மதகனேரி அய்யா வரலாறு



கலியுகமாகிய இந்த உலகத்தில் கலியை அழித்து தர்மத்தை நிலைநாட்டி உலகமக்கள் அனைவருக்கும் சிவஞான அறிவைக் கொடுத்து தன்னுடைய பிள்ளைகளை தானே ஆட்சி செய்ய வருகிறார்.எப்படி வருகிறார்? எப்படி கலியை அளிக்கவேண்டுமென்று தெளிவாக மக்களுக்கு எலுதி வைதிருக்கிறார்.எலுதிவைதிருக்கும் திரு ஏடுதான் “முடிபுகழ்ந்த அம்மானை” ஆகும்.இந்த ஏடு மதகனேரியில்அழியாசின்னமாக இருக்கிறது.சுவாமி தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டதில் மதகனேரி கிராமத்தில் மதிப்புக்குரிய குட்டிவெள்ளைஐயா நாடாருக்கு மகனாக பரதேசி நாடார் கி.பி.1871 ஆம் ஆண்டு பிறந்தார்.சுவாமி சிறுவயதுமுதல் நற்பண்புகளை கொண்டவராக இருந்தார்.சுவாமி கூடங்குளத்தைச் சேர்ந்த பொன்னமாள் என்பவரை மணம் முடித்து,மூன்று ஆண்மக்களும் இரண்டு பெண்மக்களும் பிறந்தார்கள்.சுவாமி மனைவி மக்களுடன் நல்லொலுக்கமான குடும்பவாழ்க்கை வாழ்ந்து வந்தார்.சுவாமியின் 26வது வயதில் வலதுகையில் முடிசூடும் பெருமானாக சக்கரத்தைப்பதித்தார் பெருமாள்.32வது வயதில் இடது கையில் முடிசூடப்போவதை எழுதும் “அசரத்தை”பதிதார்.உலகம் தோன்றியதுமுதல் நடந்த,நடக்கின்ற,நடக்கபோகின்ற எல்லா ஞானங்களையும் (அச்சரம்)அவருடைய நாவினால் சொல்லும் சக்தியை அடிநாக்கில் எழுதினார்.சுவாமிதோப்பில் வைத்து சிவஞானதை கொடுதார்.திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைத்து சாகவரமாகிய அமிர்தலிங்கத்தை கொடுதார்.பூலோக உணவை நீக்க அமிர்தகலசத்தைகக் கொடுத்தார்.பூலோகத்தை ஆட்சி செய்யும் பூலோக வாசகத்தை கொடுதார் என்றும் 42வது வயதாக கைலாசம் கொண்டு செல்வதற்கு மதகனேரியில் வைத்து ஆதிநாராயனருடைய வெள்ளி மலைக்குள் இருந்து சிவலிங்கத்தை கொண்டுவந்து சிவலிங்கதையே தரித்தா ஆதிநாராயாயணன்.இத்தகைய சிறப்பு பெற்ற மதகனேரி சுவாமி சிவஞான நிலையொடு மதகனேரியில் வாழும்பொது பல அற்புத அதிசயங்க்களை செய்திருகிக்கின்றார்.பைதியங்களை தெளியவைத்தல்,நோய்களை குணப்படுதுதல்,ஒரே நேரதில் மதகனேரியிலும்,அதே நேரம் திருச்செந்தூரிலும் சுவாமி கும்பிட்டிருக்கிறார்கள்.தோட்டதில் நீர் இறைப்பவனாகவும்,நீர்பாய்சுவானாகவும் ஒரே இடத்தில் இருந்திருக்கிறார்.அநேக அற்புத அதிசயங்களை செய்து வாழ்தார்.சுவாமி மதகனேரி ஊரை சேர்ந்த சுப்பையாநடார் என்பவரை தன்னுடைய சிடராக வைத்திருந்தார்.41வது வயதில் சிவஞான அறிவுடன் சுவாமியும்,சீசருமாக பனைமரத்து ஓலையை வெட்டி அதில் எழுதுவதற்காக வடிவமைத்தார்.பின்னர் சுவாமி தவநிலையில் இருந்தார்.5 மாதமாக ஒரு கதலி வாழைப்பழம் மட்டும் உணவாக சாப்பிட்டார் தவமிருந்த இடத்தில் வெள்ளை துணியால் திரை அமைத்து சீசர் உதவியுடன் எழுத தொடங்கினார்கள் சீசருக்கு அ என்ற எழுத்துக்கூட எழுததெரியாது என்னால் எப்படி எழுத முடியும் என்று சுவாமியிடம் கேட்டபோது நீ பரமனை நினைத்து எழுது தானாக எழுதும் என்றார் சுவாமி சொல்ல சொல்ல சீசர் எழுதினார் எழுதும் போது ஊரிலுள்ள பெரியவர்களும் கூட இருந்தார்கள் பூலோகத்தில் நடக்காத அதிசயமாக இருந்தது அதுவும் நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்தது வியப்பாக இருக்கிறது ஆனால் உண்மை உண்மை எழுத்தை தமிழிலும் சமஷ்கிறுதத்திலும் எழுதிருக்கிறார் எட்டை 41 நாட்களில் 2190 வரிகள் இருக்கின்றது இதுவரை உலகத்தில் வெளிவராத புதிய செய்திகள் அடங்கியுள்ளது உலகம் போற்றும் செய்தியை மக்களுக்கு தெரியபடுத்தும் புனிதநூல் முடிபுகழ்ந்த அம்மானை ஆகும் சுவாமி கைலாசம் செல்வதை ஓரான்றுக்கு முன்னரே எழுதி வைத்தார்கள் 1913 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ம் நாள் உடலோடும் உயிரோடும் போய் சேர்ந்தார் 1913 ஆம் ஆண்டு 31 (ஆவணி16) சுவாமி கைலாசம் செல்வதை கேள்விபட்டு பல ஊர் மக்கள் மதகனேரியில் ஒன்று கூடினார்கள் சுவாமி மக்களை பார்த்து நான் கைலாசம் செல்கிறேன் என்றார் உடனே மனைவியும் உறவினர்களும் அழுதார்கள் அவர்களை பார்த்து நாட்டு மக்களைப போல் நீங்களும் எனவே கவலை படாதீர்கள் என்றார்.பண்டார நாடார் அவர்களின் தாயாரான திருமதி உடையம்மாள் அவர்களிடம் நிற்கிற மரத்தில் நெடிய மரம் போனால் நிற்கிற மரம் நெடிய மரம் என்று அருள்வாக்கு கொடுத்தார்கள்.அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து “நாட்டு மக்களையெல்லாம் நல்லா இருங்கள்” என்று வாழ்த்து கூறினார்.நான் எங்கே செல்கிறேன் என்று என்னைத் தேட வேண்டாம் .ஏடு எடுத்து பார்த்தால் நான் போகும் இடம் தெரியும் என்றார்.இதை கேட்ட உறவினர்கள் அவரைப் போக வேண்டாமென்று வீட்டின் கதவைப் பூட்டினார்கள்.கதவு தானகத் திறந்தது.அய்யா தேர் கொண்டு வந்திருக்கிறார் என்னைத் தேட வேண்டாம் என்று சொல்லிவிட்டு மாயமாய் மறைந்து விட்டார் இதைப் பார்த்த ஊர்மக்கள் அநேகர் 100 முதல் 125 வயது வரை வாழ்ந்தார்கள்.இவர்களுடைய பிள்ளைகள் இப்போதும் மதகனேரியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

by










மதகைபிரபு நாடார்

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...