கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி


கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி:-


இவ் வேந்தன் கடைச்
சங்க நாளில் விளங்கிய பாண்டியர்களுள் ஒருவனாவன் இளம்
பருவத்திலேயே பேரறிவினனாக இருந்தமை பற்றி இவன் 'இளம்
பெருவழுதி' என்ற பெயர் பெற்றனன் போலும். 'கடலுண் மாய்ந்த
என்னும் அடைமொழிகளால் இவன் கடலிற் கலமிவர்ந்து சென்ற
போது அங்கு மூழ்கி யிறந்திருத்தல் வேண்டுமென்பது புலப்
படுகின்றது. இவன் தண்டமிழ்ப் புலமையிற் சிறந்த பெருந்தகை
மன்னனாவான். இவன் இயற்றிய இரண்டு பாடல்கள் பரி
பாடலிலும் புறநானூற்றிலும் உள்ளன. (பரிபாடல் 15. புற
கானூறு - 182). இவன் தான் இயற்றிய பரிபாடலில் சிலம்
பாற்றால் அழகு பெற்றுள்ள திருமாலிருஞ்சோலை மலையின் சிறம்.
பையும் அங்கு எழுந்தருளியிருக்கும் கண்ணபிரான், பலதேவன்
ஆகிய இருவரது பெருமையையும் நன்கு விளக்கியுள்ளான். இனி,
அக் குன்றம் திருமாலையொக்கும் என்றும், தன்னைக் கண்டோ
ஞடைய மயக்கத்தைப் போக்கும் பெருமையுடையதென்றும்,
ஆதலால் சென்றேனும் கண்டேனும் திசைநோக்கியேனும் அதனைக்
குடும்பத்துடன் வழிபடுமின் என்றும் உலகத்தாரை நோக்கி இவ்
வேந்தன் அப் பாடலில் கூறியிருத்தலும், அக் குன்றத்தின்
அடியின்கண் உறைதலே தான் எய்த விரும்புவது என்று முடித்
திருத்தலும் இவன் திருமாலிடத்துக் கொண்டிருந்த பேரன்பினை
இனிது புலப்படுத்தா நிற்கும். இவன் புறநானூற்றில் பாடியுள்ள
பொருண்மொழிக் காஞ்சி" இவனுடைய பேரறிவினையும் உள்ளக்.
இடக்கையினையும் தெள்ளிதி னுணர்த்தும் இயல்புடையதா யிருத்
தலின் அப் பாடலை ஈண்டுத் தருகின்றோம்:

"உண்டா லம்மஇவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமிய குண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப்
புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்விலர்
அன்ன மாட்சி யனைய ராகித்
தமக்கென முயலா நோன்றாட்
பிநர்க்கென முயலுந ருண்மை யானே."
(புறம் - 182)

1. பொருண்மொழிக் காஞ்சி என்பது உயிருக்கு இம்மை மறுமை


களில் உறுதி தருகிற பொருளை ஒருவனுக்குக் கூறுதல்.

2. இதன் பொருள்: உண்டேகாண், இவ்வுலகம்; இந்திரர்க்குரிய


அமிழ்தம் தெய்வத்தானாதல் தவத்தானாதல் தமக்கு வந்து கூடுவதாயினும்
அதனை இனிதென்றுகொண்டு தனித்து உண்டலுமிலர் ; யாரோடும்
வெறுப்பிலர்; பிறர் அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சி அது
நீர்த்தற்பொருட்டு மடிதிருத்தலுமிலர்; புகழ் புகழ் கிடைக்கின் தம்முடைய
உயிரையுங் கொடுப்பர்; பழியெனின் அதனான் உலகமுழுதும் பெறினும்
கொள்ளார்; மனக் கவற்சியில்லார்; அப் பெற்றித்தாகிய மாட்சிமைப்
பட்ட அத் தன்மையராகித் தமக்கென்று முயலாத வலிய முயற்சியை
யுடைய பீதர் பொருட்டென முயல்வார் உண்டாதலான் -என்பது

நன்றி- பாண்டியர் வரலாறு 


No comments:

Post a Comment

கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி

கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி:- இவ் வேந்தன் கடைச் சங்க நாளில் விளங்கிய பாண்டியர்களுள் ஒருவனாவன் இளம் பருவத்திலேயே பேரறிவினனாக இ...