மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய விக்கிரம சோழ மகதை நாடாழ்வாரின் கி.பி.1210 இன் கல்வெட்டு



மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய விக்கிரம சோழ மகதை நாடாழ்வாரின் கி.பி.1210 இன் கல்வெட்டு இடம் - அரியலூர் மாவட்டம்,அரியலூர் வட்டம் பெரியமறை சுவேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டபக் கிழக்குச்சுவர் காலம் - மூன்றாம் குலோத்துங்கன்,யா.32,கி.பி.1210 1.ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவர்த்திகள் மதுரையும் ஈழமும் கருவூரும்பா 2.ண்டியன்முடித்தலையும் கொன்உ வீரா அபிஷேகமும் லிஜையா அபிஷே 3.கமு பண்ணி அருளிய திரிபுவ வீரதேவற்கு யாண்டு முப்பத்திரண்டாவது 4.ன அகளங்கபுரத்து உடையார் திருப்பார்பதீஸ்வரமுடைய நாயனார்க்கு ஆறகளூருடைய பொ 5.ன் பரப்பினான் வெட்டும் இரா ரா தேவனாரான விக்கிரம சோழ மகதை நாடாழ்வார் திருநாமஞ் சாத்தி செய் 6.த திருவோலக்க மண்டபம் எடுத்து வலிய பெருமானென்று இது செய்வித்தான் சென்னிவலக்கூற் 7.றத்து ஆற்றூருடையான் பட்டன் பொன்பரப்பினான சித்திரராயன் ஸ்ரீமாயேஸ்வர ரக்‌ஷை நன்றி-ஆவணம்--20.,ப.62.

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...