சான்றோர் குல அரசன் (நாடார்) ஆய் அண்டிரன்
சான்றோர் குலம் (தற்போதைய நாடார்) வழிவந்த ஆய் மன்னன் ஆய் அண்டிரனைக் குறிக்கும் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ்ச் சங்ககாலக் பாடலை அறிந்து கொள்ளலாம்.
புறநானூறு'(Purananuru)'
இது 400 பாடல்களை கொண்ட தமிழ்ச் சங்ககாலப் படைப்பு. இந்த பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட அரசனைப் பற்றி புலவர்களால் எழுதப்பட்டது.
இவற்றுள் 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 240, 241, 374, 375 ஆகிய பாடல்கள் ஆய் அரசன் அண்டிரன் பற்றி எழுதப்பட்டுள்ளன.
நீதிக்காக அறியப்பட்ட அவர், "கடை ஏழு வள்ளல்"களுள் ஒருவர்.
புறநானூறு 134வது செய்யுள்.
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்,
பிறரும் சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன்று அவன் கைவண்மையே
Im'maic ceytatu marumaikku ām enum aravilai vaṇikan a'ay allan, (((pirarum cănrōr))) cenra neriyena ankup paṭṭanru avan kaivaņmaiyē
மொழிபெயர்ப்பு பற்றி இங்கே படிக்கலாம் -
நியாய விலைக்கு வியாபாரம் செய்யும் வியாபாரியைப் போல, இந்த வாழ்க்கை நடத்தினால் அடுத்த ஜென்மம் சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்வன் ஆய் அரசன் அண்டிரன் இல்லை
மாறாக, மற்ற சான்றோர் களால் நடைமுறைப்படுத்தப்பட்ட நீதியின் பாதையில் கொடை வழங்குபவன் - ((பிறரும் சான்றோர்)) அவரது உதாரணம்.
"பிறரும் சான்றோர்" என்பதைக் கவனியுங்கள். மற்ற சான்றோர் என்று பொருள். ஆய் அண்டிரனைப் பற்றிக் புலவர் பாடும் போது, அவர் "பிறரும் சான்றோர்" போல ஆய் அரசன் அண்டிரன என்று கூறுகிறார் , இங்கு ஆய் அண்டிரனும் "சான்றோர்" என்று கூர்ந்து படிக்கும் போது புரிந்து கொள்ளலாம்.
ஆய் வம்சம் என்பது சேரர் மற்றும் பாண்டியரின் வேளிர் வம்சமாகும், அவை திருமண உறவுகள் உட்பட ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்புடையவை. யானை அவர்களின் அரச சின்னமாக இருந்தது.
சூரபுன்ன மரத்தின் பூ இந்த வம்சத்துடன் தொடர்புடையது. விழிஞ்சம் 6 - 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஆய் மன்னர்களின் தலைநகராக இருந்தது. முந்தைய தலைநகரம் அகஸ்தியமலைக்கு அருகில் உள்ள ஆய்குடி ஆகும் .
விழிஞ்சம் குடைவரைக் கோயில், மூஞ்சிற பார்த்திவசேகரபுரம் சாலை போன்ற நமக்குத் தெரிந்த பல கட்டமைப்புகள் இந்த வம்சத்தைச் சேர்ந்தவை.
மேற்கண்ட செய்யுளை ஆராய்ந்தால், அகஸ்தியமலைப் பள்ளத்தாக்கில் இருந்த சங்க கால ஆய் மன்னன் சான்றோரின் (நாடார்) வழிவந்த ஆய் அந்திரன் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment