கூலிவிராகுக் கொல்லைக் கல்வெட்டு
இடம்: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், அரிமழத்துக்கு அருகிலிருக்கும் ஓணாங்குடியிலுள்ள வசவ நாயக்கன் ஊருணிக் கருகில் கூலிவிராகுக் கொல்லை என்னுமிடத்தில் திரு. மாரியப்பன் என்பவருக்குரிய நிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்லில் இக் கல்வெட்டு காணப்படுகிறது. கல்வெட்டு வரிகளுக்குக் கீழே குடம், குத்து விளக்குகள் பொறிக்கப்பட்டுள்ளன.
செய்தி: கேரள நாட்டைச் சேர்ந்தவனும் விழிச் சான்றார் (மிழிச் சானார்) குலத்தவனும் ஆன தென்னவதரையன் ஆசிரியம்.
காலம்: பதினான்காம் நூற்றாண்டு.
1 ஸ்வஸ்திஸ்ரீ ஓண
2 ன் காரிகுடி
3 கேரளி மிழிச்சா.
4 னான் தென்னவ
5 தரையந் ஆசிரி
No comments:
Post a Comment