பணித வணிகன் நெடுமலன்" /நன்றி -சிவகுமார் சுப்பையா/


பணிதம்
பானிதம்
பைனி
பதனி

பணித வணிகன் நெடுமலன்" என்பது  ஒரு கல்வெட்டுப் பகுதியில் இடம்பெற்ற பெயர். இதன் பொருள், "அழகான பொருட்களை விற்கும் வணிகன் நெடுமலன்" அல்லது "சர்க்கரை வாணிகன் நெடுமலன்" என்று பொருள் கொள்ளலாம். இது அழகர் மலைக் கல்வெட்டில் காணப்படுகிறது. 
விளக்கம்:
பணித வணிகன்:
"பணித" என்ற சொல்லுக்கு அழகுப் பொருட்கள் அல்லது சர்க்கரை என்று பொருள் கொள்ளலாம். எனவே, "பணித வணிகன்" என்றால் அழகுப் பொருட்களை விற்கும் வணிகன் அல்லது சர்க்கரை வாணிகன் என்று பொருள்.

பணிதம் என்பது நறுமணப் பொருளாக இருக்க வாய்ப்பு குறைவே.
இந்த கல்வெட்டு  கி மு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தது. இந்த காலகட்டத்தில் நறுமணப் பொருள் என்பது சாம்பிராணி என்ற இயற்கை குங்கிலய பிசின் தான்.
இது ஒரு மருத்துவ பொருள்.

இது மக்களின் அன்றாட தேவையான பொருளாக இருந்தால் மட்டுமே பிரதான வணிகமாக இருக்க வாய்ப்பு.

இது குறித்து பல அறிஞர்கள் கருத்து சொன்னாலும் ஐராவத மகாதேவன் கூற்றுப்படி பானிதம் என்பது சர்க்கரை பாகு என்றே சொல்கிறார்.

இனிப்பு வகையில் இயற்கை இனிப்பான தேன், இலுப்பை பூ இதற்கு அடுத்ததாக பனையில் இருந்து கிடைக்கக்கூடிய பதனி 
மற்றும் கரும்பு சர்க்கரை.
கரும்பு சர்க்கரை 
வெல்லம் வெல்லப் பாகு என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் பனையில் இருந்து கிடைக்கக்கூடிய இனிப்பு பதனி பைனி என்ற வழக்கு இன்று உள்ளது.

ஆக பானிதம் 
என்பது பனையில் இருந்து கிடைக்கக்கூடிய பைனியா?
இல்லை 
நறுமணப்பொருளா? எனபது ஆய்வாளர்களே முடிவு செய்யட்டும்.

இங்கே காண்பது பைனி காச்சப்பட்டு கூழ் போன்ற குழு குழுப்பு தண்மையில் உள்ள கூழ் பைனி என்ற கூப்பைனி.

பானிதம்=கூப்பைனி
#பானிதம் 
#பைனி
#பனை

No comments:

Post a Comment

பணித வணிகன் நெடுமலன்" /நன்றி -சிவகுமார் சுப்பையா/

பணிதம் பானிதம் பைனி பதனி பணித வணிகன் நெடுமலன்" என்பது  ஒரு கல்வெட்டுப் பகுதியில் இடம்பெற்ற பெயர். இதன் பொருள், "அழகான ...