மாவிலைத் தோரணம் கட்டுவதால் ஏற்படும் நன்மைகள்
கோயில்களில் திருவிழா நடைபெறும் காலங்களிலும் பெருந்திரளான மக்கள் கூட்டம் கூடுமிடங்களிலும். அவர்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத்துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மா இலைகளிலும் அதன் சக்தி குறையாது. எனவேதான் விழா காலங்களில் மாவிலைத் தோரணம் கட்டும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியுள்ளனர்.
விழாக்கள் நடைபெறும்போது இல்லங்களிலும் பொதுவிடங்களிலும் தோரண வாயில் அமைக்கின்றனர். பந்தலிடுவது, கோலமிடுவது, தோரணவாயில் அமைப்பது எல்லாம் விழாவுக்கே உரிய செயல்களாகக் கருதப்படுகிறது. இது பன்னெடுங்காலமாக உள்ள பழக்கம்.
காரணமில்லாமல் காரியமா? பழங்காலத்திலிருந்தே தோரணம் கட்டுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது தோரணம் என்றால் அது ‘மாவிலைத் தோரணம்’ என்றிருப்பதற்கு உரிய காரணம் என்ன?மாவிலைகள் ‘புரோஹிஸ்பிடின்’ என்னும் வாயுவைக் காற்றில் பரவவிடுகின்றன. காற்றில் கலந்துள்ள நோய்க் கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் ‘புரோஹிஸ்பிடின்’ வாயு அழிக்கிறது.மாவிலைத் தோரணம் சுற்றுச் சூழலைத் தூய்மையாக்கும் கிருமி நாசினி என்று அறிந்திருந்தனர், நம் முன்னோர்கள்.
விழாக்களின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் மக்கள் அதிகம் கூடுவர். ‘கும்பல் பெருத்தல் செப்பெருக்கும்’ என்றொரு பழமொழி நினைவுக்கு வருகிறது. கும்பல் பெருகுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. தூய்மை கெடுகிறது. சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது.
காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும் பாக்டீரியாக்களும், மக்களைத் தாக்குகின்றன. உடல் நலத்தைக் கெடுக்கின்றன. நோய்க்கிருமிகளிலிருந்தும் பாக்டிரியாக்களிலிருந்தும் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே மாவிலைத் தோரணங்கள் கட்டப்படுகின்றன.
மாவிலைத் தோரணத்துக்கும் சுற்றுப்புறத்தூய்மைக்கும் என்ன தொடர்பு? இருக்கிறது! இல்லாமலா தோரணம் கட்டுவார்கள்?
இப்போது, மாவிலைக்கு மாற்றாக பிளாஸ்டிக் தோரணம் கட்டுகின்றார்கள். அவர்கள் பின்னோர்கள். பிளாஸ்டிக் தோரணத்தினால் ஒரு நன்மையும் ஏற்படப் போவதில்லை. தினந்தோறும் இல்லங்களில் மாவிலைத் தோரணம் கட்டினால் இல்லத்திலுள்ளவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கலாம். மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம். வீட்டிலுள்ள நுழைவு வாயிலும் மங்களகரமாகத் தோன்றும்.

By
Dr Thavasimuthu maran
knowthis

-
சிவணைந்த பெருமாள் பெரும்பான்மையாக நாடார் சமூகத்திலும் சில மறவர் குடும்பங்...
-
VILLAVAR The Villavar were rulers of the Chera Chola Pandyan kingdoms. Villavar aristocracy was called Nadalvar. Villavar-Bana r...
-
சான்றோர் பாண்டியர் இது ஒரு குலத்தின் அடையாளமா,அல்லது ஒரு பகுதியைச் சேர்ந்தவர்களின் அடையாளமா அல்லது தென் பாண்டி நாட்டை ஆட்சி செய்தவ...
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...
SEARCH
LATEST
3-latest-65px
Total Pageviews
திருக்குறள்
பதிவுகள் (Updated)
No comments:
Post a Comment