ஆறுமுகநேரி நாடார்களின் சுதந்திரப்போராட்டத் தியாகிகள்
கே.டி.கோசல்ராம்த.பெ. தூசிமுத்து நாடார்
1930
இல் சிறு வயதில் துண்டு பிரசுரங்களை வெள்ளையருக்கு எதிராகக் கொடுத்தார்.
பலமுறை கள்ளுக்கடை மறியல் இளவயது என்பதால் காவல்துறையினர் அடிகொடுத்து
விட்டனர். 1942 போராட்டத்தின் போது துப்பாக்கியால் இவரைச் சுட்டு
பிடிப்பதற்கு உத்தரவிடப்பட்டது. கலைக்டர் ஹெச்மாடியால் கைது
செய்யப்பட்டார். வெள்ளையருக்கு எதிராக மரணப் படை அமைத்தார்.
உப்புச்சத்தியாகிரக வழக்கில் ஒன்றரை வருடம் சிறைவாசம் குரும்பூர்
சதிவழக்கில் 21 மாதம் சிறைவாசம். சாக்குச்சட்டை அணியச் செய்தனர். கைவிலக்கு
போட்டனர். பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். திருச்செந்தூர்
ஸ்ரீவைகுண்டம் தென்காசி கொக்கரக்குளம் தஞ்சை வேலூர் சிறைகளில் தண்டனை
பெற்றார். போராட்டங்களுக்குத் தளபதியாகத் திகழ்ந்தார். சட்டமன்ற
உறுப்பினராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவுமிருந்து சேவை செய்துள்ளார்.
மனைவி பெயர் கோமதி. இவருக்கு மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் உள்ளனர்.
எம்.எஸ்.செல்வராஜன்த.பெ. சண்முகசுந்தர நாடார்
1942
ஆகஸ்டு இயக்கத்தில் ஆறுமுகநேரி கீரனூர் உப்புச் சத்தியாகிரகம். 1942
செப்டம்பர் மாதத்தில் ஆறுமுகநேரியில் முதன் முதலாகக் கைது செய்யப்பட்டு 15
பேருடன் போலீஸ் வேனில் ஏற்றிச் சென்ற போது வந்தே மாதரம் மகாத்மா காந்திக்கு
ஜே என்று கொஷித்ததற்காக வேனிலேயே போலீசாரின் குண்டாந்தடி தாக்குதல்.
திருச்செந்தூர் சிறையில் மூர்ச்சையாகும் வரை விரல்கள் ஓடியும்படி மடக்குதல்
ரோமங்களை பிடுங்கதுல் கைகளைப் பின்புறமாக மடக்கி முதுகில் செங்கல்லுடன்
சேர்த்துக்கட்டி செங்கல்லில் தண்ணீர்விட்டு கட்டை இறுக்கி சித்திரவதை
செய்தல். திருச்செந்தூர் கொக்கிரகுளம் சப்ஜெயிலில்களில் 21/2 மாதம்
அலிப்புரம் சிறை 6 மாதம் மனைவி பெயர் லஷ்மிபாக்கியம். ஐந்து பெண்களும்
மூன்று ஆண்களும் இருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினராகச் சேவை
செய்துள்ளார்.
த.தங்கவேல்த.பெ. ரா.தவசிமுத்து நாடார்
1942
இல் உப்புச் சத்தியாகிரகம் ஆறுமுகநேரி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவராக
இருந்து போராட்ட வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்து பொருளுதவி செய்தார். உப்புச்
சத்தியாகிரகத்தில் 6 மாதத் தண்டனை மெஞ்ஞானபுரம் தபாலாபீசைக் கொளுத்திய
பொய் வழக்கு விசாரணைக்காகத் திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் தூத்துக்குடி
கொக்கிரகுளம் கிளைச் சிறையில் 20 மாதங்கள் பொய்வழக்கு வாபஸ் பெறப்பட்டு
விடுதலை ஆனவுடன் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு தஞ்சாவூர்
கேம்ப் சிறையில் வைக்கப்பட்டு சுதந்திரத்திற்குப் பின் விடுதலை அடைந்தார்.
முதல் மனைவி பெயர் வெள்ளையம்மாள் 2வது மனைவி பெயர் சண்முகக்கனி அம்மாள் 5
ஆண்களும் இரண்டு பெண்களும் இருக்கிறார்கள்.20 வருடக் காலம் தாலுகா
காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சி வேலையில்
ஈடுபட்ட இவர் திருச்செந்தூர் தாலுகா சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கத்
தலைவராகவும் இருந்து பணியாற்றியுள்ளார்.
வெ. காசிராஜன்த.பெ. வெள்ளைய நாடார்
ஆறுமுகநேரி
உப்புச்சத்தியாகிரகம் குலசேகரப்பட்டினம் லோன்துரை கொலைவழக்கு
குலசேகரப்பட்டினம் வழக்கில் செக்ஷ்ன்கள் 148/7 அவசரச்சட்டம் 111/42 இன்
கீழ் 3 ஆண்டு கடுங்காவல் 326/149 அவசரச்சட்டம் 4-இன் கீழ் ஒரு ஜென்மக்
கடுங்காவல் 436/149 அவசரச்சட்டம் 4-ன் கீழ் ஒரு ஜென்மக் கடுங்காவல்
436/149, 395/6 அவசரச்சட்டம் 4-கீழ் இன்னொரு ஜென்மக் கடுங்காவல்
அவசரச்சட்டம் 4-கீழ் மற்றுமொரு ஜென்ம கடுங்காவல் ஆகியவற்றை உள்ளடக்கிய
செக்ஷ்ன் 302/149 அவசரச்சட்டம் 4-ன் கீழ் முடிவாக மரணதண்டனை திருச்செந்தூர்
கொக்கிரகுளம் கிளைச் சிறையில் கொக்கிரகுளத்தில் சாக்குச்சட்டை நிலைவிளக்கு
கசையடி தண்டனை மதுரை மத்தியச் சிறைத் தூக்குத்தண்டனைக் கொட்டறையில் 2
ஆண்டு 7 மாதம் பின்னர் திருச்சி மத்தியச்சிறை அலிப்புரம் சென்னை மத்தியச்
சிறை. ஜெனரல் ஆஸ்பத்திரியில் சில காலம் 1946 கடைசியில் இறுதியாக விடுதலை
மனைவி பெயர் இரத்தினவாதி மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் இருக்கிறார்கள்.
பெ.ராஜகோபாலன்த.பெ. பெரிய நாடார்
ஆறுமுகநேரி
உப்பளச்சட்ட உடைப்பு வழக்கில் 18 மாதக்கடுங்காவல் பின்னர் அது 6 மாதமாக
குறைக்கப்பட்டது. குலசேகரப்பட்டணம் வழக்கில் செக்க்ஷன் 148/7 அவசரச்சட்டம்
111/42 ன் கீழ் 3 ஆண்டு கடுங்காவல். 326/149 அவசரச்சட்டம் 4-ன் கீழ் ஒரு
ஜென்ம கடுங்காவல் 436/149 அவசரச்சட்டம் 4-ன் கீழ் ஒரு ஜென்ம கடுங்காவல்
436/149, 395/6 அவசரச்சட்டம் 4-ன் கீழ் இன்னொரு ஜென்ம கடுங்காவல்
அவசரச்சட்டம் 4-ன் கீழ் மற்றுமொரு ஜென்ம கடுங்காவல் ஆகியவற்றை உள்ளடக்கிய
செக்க்ஷன் 302/149 அவசரச்சட்டம் 4-இன் கீழ் முடிவாக மரணத்தண்டனை
திருச்செந்தூர் கொக்கிரகுளம் சப்ஜெயில்கள் கொக்கிரகுளத்தில் சாக்கு சட்டை
நிலை விலங்கு சகையடி தண்டனை மதுரை மத்திய சிறைத் தூக்குத்தண்டனை
கொட்டறையில் 2 ஆண்டு 7 மாதம் பின்னர் திருச்சி சிறை அலிப்புரம் சென்னை
மத்திய சிறை ஜெனரல் ஆஸ்பத்திரியில் சில காலம் 1946 கடைசியில் இறுதியாக
விடுதலை மகைவி பெயர் சித்திரவடிவம்மாள் இரு பெண்களும் இரு ஆண்களும்
உள்ளனர். இவர் ஒரு சிறந்த பத்திரிக்கையாளர்.
ச. அருணாசல நாடார் த.பெ. சண்முக நாடார் 1942 கீரனூர் உப்புச்சத்தியாகிரகம் 6 மாத தண்டனை. மாநில பென்ஷன் பெறுகிறார். மனைவி ஜெயலெட்சுமி 4 ஆண்களும் 3 பெண்களும் உள்ளனர். மாநில அரசு உதவித் தொகை வழங்குவதற்கான பரிந்துரைக் குழு உறுப்பினராக உள்ளார். த. ஆண்டியப்பன் த.பெ. தங்கையா நாடார்
பெரம்பூர்
சென்னை உப்புச்சத்தியாகிரகம் அலிப்புரம் சிறையில் 6 மதம் தூத்துக்குடி
ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர் கிளை சிறையில் 9 மாதம் பென்ஷன் பெறவில்லை.
மனைவி செவந்திகனி 3 பெண்களும் 5 ஆண்களும் உள்ளனர். 1955 முதல் 68 வரை
சென்னை கார்ப்பரேஷன் மெம்பராக பணியாற்றினார்
ச. திக்கிலான்குட்டி நாடார் த.பெ. சண்முக நாடார்
சத்தியாகிரகம் திருச்செந்தூர் கொக்கிரக்குளம் அலிப்புரம் சிறையில் 6 மாதம் தண்டனை.
தூ.நடேச நாடார் த.பெ.தூசிமுத்து நாடார்
உப்புச்சத்தியாகிரகம்
திருச்செந்தூர் கொக்கிரகுளம் அலிப்புரம் சிறையில் மொத்தம் 6 மாதம் 20
நாட்கள் மாநில பென்ஷன் பெறுகிறார். மனைவி சொர்ணம் அம்மாள் 4 ஆண்களும் 1
பெண்ணும் உள்ளனர்.
தூ.நடேச நாடார் த.பெ.தூசிமுத்து நாடார்
உப்புச்சத்தியாகிரகம்
திருச்செந்தூர் கொக்கிரகுளம் அலிப்புரம் சிறையில் மொத்தம் 6 மாதம் 20
நாட்கள் மாநில பென்ஷன் பெறுகிறார். மனைவி சொர்ணம் அம்மாள் 4 ஆண்களும் 1
பெண்ணும் உள்ளனர்
ஆர்.எஸ். ராஜபாண்டியன் த.பெ. சடையாண்டி நாடார்
ஆகஸ்டு போராட்டம் உப்புச்சத்தியாகிரகம் அலிப்புரம் கேம்ப் சிறையில் 6 மாதம். மனைவி தனலெட்சுமி 3 ஆண்களும் 1 பெண்ணும் இருக்கிறார்கள்.
எஸ்.வி. மகாலிங்கம் த.பெ. வேலாயுத நாடார்
உப்புச்சத்தியாகிரகம்
6 மாதம் அலிப்புரம் சிறையில் 2 மாதம் திருச்செந்தூர் கொக்கிரகுளம் கிளை
சிறையில் மனைவி சொர்ணம்மாள் ஒரு ஆணும் இரண்டு பெண்களும் இருக்கிறார்கள்
எஸ்.ஏ. தாயம்மாள்
ஆறுமுகநேரி
1941 - இல் தனிப்பட்ட சத்தியாகிரகத்தில் ஆழ்வார்திருநகாில் போலீசாரால்
கைது செய்யப்பட்டு 1942-இல் ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையிலும் தூத்துக்குடி
கிளை சிறையிலும் ரிமாண்டிலிருந்தார். அரசினர் காதி இலாக்காவில்
பரப்பாடியில் வேலை பார்த்தார்.
பி.தங்கராஜன் த.பெ. பிரமத்து நாடார்
1942 உப்புச்சத்தியாகிரகம் திருச்செந்தூர் கொக்கிரகுளம் அலிப்புரம் கேம்ப் சிறையில் 6 மாதம். மனைவி சண்முகசுந்தரி.
இ.பி. தங்கவேலன்நாடார்
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பல காலம் தலைமறைவாக இருந்தவர். மனைவி தங்கம்மாள்
ல. மூக்க நாடார் த.பெ. லட்சுமண நாடார்
உப்புச்சத்தியாகிரகம் திருச்செந்தூர் கொக்கிரகுளம் அலிப்புரம் சிறையில் 6 மாதம் மனைவி காசித்தங்கம்மாள் 2 பெண்களும் 1 ஆணும் உள்ளனர்.
ஆ.சிவபெருமாள் நாடார்த.பெ. ஆதிநாராயண நாடார்
ஆறுமுகநேரி கீரனூர் உப்புச்சத்தியாக்கிரகம் அலிப்புரம் சிறையில் 6 மாதம் கலப்புத் திருமணம் மனைவி பாப்பம்மாள் ஏழு குழந்தைகள்.
பொ. மாவுலி ராஜா நாடார் த.பெ. பொன்னையா நாடார்
உப்புச்சத்தியாகிரகம்
திருச்செந்தூர் கொக்கிரகுளம் அலிப்புரம் சிறையில் 6 மாதம். மனைவி
அன்னப்பூர்ணம்மாள் 2 ஆண்களும் 2 பெண்களும் உள்ளனர்.
ஆர்.எஸ். தங்கவேல் நாடார் த.பெ. சடையாண்டி நாடார்
1941
இல் தனி நபர் சத்தியாகிரகத்தில் சென்னை சிறையில் 3 மாதம். 1942இல் எல்லா
போராட்டங்களிலும் பங்கெடுத்து ஒரு வருடம் தலைமறைவாக இருந்தார். ஆறுமுகநேரி
உப்புச்சத்தியாகிரகத்தில் கைதாகி அலிப்புரம் சிறையில் 6 மாதத் தண்டனை.
மனைவி அழகுசுந்தரி 5 ஆண்களும் 3 பெண்களும் உள்ளனர்.
சு.தங்க பெருமாள் நாடார் த.பெ. சுப்பையா நாடார்
ஆறுமுகநேரி
கீரனூர் உப்புச்சத்தியாக்கிரகம் அலிப்புரம் சிறையில் 6 மாதம். காலமான
முதல் மனைவிக்கு 3 ஆண்கள் இருக்கிறார்கள். 2ஆம் மனைவி ஞானரத்தினம்மாள்.
சு.பொ.காசிராஜன் த.பெ. பொன்னுசாமி நாடார்
ஆறுமுகநேரி
கீரனூர் உப்புச்சத்தியாக்கிரகம் செங்கற்பட்டு மைனர் சிறையில் 2 வருடம்.
மனைவி பாலசுந்தரி 2 பெண்களும் 4 ஆண்களும் உள்ளனர். போலீஸ் கான்ஸ்டபிளாகப்
பணிபுரிந்தார்.
சு.நடராஜன் த.பெ.சுடலைமுத்து நாடார்
கீழவீடு
உப்புச்சத்தியாகிரகம் திருச்செந்தூர் கொக்கிரகுளம் அலிப்புரம் கேம்ப்
சிறையில் 6 மாதத் தண்டனை. மனைவி அருணாசலவடிவம்மாள் 2 பெண்களும் 2 ஆண்களும்
உள்ளனர்.
வே.த. சின்னத்துரை த.பெ. தங்கையா நாடார்
உப்புச்சத்தியாகிரகம்
திருச்செந்தூர் கொக்கிரகுளம் அலிப்புரம் கேம்ப் சிறையில் 6 மாதத் தண்டனை.
மாநில பென்ஷன் பெறுகிறார். மனைவி கனி அம்மாள் 3 ஆண்களும் ஒரு பெண்ணும்
உள்ளனர்.
மா.அழகுவேல் நாடார் த.பெ.மாலவ நாடார் பேயன்விளை
உப்புச் சத்தியாகிரகம் ஆறுமாதம் சிறைத்தண்டனை.
த.ராமநாடார் த.பெ. தங்கவேல் நாடார் ஆறுமுகநேரி.
கீரனூர்
உப்புச்சத்தியாகிரகம் திருச்செந்தூர் அலிப்புரம் சிறையில் 6 மாதம் தண்டனை.
மனைவி பாலகனி அம்மாள் 2 ஆண்களும் 2 பெண்களும் இருக்கிறார்கள்.
த.லெக்ஷ்மண நாடார் த.பெ. தங்கவேல் நாடார்
ஆறுமுகநேரி
கீரனூர் உப்புச்சத்தியாகிரகம் திருச்செந்தூர் கொக்கிரகுளம் கிளை சிறையில்
அலிப்புரம் சென்ட்ரல் சிறையில் 6 மாதம் தண்டனை. கலப்பு மணம். மனைவி பகவதி.
ஒரு மகளும் உள்ளனர்.
ஆறுமுகநேரி உப்புச்சத்தியாகிரகம். குரூம்பூர் ரயில் நிலையம் தீவைப்பு வழக்கு. திருச்செந்தூர் கொக்கிரகுளம் தூத்துக்குடி சப் சிறையில் 11/2 வருடம் ாிமாண்ட். பின்னர் பாதுகாப்புக் கைதியாக தஞ்சாவூர் விசேட சிறைச்சாலையில் 71/2 மாதம் வேலூர் மத்திய சிறையில் 81/2 மாதம் 29.08.1945 இல் விடுதலை. மனைவி பாப்பாத்தி அம்மாள் ஒரே மகள் ராதா.
| ||||||||||
சுதந்திரப்போராட்டத்தில் ஆறுமுகநேரி நாடார்களின் வீரம் செறிந்த பங்கேற்பு
By
Dr Thavasimuthu maran
knowthis
·
தெரிந்து கொள்வோம்...[தொடரும்]
-
சிவணைந்த பெருமாள் பெரும்பான்மையாக நாடார் சமூகத்திலும் சில மறவர் குடும்பங்...
-
நாடார் சமுதாயத்தின் தோற்றமும் குலதெய்வ வழிபாடும் ‘Ritual protected’ families In ‘Ritual protected’ families, on the other hand, ...
-
நாடார் தென்னாட்டில் சான்றோரே நாடார் என அழைக்கப்படுகின்றனர். நாடார் எனப்படுவோர் அனைவரும் ஒரே மூலத்தைச் சேர்ந்தவர்களோ,ஒரே இடத்தில் ஒரே மாத...
எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)
எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...
SEARCH
LATEST
3-latest-65px
Total Pageviews
திருக்குறள்
பதிவுகள் (Updated)
No comments:
Post a Comment