நம்மாழ்வார் #காரிமாறன் #திருவழுதிநாடன்விளை
By
Dr Thavasimuthu maran
TEMPLES
#நம்மாழ்வார்
#ஏரல் #காரிமாறன்
#திருவழுதிநாடன்விளை
#சேர்மன்சுவாமி
#PandiyarDisney
#தூத்துக்குடி மாவட்டம் , புகழ்பெற்ற #ஏரல் அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. சேர்மன் சுவாமி கோயில் முன்புறம் விதானத்தில் பாண்டியரின் மீன் சின்னம் இருப்பது கண்டு மகிழ்ந்தோம். சாமியின் பிரசாதம் பெற்ற பின்பு தமிழ்நாடு நாடார் சங்கம் முத்துரதமேஷ்நாடார் இளைஞர்அணி தலைவர் பாஸ்கர், தமிழ்நாடு நாடார் உறவின் முறை கூட்டமைப்பு மாநில தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார், Arul Lawrence A S , முனைவர் அருள் லாரன்ஸ் , தமிழ்நாடு வியாபாரி சங்க துணை தலைவர் முருகன் நாடார், விழிப்புணர்வு பேரவை டாக்டர் சிங்கை முருகன், முனைவர் தவசிமுத்து மாறன் , தென்மாவட்டகூட்டமைப்பு தலைவர் இரா.அச்சுதன் நாடார் நாடார், ஒருங்கிணைப்பாளர் ராஜா நாடார் ஆலங்குளம் நாடார் வாலிபர் சங்கம் ஜெயசிங், பெருந்தலைவர் மக்கள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் செல்வன் நாடார் சாமி தரிசனம் செய்தனர்.
அதன் அருகில் அமைந்துள்ள பாண்டியன் காரிமாற நாடனின் புதல்வன் அருள்மிகு நம்மாழ்வார் சுவாமி திருக்கோவிலுக்கு திருவழுதிநாடன்விளைக்குச் சென்றோம் .
தாமிரபரணி நதிக்கரையோரம் பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். மன்னன் திருவழுதிவளநாட்டு,காரி மாறனின் அரண்மனை அழிந்து போனது என்று கூறப்படுகிறது. எம்பெருமான் மகாமண்டபம், முகமண்டபம், கருவறையில் புன்னகை தவழ, ஸ்ரீ.நம்மாழ்வார்
ஸ்ரீ.கம்பத்தடியார் சுவாமி , ஸ்ரீவயணப்பெருமாள், ஸ்ரீ பெரியபிராட்டி அம்பாள். மற்றும் சுவாமிகளுக்கு விஷேச புஷ்ப அலங்காரங்களுடன் தூப தீப நெய்வேத்திய பூஜை நடைபெற்று வருகிறது. பின்புறம் தரைத் தளத்திற்குச் கீழே சுமார் 5 அடிக்கும் கீழே நம்மாழ்வாரின் தொட்டில் வழிபாட்டில் உள்ளது. தமிழ் மாத சிறப்பு பூஜைகள்
சித்திரை 18 ம் தேதி குருபூஜை வைகாசி மாதம் 10 நாள் குருபூஜை ஆடி மாதம் 6 ம் தேதி பொதுகுருபூஜை தைமாதம் 7 ம் தேதி பொது குருபூஜை
புரட்டாசி மாதம் சனிக்கிழமை தோறும் பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை ( பிரசாதம் ) மார்கழி மாதம் தினசரி அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு பூஜை ( பிரசாதம் ) தமிழ்மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை தோறும் பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை பகல் 1.00 மணிக்கு அன்னதானம் நடைபெறும் பௌர்ணமி தோறும் இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜை ( பிரசாதம் ) தினசரி மாலை 6.00 மணிக்கு பூஜை நடைபெறுகிறது .(பூசாரி-9486387101)
அனைவரும் குடும்பத்துடன் வருகை தந்து சுவாமிகளின் தரிசனம் செய்து திருவருள் பெறலாம். தங்களின் ஆன்மீகப்🚂 பயணத்திட்டத்தில், ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி, நம்மாழ்வார் பிறந்த திருவழுதிநாடார்விளை, திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி , வனதிருப்பதி, நவதிருப்பதிகள், நவகைலாசம், அருஞ்சுனை காத்த ஐயனார் கோயில், கற்குவேல்ஐயனார் கோயில் , ஆகியவற்றை இணைத்து விடுங்கள்.
நம்மாழ்வார் கோவிலில்
தொன்மை வாய்ந்த இரட்டை மீன் சின்னங்கள் விமானங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. நம்மாழ்வாரைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டிய தொட்டிலை கண்டு அருள் பெறுவோம் . குழந்தை இல்லாதவர்களுக்கு நல்லருள் கிடைக்கும் கூறுகின்றனர். அவ்வாறு அருள் பெற்ற பக்தர்கள் நம்மாழ்வரைப் போற்றி வருவது சிறப்பிற்குறியது.
-
சிவணைந்த பெருமாள் பெரும்பான்மையாக நாடார் சமூகத்திலும் சில மறவர் குடும்பங்...
-
நாடார் சமுதாயத்தின் தோற்றமும் குலதெய்வ வழிபாடும் ‘Ritual protected’ families In ‘Ritual protected’ families, on the other hand, ...
-
நாடார் தென்னாட்டில் சான்றோரே நாடார் என அழைக்கப்படுகின்றனர். நாடார் எனப்படுவோர் அனைவரும் ஒரே மூலத்தைச் சேர்ந்தவர்களோ,ஒரே இடத்தில் ஒரே மாத...
கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)
கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...
SEARCH
LATEST
3-latest-65px
Total Pageviews
திருக்குறள்
பதிவுகள் (Updated)
No comments:
Post a Comment