காஞ்சிபுரத்தில் உள்ள ராஜராஜ அணிமுரி நாடாழ்வார் [நாடான்-சான்றோர்] கல்வெட்டு



காஞ்சிபுரத்தில் உள்ள ராஜராஜ அணிமுரி நாடாழ்வார் [நாடான்-சான்றோர்] கல்வெட்டு இடம் - காஞ்சிபுரம் மாவட்டம்-செங்கல்பட்டு வட்டம்,/ ஆமூர் பிள்ளையார் கோயில் அருகே உள்ள கல்/ காலம் – கி.பி. 990 முதலாம் இராஜராஜன் ஆட்சியாண்டு 5./ செய்தி – முதலாம் இராஜராஜனின் ஐந்தாவது ஆட்சியாண்டில் இராஜராஜ அணிமுறி நாடாழ்வார் என்ற சோழ உயரதிகாரி ஆமூரிலுள்ள இறையான் கோயில் மகாதேவருக்குத் திருவமுது செய்து படைப்பதற்காக பட்டி நிலத்தை பொற்பர் எனப் பெயரிட்டு ஆமுர் சபையாரிடம் கொடையாக வழங்கியதைப் பற்றி தெரிவிக்கின்றது./ 1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிந்தராஜகேஸரி பன்மற்கு 2. யாண்டு அஞ்சாவது ஆமூர் இறையான் கோயில் 3.மாஹா தேவற்க்கி திருவமுதுக்கு வைய்த்த பட்டி 4. ய் நிலமும் இராஜராஜ அணிமுரி நாடாழ்வார் கந்மிகள் 5. பொற்பர் என்று பேரிட்டு ஏரியுடையப் பாண்டியன் 6. என்று பேரிட்டோம் ஆமூர் சபையோம் 7. இதின் வடக்கீழரை நிலமும் ஆக ஒன்றரை இ பொ[ன்] 8. அட்டொழி செய்யும் என்று பேரிட்டோம் ஆமூர் சபையோம் 9. இது க்ரவித்தான் மாஹாதேவன் எழுதிவித்தது. [நன்றி-ஆவணம்-இதழ் 19, 2008]

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...