பொற்கைப் பாண்டியன்




பொற்கைப் பாண்டியன் :-
 இவன் கடைச்சங்க நாளில் விளங்கிய பாண்டியருள் ஒருவன். கண்ணகிமுன் தோன்றிய மதுரைமாதெய்வம் பாண்டியர்களது செங்கோற் பெருமையை அவளுக் குணர்த்துங்கால், இவன் செய்தியையும் எடுத்துரைத்துப் புகழ்ந்துள்ளது. அவ் வரலாறு அடியில் வருமாறு:

ஒருநாள். கீரந்தை என்னும் வேதியனொருவன் தன் மனைவியை மன்றத்தின்கண் இருத்தி, அரசனது செங்கோல் அவளைக் காக்கும் என்று கூறிவிட்டு, வெளியே சென்றனன். மற்றொருநாள் அவன் தன் இல்லாளுடன் மனையகத் திருக்குங்கால், பாண்டிய அரசன் ஒருவன் கதவைப் புடைத்தனன். உடனே அம் மறையோன் தன் மனைவிபால் ஐயமுற்று அவளை நோக்க, அதனை யுணர்ந்த அவ் வங்கை 'முன்னொரு நாள் அரசனது செங்கோல் என்னைக் காக்கும் என்று கூறி, மன்றத்திருத்திச் சென்றீர்களே; இன்று அச் செய் கோல் காவாதோ?' என் றுரைத்தனள். அதனைப் புறத்தே கேட்டுக் கொண்டு கின்ற அரசன், தன் செய்கைக்குப் பெரிதும் வருந்தி, விரைவில் அரண்மனைக்குச் சென்று அது தனக்குத் தகவன்று என்றெண்ணித் தன் செய்கைக்குத் தானே சான்றாகி, வாளால் தன் கையைக் குறைத்துக்கொண்டனன்; பிறகு பொன்னாற் பொய்க்கை யமைத்துக்கொண்டு, பாண்டியநாட்டை ஆட்சி புரிந்து வந்தான். இது பற்றியே, இவன் பொற்கைப் பாண்டியன் என்று வழங்கப் பெற்றான்.

நன்றி - பாண்டியர் வரலாறு 

No comments:

Post a Comment

பொற்கைப் பாண்டியன்

பொற்கைப் பாண்டியன் :-  இவன் கடைச்சங்க நாளில் விளங்கிய பாண்டியருள் ஒருவன். கண்ணகிமுன் தோன்றிய மதுரைமாதெய்வம் பாண்டியர்களது செங்கோ...