியால் கொத்தும் மரக்குறடு (ஊணம்) போன்று போர்க்களத்திலே மார்பிலும், உடம்பிலும் புண்பட்ட வடுக்கள் நிறைந்திருக்க, அவ்வடுக்களைச் சந்தனம் பூசி மறைத்திருக்கிற போர்வீரர்களின் (சான்றோரின்) பெருமகன் என்பது இதன் கருத்து.

 இதிலும், போர் வீரர், சான்றோர் என்று கூறப்பட்டிருத்தல் காண்க.
தகடூர்ப் போரைப்பற்றிக் கூறுகிற தகடூர் யாத்திரை என்னும் நூலிலேயுள்ள செய்யுள்களிலும், போர்வீரர், சான்றோர் எனக் கூறப்படுகின்றனர். 
அச்செய்யுள்கள்:

"கூற்றுறழ் முன்பி னிறைதலை வைத்தபின்
ஆற்றியவனை யடுதல்; அடாக்காலை
ஏற்றுக் களத்தே விளிதல்; விளியாக்கால்
மாற்ற மளவுங் கொடுப்பவோ சான்றோர்தம்
தோற்றமும் தேசும் இழந்து.
காலாளாய்க் காலாள் எறியான்; களிற்றெருத்தின்
மேலாள் எறியான்; மிகநாணக் - காளை.
கருத்தினதே என்று களிநெறியான், அம்ம!
தருக்கினனே சான்றோர் மகன்."

இச்செய்யுள்களில், போர்வீரர் சான்றோர் எனக் கூறப் பட்டிருப்பது காண்க.

சான்றோன் என்னும் சொல்லுக்கு இக்காலத்தில் வழங்குகிற அறிஞன் என்னும் பொருள் மட்டும் அல்லாமல், வீரன் என்னும் பொருளும் உண்டு
என சொல்லாய்வை நிறைவு செய்கிறார்!

ஆய்வறிஞர் ஐயா குணா அவர்களும்
தன்னுடைய வள்ளுவ பார்ப்பரியம் நூலில்  சான்றோரே சாணாராக ஒடுக்கப்பட்டனர் என்கிறார்.

சரி சத்திரியர் என்கிற சங்கத சொல் யாரைக் குறிக்குமென்றால் அரசனையும் போர்வீரனையும்
குறிக்கும்.

அதன்படியே சத்திரிய சொல்லின்
கருத்தியலை ஏற்றால் சான்றோர்- சாணார் (நாடார்) சத்திரியரே!

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...