இராவ் பகதூர் த.இரத்தினசாமி நாடார் [நாடார் மகாஜன சங்கத்தை உருவாக்கியவர்]



இராவ் பகதூர் த.இரத்தினசாமி நாடார் [நாடார் மகாஜன சங்கத்தை உருவாக்கியவர்] சீனந்தோப்பைப் பூர்வீகமாகக் கொண்ட வெ.தவசிமுத்து நாடாரின் புதல்வர் இவர். மாயவரத்திலிருந்து பொறையார் தரங்கம்பாடி வரை இரயில்வேப் பாதை அமைத்து ராஜஸ்தானி ,ஆந்திரா,கேரளா,மைசூர் வரை டிஸ்லரி தொழிலை அரசுக்கு இணையாக நடத்தி வந்தார்.இவருடைய சேவையையும் ஆற்றலையும் கண்ட வெள்ளையர் இவருக்கு ‘இராவ் பகதூர்’பட்டத்தை வழங்கிக் கொளரவித்தனர்.நாடார் சங்கங்களை ஒருங்கிணைத்து மகாஜனசங்கம் என்ற பெருமையுடன் 07.02.1910 இல்பொறையாரில் மாநில மாநாட்டைதமது சொந்தச் செலவில் நடத்தினார்.தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் சென்ற பிரதிநிதிகளுக்கு போக்குவரத்துச் செலவு முதல் உணவு தங்குமிடம் வரை ஏற்பாடு செய்தது பொறையார் குடும்பமே.முதல் நாடார் குல மாநாட்டை நடத்திப் பெருமை சேர்த்தவர். ஆறுமுகனேரி சீனந்தோப்பு குடும்பத்தினரின் சேவையை நன்றியுடன் நினைத்து மகாஜனசங்கத்தின் நிரந்தரத்தலைவராக இவர்கள் குடும்பத்தினர்களே இருந்து வர அந்நாளில் சட்டம் இயற்றிய பெருமை மிகு பெரியவர்.

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...