முசிறியில் கி.பி 11 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த தீப நாடாழ்வான் கல்வெட்டு



முசிறியில் கி.பி 11 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த தீப நாடாழ்வான் கல்வெட்டு / இடம் - கரூர் மாவட்டம்,முசிறி வட்டம்,அழகரை,சோமீசுரர் கோயிலின் தென்புறம் சுவற்றில் காணப்படும் கல்வெட்டு / காலம் – மூன்றாம் குலோத்துங்கன் கி.பி-1191 / செய்தி – இக்கல்வெட்டு 25 வரிகளைக் கொண்டுள்ளது. திருவத்தவத்துறையில் [இலால்குடி]பாடிகாவல் காணி உடைய குலதீப நாடாழ்வான் அலகறையில் சோமீசுர்ர் கோயில் எழுப்பி அங்கு பணி புரியும் தேவர்கன்மிகள் ,பந்மாஹேஸ்வரக் கண்காணிசெய்வார்கள் ஆகியோருக்கு கோயில் நிமந்தங்களை நட்த்துவதற்கு ஏழரை வேலிக்குச் சற்றுக் கூடுதலான நிலம் அளித்துள்ளான்.இந்நிலத்தின் மீது விதிக்கப்பட்ட வரிகல் விலக்களிக்கப்பட்டன. ஒரு வேலிக்கு 50 கலம் நெல் என்று தீர்வை விதிக்கப்பட்டுள்ளது. / 1. ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவனச்சக்ரவத்தி கோனேரின்மைகொண் 2. டான் பாண்டிகுலாசநி வளநாட்டு இடையாற்றூர் நா 3. ட்டு திருத்தவத்துறை பாடிகாவற் காணியுடை 4. ய செந்நிவாட்கைக் சேமந் தாயிலு நல்லானான குல 5. தீப நாடாழ்வான் இராசராச வளநாட்டு மீமலை ஐயங்கொ 6. ண்ட சோழச்சதுர்வேதிமங்கலத்துப் பிடாகை அலகறை 7. யான குலோத்துங்க சோழ நல்லூர் ஸ்ரீகயிலாஸமாக எ 8. ழுந்தருளிவித்த சோமீச்வரக்கண்காணி செய்வார்களுக்கும் இத்தேவர்க்குவே 9.....................................25 /.......... [நன்றி-ஆவணம்,இதழ் 11,2000-பக்;38]

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...