ஆதித்தமிழ்-தாமிழி-பிராமி எழுத்துக்கள்-BHRAMI
தமிழ் மொழியின் எழுத்துக்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும்;அதன் வடிவம் எவ்வாறு இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் தமிழகம் மட்டுகின்றி உலகமெங்கும் விரவிக்கிடக்கின்றன.
முற்காலத்தில் துறவிகளும்,அரசர்களும்,மக்களும்தங்களுடைய வாழ்வியற் செய்திகளை கல்லில் பொறித்தனர்.கல்லின் மீது எழுதப்பட்ட எழுத்துக்கள்,அழியாத தன்மையுடையதாக இருந்தன கொடுமையான வெயிலையும்,கடுமையான மழையையும் தாங்கும் சக்தியுடையதாக இருந்தன.மலையின் மீதும்,குகைகளிலும்,குடைவரையிலும்,கோயிலின் கற்சுவர்களிலும்,கற்பலகைகளிலும் பொறித்து வைத்தனர். ஆதித்தமிழ்
எழுத்து தாமிழி அல்லது பிராமி என்றழைக்கப்படும்.கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.2 ஆம் நூற்றாண்டு வரையிலானக் காலத்தில் இவெழுத்துக்களின் வரி வடிவம் மாற்றம் பெறாமல் ஒரே வடிவத்தில் இருந்தது.அதன்பின்பு கி.பி.19 ஆம் நூற்றாண்டு வரையில் உயிரெழுத்து, மெய்யெழுத்து,உயிர் மெய்யெழுத்து ஆகியனவற்றுள் எழுத்து மாற்றங்கள் படிப்படியாக எவ்வாறு பெற்றன என்பதை பின் வரும் அட்டவணை மூலம் அறியலாம்.
No comments:
Post a Comment