சான்றோனின் கடமை - Dr Anto George


சான்றோர் வீர தாய் தன் மகனைப் பற்றி பாடிய சங்க பாடலை கவனியுங்கள்.

#chera #chola #pandya #aay #nadar

இன்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் (கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை) சான்றோர் (இன்றைய நாடார்) எப்படி இருந்தார் என்பதை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள இப்பாடல் உதவும்.

புறநானூறு 312வது பாடலான பொன்முடியார் பாடிய பாடல் பின்வருமாறு.

"ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கிக்  
களிறு எறிந்து பெயர்தல், காளைக்குக் கடனே."

"Eenru purantarutal en talaik kaṭaṇē;
canron akkutal tantaikkuk kaṭaṇē;
vēl vaṭittuk koțuttal kollarkuk kaṭanē;
Nannațai nalkal vēntarkuk kaṭanē;
oliru vāl aruñcamam murukkik kaliru erintu peyartal, kāļaikkuk kaṭaṇē."

சான்றோர் வீர தாய் பாடிய பாடலின்  பொருளை காண்போம்

என் அன்பு மகனை பெற்று வளர்ப்பது என் தலையான கடமை.
அவரை ஒரு முழுமையான சான்றோராக (சாணாராக-நாடாராக) உருவாக்குவது அவரது தந்தையின் கடமை.
சான்றோனை நேர்வழியில் செலுத்துவது அரசனின் கடமை.
சான்றோனுக்கு ஏற்ற ஆயுதம் வடித்தல் கொல்லனின் கடமை,
இறுதியில், கடுமையான போர்களில் தனது மினுமினுப்பான வாளுடன் சென்று, எதிர்க்கும் படையின் யானகளைக் கொன்று, வெற்றி பெற்றுத் திரும்புவது வீரன் சான்றோனின் கடமை.

இதில் நாம் பல காரியங்கள் புரிந்து கொள்ள முடியும்

1. சான்றோர் (சாணார்-நாடார்) குடும்பங்களின் அரவணைப்பும் பரஸ்பர அன்பும் அன்றும் இன்றும் ஒன்றுதான்.

2. சான்றோர் குடும்பங்களில் தங்கள் குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோர்களால் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

3. சான்றோர்க்கு வழிகாட்டுவதும்  அரசனின் கடமை என்று பாடல் கூறுகிறது. அரசன் மற்றும் சான்றோன் இருவரும் உறவினர்கள் என்பது தெளிவாகிறது

4. சேர சோழ பாண்டிய ஆய் வம்சத்தினர் தங்கள் விரிவான யானைப் போருக்குப் பெயர் பெற்றவர்கள். சான்றோர் வீரர்கள்  போர் யானைகளைக்  வென்ற மாவீரர்கள் என்பதற்கு இப்பாடலே சான்றாகும்.

5. 2000 ஆண்டுகளுக்கு முன்பு சேர சோழ பாண்டிய ஆய் சாம்ராஜ்யங்களில் சான்றோர் (சாணார்-நாடார்) வம்சத்தினர் எவ்வாறு பெருமையுடன் வாழ்ந்தார்கள் என்பதற்கான தடயங்களும் நமக்குக் கிடைக்கின்றன.

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...