கி.பி-1181 மூன்றாம் குலோத்துங்கன் காலத்தைச்சேர்ந்த மகதை நாடாழ்வான் கல்வெட்டு




தென்னாற்காடு மாவட்டம்,திட்டக்குடி வட்டம், ம.புடவூர்-அருள்மிகு திருவனந்தீசுவர்ர் கோயில். கி.பி-1181 மூன்றாம் குலோத்துங்கன் காலத்தைச்சேர்ந்த மகதை நாடாழ்வான் கல்வெட்டு
இடம் – அர்த்த மண்டபத்தென் சுவர் இடைநாழி மகாமண்டப மேற்குச்சுவர்
காலம் – மூன்றாம் குலோத்துங்கன் கி.பி-1181
1 . ஸ்வஸ்திஸ்ரீ புயல்வாய்த்து வளம் பெருக பொய்யாத நாந் மறையுஞ் செயல் வாய்த்து திருமகளுஞ் சிறந்து வாழ வெண்மதிபோற் குடை விளங்க வேல் வேந்தரடிவணங்க மண்ம
2 . டந்தை மதங்களிப்ப மநுநீதி தழைத்தோங்க சக்கரமுஞ் செங்கோலுந் திக்கனைத்தும் செல நடப்ப கற்ப காலம் புவிகாப்ப பொற்பமைந்த முடிபுனைந்து செம்
3 . பொன் வீர சிங்காசனத்து புவனமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கொப்பரகேசரிபம்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோ
4 . ழதேவற்கு யாண்டு மூன்றாவது மிலாடாகிய ஜனனாத வளநாட்டுக் கீழ்நரையூர் கூற்றத்துப் புடவூரில் திருவந்ந்தீசுவரம் உடைய நாயநாற்குஇந்நாடு
5 . டையநாயந் இராராதேவந்நாந இராரா மகதை நாடாழ்வாநேந் இந்நாயநாற்குப்படி நிமந்தம் சந்திராதித்தவரை செல்வதாக இன்னாட்டுக் கல்லூற்
6 . புந்செய் நிலத்தில் மேல்பாதியில் புடவூர் எல்லைக்கு கிழக்கு இன்னாயனாற்கு விட்ட புந்செய் நிலம் இருபதிற்று வேலியும் இந்நிலம் இனாயனார்கு சந்திராதித்தவரை
7 . செல்வதாக விட்டேந் நாயந் இராராதேவனாந இராரா மகதை நாடாழ்வநேன் இது பன்மாஹேச்வரரஷை
நன்றி-ஆவணம்-1993-பக்5,6.

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...