சான்றோர் ,சான்றார் ( நன்றி - Rachinn Rachinn Rachinn)


சான்றோர் ,சான்றார் என்ற சொல்லின் பொருள் குறித்து அறிஞர் மயிலை சீனி. வெங்கடசாமி இன் கருத்தினை பார்த்தோம். சரி, இது குறித்து வேறு கல்வெட்டுகளில் சான்றுகளை பார்த்தால் அங்கும் தாராளமாக கிடைக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் ஜெகனாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கி. பி. 1374ஆம் ஆண்டு கல்வெட்டு இருக்கிறது. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில்" சான்றார்"என்ற சொல்லாட்சி இடம் பெற்றுள்ளது. இதில் பல்வேறு சாதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. வேளாளர்கள், செட்டியார், பிள்ளைகள், இடையர் மற்றும் கம்மாளர் ஆகிய சாதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இதில்" சான்றோர்"என்பதும் சாதி பெயராகவே இடம் பெற்றுள்ளது. 
1.செட்டியன் பெர் ஒன்றுக்கு பணம் ஒன்றும் தவசிகள் கைக்கொளர் மற்றுள்ளிட்ட (சா) திக்கு பெர் ஒன்றுக்கு பணம் ஒன்றும் வெள்ளான் பிள்ளை கள் இ ன(டயர்) கண்ணாளர் இவர்கனுள்ளி -
5.ட்ட சாதிக்கு பெர் ஒன்றுக்கு பணம் அரையும்" சான்றாருள்ளிட்ட " சாதிக்கு பெர் ஒன்றுக்கு பண(ம்*) என இடம் பெற்றுள்ளது. (SII.Vol.No 400;ARE, 1903,No:114).

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...