ஶ்ரீநரசிங்கநாத ஈஸ்வரர் சமேத ஶ்ரீஆவுடையம்பாள் திருக்கோயில் குடமுழுக்கு விழா


அங்கமங்கலம் ஶ்ரீநரசிங்கநாத ஈஸ்வரர் சமேத ஶ்ரீஆவுடையம்பாள் திருக்கோயில் குடமுழுக்கு விழா அற்புத நிகழ்வாக நடைபெற உள்ளது. 🌻🌻🌻🌻🌹🌹🌹🌹 நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவிற்கு மோட்சம் அளித்த திருமால் அவரது இயல்பான அங்கத்தை பெற சிவபெருமானை வழிபட்ட தலமும், தாமிரபரணி நதி கரையோரம் அமைந்துள்ள தசவீரட்டானத்தலங்களில் (மேற்கு பார்த்த சிவாலயம்) ஒன்றான தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, குரும்பூர் அருகே உள்ள அங்கமங்கலம் ஶ்ரீநரசிங்க நாத ஈஸ்வரர் சமேத ஶ்ரீஆவுடையம்பாள் திருக்கோவிலின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா வருகிற குரோதி வருஷம், ஆனி மாதம் 23ம் தேதி ஞாயிற்று கிழமை (07/07/2024) அன்று நடைபெற சிவனருளால் கூடியுள்ளது. இதன் தொடக்க நிகழ்வாக 05/07/2024 வெள்ளிக்கிழமை காலை சரியாக 07:00 மணிக்கு குரும்பூர் ஶ்ரீ ஆதிநாராயண பெருமாள் திருக்கோவிலில் இருந்து அடியார்கள் புடைசூழ திருமுறைநாதர் குரும்பூர், அங்கமங்கலம் வீதிகளில் திருவீதி உலா வந்து அங்கமங்கலம் நரசிங்க நாத ஈஸ்வரர் திருக்கோவில் யாகசாலைக்கு எழுந்தருள்கிறார். அதுசமயம் நமது , பக்தகோடிகளும், அனைத்து மெய்யன்பர்களும் பங்கேற்று சிவபெருமானின் நல்லருளை பெற வேண்டிக் கொள்கிறோம் 🌹🌹🌹🌹🌹

No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...